Google Sheetsஸில் அணிவரிசைகளைப் பயன்படுத்துதல்

அணிவரிசை என்பது மதிப்புகளைக் கொண்ட டேபிள் (வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை உள்ளடக்கிய) ஆகும். குறிப்பிட்ட வரிசையில் கலங்களில் உள்ள மதிப்புகளைக் குழுவாக்க விரும்பினால் விரிதாளில் அணிவரிசைகளைப் பயன்படுத்த முடியும்.

அணிவரிசைகளை வழங்கும் சில சார்புகள். உதாரணமாக IMPORTRANGE என்ற சார்பு மற்றொரு விரிதாளில் குறிப்பிடப்பட்ட வரம்பை இறக்குவதன் மூலம் அணிவரிசையை வழங்கும். IMPORTRANGE சார்பைப் பயன்படுத்தி சூத்திரத்தை எழுதும்போது கலங்களில் வலதுபுறத்திலும் கீழ்ப்புறத்திலும் அதன் அணிவரிசை முடிவு வழங்கப்படுவதைப் பார்ப்பீர்கள்.

உள்ளிடும் அளவுருவாக வரம்பை (எ.கா. A1:B6) எடுத்துக்கொள்ளும் எந்தவொரு சார்பும் தான் அமைந்திருக்கும் இடத்தில் அணிவரிசையை ஏற்கும். உதாரணமாக அமைப்பதற்கான மதிப்புகளைக் குறிப்பிடுவதற்கு SPARKLINE சார்பு வரம்பை முதல் அளவுருவாக எடுத்துக்கொள்ளும். IMPORTRANGEன் அணிவரிசை முடிவை SPARKLINEனின் உள்ளீடாகப் பயன்படுத்த முடியும்.

=SPARKLINE(IMPORTRANGE(...))

அணிவரிசையை உருவாக்குதல்

{ } என்ற அடைப்புக்குறிகளைப் பயன்படுத்துவதன் மூலம் சூத்திரத்தில் அணிவரிசையை சுயமாகவும் உருவாக்க முடியும். அணிவரிசையில் எந்த வரிசைப்படி மதிப்புகள் காட்டப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க பின்வரும் நிறுத்தற்குறியைப் பயன்படுத்தும் அதேவேளையில் மதிப்புகளை ஒன்றாகக் குழுவாக்க அடைப்புக்குறிகள் அனுமதிக்கின்றன:

  • காற்புள்ளிகள்: அணிவரிசையில் தரவைக் கொண்ட வரிசையை எழுத உதவுவதற்கு நெடுவரிசைகளைப் பிரிக்கும். உதாரணமாக முதல் கலத்தில் எண் 1ஐயும் வலதுபுறத்தில் புதிய நெடுவரிசையில் எண் 2ஐயும் ={1, 2} உள்ளிடும்.
  • அரைப்புள்ளிகள்: அணிவரிசையில் தரவைக் கொண்ட நெடுவரிசையை எழுத உதவுவதற்கு வரிசைகளைப் பிரிக்கும். உதாரணமாக முதல் கலத்தில் எண் 1ஐயும் கீழே புதிய வரிசையில் எண் 2ஐயும் ={1, 2} உள்ளிடும்.

கவனத்திற்கு: காற்புள்ளிகளை தசமப் பிரிப்பான்களாகப் பயன்படுத்தும் நாடுகளில் (உதாரணம்: €1,00) அணிவரிசைகளை உருவாக்கும்போது காற்புள்ளிகள் பின்சாய்வுக்கோடுகளாக (\) மாற்றப்படும்.

இதே நிறுத்தற்குறியைப் பயன்படுத்தி தொடர்ச்சியான ஒரே வரம்பில் பல வரம்புகளைச் சேர்க்க முடியும். உதாரணமாக A1-A10ல் உள்ள மதிப்புகளை D1-D10ல் உள்ள மதிப்புகளுடன் ஒன்றிணைப்பதற்காக தொடர்ச்சியான நெடுவரிசையில் வரம்பை உருவாக்க பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்த முடியும் : ={A1:A10; D1:D10}

ஏற்கெனவே உள்ள சூத்திரங்களில் அணிவரிசைகளைச் சேர்த்தல்

சூத்திரங்களில் இருந்து பெறும் மதிப்புகளை வரிசைகளாகவும் நெடுவரிசைகளாகவும் ஒருங்கமைப்பதற்காக அடைப்புக்குறிகளைப் பயன்படுத்தி ஏற்கெனவே உள்ள பிற சூத்திரங்களில் அணிவரிசையைப் பயன்படுத்தவும் முடியும்.

உதாரணமாக ={SUM(A1:A10), SUM(B1:B10)} என்ற சூத்திரம் இரண்டு மதிப்புகளை வழங்கும். முதல் கலம் A1-A10ன் கூட்டுத்தொகையைக் கொண்டிருக்கும். வலதுபுறத்தில் உள்ள கலம் B1-B10ன் கூத்துதொகையைக் கொண்டிருக்கும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17614324408619239440
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false