ஒரு Google கோப்பு அல்லது கோப்புறையைத் திறக்க முடியவில்லை


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

ஒரு ஃபைல் திறக்கவில்லை எனில் சில விஷயங்கள் தவறாக இருக்கலாம்:

  • ஃபைலைத் திறக்க ஃபைலின் உரிமையாளர் உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
  • நீங்கள் வேறொரு Google கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள்.
  • ஃபைலை அணுகுவதற்கான உங்கள் அனுமதியை யாரோ அகற்றியுள்ளார்கள்.

ஃபைலைத் திறக்க அனுமதி பெறுதல்

  1. ஃபைலைத் திறக்கவும்.
  2. "உங்களுக்கு அனுமதி தேவை" பக்கத்தின் மீது அணுகல் கோரிக்கை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கோப்பின் உரிமையாளருக்கு அனுமதி கோரும் மின்னஞ்சல் அனுப்பப்படும். உங்கள் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்ட பிறகு, அதுகுறித்து ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.

உதவிக்குறிப்பு: உடனடியாக அணுகல் தேவைப்பட்டால் ஃபைலின் உரிமையாளரைத் தொடர்புகொண்டு அணுகல் வழங்குமாறு கேட்கவும்.

வேறொரு Google கணக்கைப் பயன்படுத்துதல்

உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட Google கணக்குகள் இருந்தால் வேறொரு கணக்கு மூலமாக ஃபைலை அணுக முடிகிறதா என்று பாருங்கள்.

வேறோரு கணக்கிற்கு மாற:

  1. ஃபைலைத் திறக்கவும்.
  2. "உங்களுக்கு அனுமதி தேவை" பக்கத்தில், கணக்குகளை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வேறொரு Google கணக்கு மூலம் உள்நுழைந்து ஃபைலைத் திறக்க முடிகிறதா என்று பார்க்கவும்.

கூடுதல் உதவி பெறுக

ஃபைலையோ ஃபோல்டரையோ இன்னும் திறக்க முடியவில்லை எனில் Google Drive மன்றத்தில் உள்ள பதில்களைப் பார்க்கவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6959775972368943711
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false