ஸ்க்ரீன் ரீடருடன் வரைபடங்களைத் திருத்துதல்

ஸ்க்ரீன் ரீடரைப் பயன்படுத்தி, உங்கள் கம்ப்யூட்டரில் வரைபடங்களைத் திருத்தலாம்.

குறிப்பு: கீழேயுள்ள படிகளைப் பின்பற்றுவதற்கு முன், Docs ஸ்க்ரீன் ரீடர் உதவியை இயக்கியுள்ளதை உறுதிப்படுத்தவும்.

கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

உங்கள் வரைபடத்தில் ஷார்ட்கட் பட்டியலைத் திறக்க, Ctrl + / (Windows, Chrome OS) அல்லது ⌘ + / (Mac) என்பதை அழுத்தவும். செருகு அல்லது அளவு மாற்று போன்ற செயல்களைத் தேடலாம். உங்கள் வரைபடத்திற்குத் திரும்ப, Escape என்பதை அழுத்தவும்.

மெனுக்களில் தேடுவதன் மூலம் விரைவாகச் செயல்படுதல்

  1. Alt + / (Windows, Chrome OS) அல்லது Option + / (Mac) என்பதை அழுத்தவும்.
  2. பெயர் மாற்று அல்லது செருகு போன்ற கட்டளைகளை உள்ளிடவும். 
  3. தேடல் முடிவுகளைக் கேட்க, கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும். எடுத்துக்காட்டாக, செருகு என்பதை உள்ளிடும் போது, படத்தைச் சேர்த்தல், கருத்து மற்றும் பிற விருப்பத்தேர்வுகளும் விருப்பங்களில் அடங்கும். 
  4. ஒரு செயலைத் தேர்ந்தெடுக்க, Enter என்பதை அழுத்தவும்.

மெனுக்கள், முதல் நிலை பட்டன்கள் மற்றும் கருவிப்பட்டியைப் பயன்படுத்துதல்

குறிப்பு: மேலே பட்டன்கள் மற்றும் மெனுக்கள் இல்லையெனில், Ctrl + Shift + f (Windows, Chrome OS அல்லது Mac) என்பதை அழுத்தவும்.

மெனுக்களை உலாவ:

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி, கோப்பு மெனுவைத் திறக்கவும்:
    • Windows இன் Chrome உலாவியில்: Alt + f
    • Windows இன் பிற உலாவிகளில்: Alt + Shift + f
    • Chrome OS: Alt + f
    • Mac: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி, பிறகு Ctrl + Option + f என்பதை அழுத்தவும்
  2. திருத்து, காட்டு, செருகு, வடிவமை, வரிசைப்படுத்து, கருவிகள், அட்டவணை, உதவி, அணுகல்தன்மை உள்ளிட்ட பிற மெனுக்களை ஆய்வு செய்ய, வலது அம்புக்குறியை அழுத்தவும்.

உதவிக்குறிப்பு: உதவி பெற, உதவி மெனுவைத் திறந்து, இதன்மூலம் உதவியைப் பெறுக என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தேடல் பெட்டிக்குச் செல்ல Tab என்பதை அழுத்தி, பிறகுபடங்கள் போன்றவற்றை, தேடலில் உள்ளிட்டு, பின் Enter என்பதை அழுத்தவும். நீங்கள் வாசிக்கவோ அல்லது பிற தலைப்புகளுக்குச் செல்லவோ கூடிய பெட்டியில் உதவி திறக்கும். வரைபடத்திற்குத் திரும்ப, Escape என்பதை அழுத்தவும்.

மெனுக்களில் இருந்து, கட்டுப்பாடுகளின் இரு வேறு அமைப்புகளுக்கு நகரலாம்:

  • முதல் நிலை பட்டன்கள்: இந்த பட்டன்கள் பெயர் மாற்றுதல், நட்சத்திரமிடல், பகிர்தல், அல்லது வரைபடத்தை வேறு கோப்புறைக்கு நகர்த்தல் போன்ற வரைபட நிலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆகும். மெனுக்களில் இருந்து, Shift + Tab என்பதை அழுத்தவும்.
  • கருவிப்பட்டி: கருவிப்பட்டியானது வண்ணங்கள் மற்றும் பார்டர்கள் போன்ற திருத்துதல் மற்றும் வடிவமைத்தல் விருப்பங்களைக் கொண்டிருக்கும். மெனுக்களில் இருந்து, Tab என்பதை அழுத்தவும்.

அணுகல்தன்மை மெனுவைப் பயன்படுத்தி, உங்கள் வரைபடத்தை படித்தல் அல்லது நகர்த்துதல்

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி, அணுகல்தன்மை மெனுவைத் திறக்கவும்:
    • Windows இன் Chrome உலாவியில்: Alt + a
    • Windows இன் பிற உலாவிகளில்: Alt + Shift + a
    • Chrome OS: Alt + a
    • Mac: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி, பிறகு Ctrl + Option + a  என்பதை அழுத்தவும்
  2. பேசு, கருத்துகள் மற்றும் பல தேடல் விருப்பங்களைக் கேட்க, கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  3. கீழ்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தி, துணை மெனுவைத் திறந்து, துணை மெனுவில் இருக்கும் விருப்பங்களை ஆய்வு செய்ய, கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  4. விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க, Enter என்பதை அழுத்தவும்.

திருத்துதல் மற்றும் வடிவமைத்தல் அடிப்படைகள்

உங்கள் வரைபடத்தில், உள்ளடக்கம் மற்றும் வடிவமைத்தலைச் சேர்க்கலாம் அல்லது மாற்றலாம்.

உரைப் பெட்டி, வடிவம் அல்லது படத்தைச் சேர்த்தல்

  1. மெனுக்களில் தேட, Alt + / (Windows, Chrome OS) அல்லது Option + / (Mac) என்பதை அழுத்தவும்.
  2. சேர்க்கக்கூடிய ஆவணங்களின் பட்டியலைப் பெற, செருகு என உள்ளிடவும்.
  3. பட்டியலை ஆய்வு செய்ய, அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்.
  4. தேர்வு செய்ய, Enter என்பதை அழுத்தவும்.

வடிவமைத்தலை மாற்றுதல்

நீங்கள் பயன்படுத்தக் கூடிய வடிவமைப்பு நடைகளை ஆய்வு செய்ய, மெனு பட்டியில் உள்ள வடிவமைப்பு மெனுவைத் திறக்கவும்:

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி, வடிவமைப்பு மெனுவைத் திறக்கவும்:
    • Windows இன் Chrome உலாவியில்: Alt + o
    • Windows இன் பிற உலாவிகளில்: Alt + Shift + o 
    • Chrome OS: Alt + o
    • Mac: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி, பிறகு Ctrl + Option + o  என்பதை அழுத்தவும்
  2. கீழ்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தி விருப்பங்களைக் கேட்டு, பிறகு தேர்ந்தெடுக்க, Enter என்பதை அழுத்தவும்.

மாற்று உரையைச் சேர்த்தல்

  1. வரைபடத்தில் உள்ள ஆப்ஜெக்ட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. Ctrl + Alt + y (Windows, Chrome OS) அல்லது ⌘ + Option + y (Mac) என்பதை அழுத்தவும்.
  3. மாற்று உரை உரையாடலில், படம் அல்லது வரைபடத்திற்காக, விளக்கத்தை உள்ளிடவும், பிறகு Enter என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3791124123665536027
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false