போக்குக்கோட்டைச் சேர்த்தல் & திருத்துதல்

டிரெண்ட்லைனைச் சேர்த்தல்

உங்கள் விளக்கப்படங்களில் பேட்டர்ன்களைப் பார்க்க டிரெண்ட்லைன்களைச் சேர்க்கலாம்.

டிரெண்ட்லைன்களை உருவாக்கும்முன்: பட்டி, வரி, நெடுவரிசை அல்லது சிதறல் விளக்கப்படங்களில் டிரெண்ட்லைன்களைச் சேர்க்கலாம்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. விளக்கப்படத்தை இருமுறை கிளிக் செய்யவும்.
  3. வலதுபக்கத்தில் பிரத்தியேகமாக்கு அதன் பிறகு தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "இதற்குப் பயன்படுத்து" என்பதற்கு அருகில், டிரெண்ட்லைனைச் சேர்க்க விரும்பும் தரவுத் தொடரைத் தேர்வு செய்யவும்.
  5. டிரெண்ட்லைன் என்பதைக் கிளிக் செய்யவும். இந்த விருப்பம் இல்லையெனில் உங்கள் தரவில் டிரெண்ட்லைன்கள் வேலை செய்யாது.
டிரெண்ட்லைனில் மாற்றங்களைச் செய்தல்
  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. விளக்கப்படத்தை இருமுறை கிளிக் செய்யவும்.
  3. வலதுபக்கத்தில் பிரத்தியேகமாக்கு அதன் பிறகு தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "இதற்குப் பயன்படுத்து" என்பதற்கு அருகில், டிரெண்ட்லைனைச் சேர்க்க விரும்பும் தரவுத் தொடரைத் தேர்வு செய்யவும்.
  5. "டிரெண்ட்லைன்" என்பதற்குக் கீழ் இவற்றைத் திருத்தலாம்:
    • டிரெண்ட்லைன் வகைகள்.
    • வரியின் வண்ணம், ஒளி ஊடுருவும் தன்மை அல்லது தடிமன்.
    • லேபிள்கள்.
    • R வர்க்கம். தரவுடன் டிரெண்ட்லைன் எந்தளவிற்குப் பொருந்துகிறது என்பதை இது காட்டும். R^2 = 1 என்ற மதிப்பிற்கு எந்தளவிற்கு நெருக்கமாக இருக்கிறதோ அந்தளவிற்குப் பொருந்தும். லெஜண்டைச் சேர்த்தால் மட்டுமே இது இருக்கும்.
    • பல்லுறுப்புக்கோவை டிகிரிகள். இது பல்லுறுப்புக்கோவை டிரெண்ட்லைன்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
    • சராசரி வகைகள். நகரும் சராசரி டிரெண்ட்லைன்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்.
    • காலக்கட்டங்கள். நகரும் சராசரி டிரெண்ட்லைன்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்.
பயன்படுத்துவதற்கான டிரெண்ட்லைன்களும் சமன்பாடுகளும்
  • நேரியல்: நேர்க்கோட்டை நெருக்கமாகப் பின்தொடரும் தரவிற்கானது.
  • டிரெண்ட்லைன் சமன்பாடு: y = mx+b.
  • அடுக்கு: அதன் தற்போதைய மதிப்பிற்கு நேர்விகிதத்தில் உயரும், குறையும் தரவிற்கானது.
  • டிரெண்ட்லைன் சமன்பாடு: y = A*e^(Bx).
  • பல்லுறுப்புக்கோவை: மாறக்கூடிய தரவிற்கானது.
  • டிரெண்ட்லைன் சமன்பாடு: ax^n + bx^(n-1) + … + zx^0.
  • மடக்கை: வேகமான விகிதத்தில் உயர்ந்து அல்லது குறைந்து, பிறகு சீராகும் தரவிற்கானது.
  • டிரெண்ட்லைன் சமன்பாடு: y = A*ln(x) + B.
  • அடுக்கு வரிசை: அதன் தற்போதைய மதிப்பிற்கு நேர்விகிதத்தில் ஒரே விகிதத்தில் உயரும் அல்லது குறையும் தரவிற்கானது.
  • டிரெண்ட்லைன் சமன்பாடு: y = A*x^b.
  • நகரும் சராசரி: நிலையாக இல்லாத அல்லது அதிகமாக மாறக்கூடிய தரவைச் சீராக்க உதவும்.

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14350612351618060202
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false