ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ மேலும் அணுகக்கூடியதாக உருவாக்குதல்

ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ உருவாக்கும்போது திறனாளிகள் உட்பட எல்லோராலும் நன்கு படிக்கக்கூடிய வகையில் அதை உருவாக்குவதற்கு கீழே உள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.

மாற்று உரையைச் சேர்த்தல்

படங்கள், வரைபடங்கள் அல்லது பிற கிராஃபிக்குகளுக்கு மாற்று உரையைச் சேர்க்கவும். இல்லையெனில் ஸ்க்ரீன் ரீடர் பயனர்கள் "படம்" என்பதை மட்டுமே கேட்பார்கள். சில படங்கள் மாற்று உரையைத் தானாகவே உள்ளடக்கியிருக்கும் என்பதால் நீங்கள் சேர்க்க விரும்பியது இந்தத் தானியங்கு மாற்று உரையைதானா என்பதைச் சரிபார்த்துக்கொள்வது நல்லது.

மாற்று உரையைச் சேர்த்தல் அல்லது திருத்துதல்

  1. படம், வரைபடம் அல்லது கிராஃபிக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. அதன் பிறகு மாற்று உரை வலது கிளிக் செய்யவும்.
  3. தலைப்பையும் விளக்கத்தையும் உள்ளிடவும்.
  4. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

தரவிற்காக டேபிளைப் பயன்படுத்துதல்

தரவை வழங்குவதற்காக டேபிள்களைப் பயன்படுத்தவும். பக்கத்தின் விஷுவல் தளவமைப்பை மாற்றுவதற்காக அல்ல. டேபிளில் தலைப்பு வரிசையைச் சேர்ப்பதன் (முதல் வரிசையில் உள்ள தரவுடன் தொடங்குவதற்குப் பதிலாக) மூலம் ஸ்க்ரீன் ரீடர்கள் தானாகவே முதல் வரிசையை தலைப்பாகப் படிப்பார்கள். 

கருத்துகளையும் பரிந்துரைகளையும் பயன்படுத்துதல்

ஆவணத்தின் அல்லது விளக்கக்காட்சியின் உரைக்குள் குறிப்புகளை எழுதுவதற்குப் பதிலாக கருத்திடுதல் மற்றும் பரிந்துரைத்தல் அம்சங்களைப் பயன்படுத்தவும். உங்கள் கோப்பில் தேடுவதற்குப் பதிலாக கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பயன்படுத்தி ஸ்க்ரீன் ரீடர் பயனர்களால் கருத்துகளுக்குச் செல்ல முடியும். கோப்பின் உரிமையாளரும் மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பெறவோ கருத்துத் தொடரிழைகளை மதிப்பாய்வு செய்யவோ முடியும்.

அதிக ஒளி மாறுபாட்டில் உள்ளதா என்பதைப் பார்த்தல்

அதிக ஒளி மாற்றத்தின் மூலம் உரை மற்றும் படங்களை எளிமையாகப் படிக்கலாம் புரிந்துகொள்ளலாம். பெரிய உரைக்கு 4.5:1 என்ற குறைந்தபட்ச விகிதத்தையும் பிற உரை மற்றும் படங்களுக்கு 7:1 என்ற விகிதத்தையும் இணைய உள்ளடக்க அணுகலம்சத்திற்கான வழிகாட்டுதல்கள் (WCAG) 2.0 பரிந்துரைக்கிறது. உதாரணமாக வெள்ளை நிறப் பின்னணியில் வெளிர் சாம்பல் நிற உரையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

ஒளி மாறுபாட்டைச் சரிபார்க்க WebAIM ஒளி மாறுபாட்டுச் சரிபார்ப்பானைப் பயன்படுத்தவும்.

தகவலைக் கொண்ட இணைப்பு உரையைப் பயன்படுத்துதல்

ஸ்க்ரீன் ரீடர்களால் இணைப்புகளை ஸ்கேன் செய்ய முடியும் என்பதால் தகவலைக் கொண்ட இணைப்பு உரை உதவிகரமாக இருக்கும். பக்கத்தின் தலைப்பை இணைப்பு உரையாகப் பயன்படுத்துவது சிறந்தது. உதாரணமாக சுயவிவரப் பக்கத்தை இணைக்கிறீர்கள் எனில் அந்த இணைப்பு "எனது சுயவிவரம்" எனக் காட்டப்பட வேண்டுமே தவிர "இங்கே கிளிக் செய்க" என்றோ முழு URLலாகவோ இருக்கக்கூடாது.

உரையின் அளவையும் சீரமைப்பையும் சரிபார்த்தல்

எளிமையாகப் படிக்கும் வகையில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ உருவாக்க பெரிய இடதுபுறமாகச் சீரமைக்கப்பட்ட உரையை சாத்தியமுள்ள இடங்களில் பயன்படுத்தவும். நடுநிலையில் அமைக்கப்பட்ட உரையில் சொற்களுக்கு நடுவே கூடுதல் இடைவெளி இருப்பதால் அதைப் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். சீரமைப்பை மாற்ற Ctrl + Shift + L (Windows அல்லது Chrome OS) அல்லது ⌘ + Shift + L (Mac) என்ற விசைகளை அழுத்தவும்.

வடிவமைப்பிற்கு உதவ உரையைப் பயன்படுத்துதல்

அர்த்தத்தைத் தெரியப்படுத்த தனிப்பட்ட முறையில் விஷுவல் வடிவமைப்பைச் சாராமல் இருப்பது சிறந்தது. போல்ட்ஃபேஸ், ஹைலைட்டிங் போன்ற வடிவமைப்பு மாற்றங்களை ஸ்க்ரீன் ரீடர்களை வெளியிடாமல் போகக்கூடும்.

உதாரணமாக உரையின் முக்கியமான பிரிவைக் குறிக்க "முக்கியமானவை" என்ற வார்த்தையைச் சேர்க்கவும்.

எண்ணிடப்பட்ட மற்றும் பொட்டுகுறியிடப்பட்ட பட்டியல்களைப் பயன்படுத்துதல்

Google Docs, Google Slides ஆகியவை அணுகலம்சத்திற்கான சில பட்டியல்களைத் தானாகவே கண்டறிந்து வடிவமைக்கும். உதாரணமாக ஆவணத்தில் ஒரு புதிய வரியை 1 என எண்ணை உள்ளிட்டு தொடங்கினால் அதைத் தொடர்ந்து வரும் அடுத்த புதிய வரியும் தானாகவே எண்ணிடப்பட்டு தொடங்கும். பொட்டுக்குறியிடப்பட்ட மற்றும் எண்ணிடப்பட்ட பட்டியல்களை வடிவமைப்பது எவ்வாறு என்பதை அறிக.

ஆவணத்தை ஒருங்கமைக்க தலைப்பைப் பயன்படுத்துதல்

தலைப்புகள் ஆவணத்தைப் பிரிவுகளாகப் பிரித்து பயனர்கள் (குறிப்பாக அவர்கள் கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பயன்படுத்தினால்) பிரிவிற்கு நேரடியாகச் செல்லும் வகையில் அதை எளிமையாக்குகிறது. இயல்பு தலைப்பு நடைகளையோ சுயமாகப் பயன்படுத்தப்பட்ட ஒன்றையோ பயன்படுத்த முடியும். தலைப்புகளைச் சேர்த்து பிரத்தியேகமாக்குவது எவ்வாறு என்பதை அறிக.

வழிகாட்டும் இட அடையாளங்களை ஆவணத்தில் சேர்த்தல்

ஸ்க்ரீன் ரீடர்கள் தாங்கள் எங்கு உள்ளனர் என்பதைக் கண்டறிய ஆவணத்தில் உள்ள மேற்குறிப்புகள், அடிக்குறிப்புகள், பக்க எண்கள், பக்க எண்ணிக்கைகள் போன்ற இட அடையாளங்கள் உதவுகின்றன. அணுகலம்சத்தைப் பெரிதாக்க (குறிப்பாக பெரிய ஆவணங்களில்) இந்த இட அடையாளங்களில் ('செருகு' என்ற மெனுவில் உள்ள) ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டவற்றைச் சேர்க்கவும்.

தலைப்புகளுடன் ஸ்லைடுகளை வழங்குதல்

Google Slides மூலம் வழங்கும்போது ஸ்பீக்கர்கள் கூறும் வார்த்தைகளைத் திரையின் கீழே நிகழ்நேரத்தில் காட்ட தானியங்குத் தலைப்புகளை இயக்க முடியும். தலைப்புகளுடன் ஸ்லைடுகளை வழங்குவது எவ்வாறு என்பதை அறிக.

HTML காட்சியில் விளக்கக்காட்சியைப் பகிர்தல்

விளக்கக்காட்சியை ஒவ்வொரு ஸ்லைடாகக் காட்டுவதற்குப் பதிலாக Google Slidesஸின் HTML காட்சி ஒட்டுமொத்த விளக்கக்காட்சியையும் ஒரே நேரத்தில் காட்டும். ஸ்க்ரீன் ரீடர்களைப் பயன்படுத்தும் பார்வையாளர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்.

HTML காட்சியில் விளக்கக்காட்சியை அணுக Ctrl + Alt + Shift + p (Windows அல்லது Chrome OS) or ⌘ + Option + Shift + p (Mac) என்ற கீபோர்ட் விசைகளைப் பயன்படுத்தவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?
இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?