Google Docs, Sheets, Slides, Drawings ஆகியவற்றில் பிரெய்ல் காட்சியைப் பயன்படுத்துதல்

Google Docs, Sheets, Slides, Drawings ஆகியவற்றில் ஃபைல்களைப் படிக்கவும் திருத்தவும் பிரெய்ல் காட்சியைப் பயன்படுத்தலாம்.

பரிந்துரைக்கப்படும் உலாவியும் ஸ்கிரீன் ரீடர்களும்

Chrome உலாவியையும் இவற்றையும் டாக்ஸ் எடிட்டர் பரிந்துரைக்கிறது:

  • Windowsஸில் NVDA அல்லது JAWS
  • ChromeOSஸில் ChromeVox
  • MacOSஸில் VoiceOver

பிரெய்ல் ஆதரவை இயக்குதல்

  1. கம்ப்யூட்டரில் ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது வரைபடத்தைத் திறக்கவும்.
  2. கருவிகள் மெனுவில் அணுகல்தன்மை அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பிரெய்ல் வசதியை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உதவிக்குறிப்பு: ஷார்ட்கட்களையும் பயன்படுத்தலாம்:

  • Windows/Chrome OSஸில்: Ctrl + Alt + h
  • Mac: ⌘ + Option + h

பிரெய்ல் ஆதரவுடன் ஃபைல்களைப் பயன்படுத்துதல்

பிரெய்ல் வசதியை இயக்கியபிறகு இந்த மேம்பாடுகள் காணப்படும்:

  • கர்சரை நகர்த்த, பிரெய்ல் டிஸ்ப்ளேயில் 'கர்சர் ரூட்டிங் பட்டன்களைப்' பயன்படுத்தலாம்.
  • வழக்கமாகப் பயன்படுத்தும் பெரும்பாலான ஸ்கிரீன் ரீடர் ஷார்ட்கட்களை கீபோர்டு ஷார்ட்கட்களுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
  • டைப் செய்பவற்றைக் கூறும் விரைவு ஸ்கிரீன் ரீடர்.
  • எழுத்து மூலம் செல்லும்போது, செல்வதைக் கையாள்வதற்கான விரைவு ஸ்கிரீன் ரீடர்.
  • நிறுத்தக்குறிகள், இடைவெளி ஆகியவற்றை இன்னும் தெளிவாகத் தெரிவிக்கும் ஸ்கிரீன் ரீடர் அறிவிப்புகள்.
  • நீங்கள் டைப் செய்யும்போது எப்போதும் எழுத்துகளை மட்டும் வாசிப்பதற்குப் பதிலாக ஸ்கிரீன் ரீடர் அதன் அமைப்புகளைப் பயன்படுத்தி எழுத்துகளையும் வார்த்தைகளையும் வாசிக்கும்.

பிரெய்ல் வசதியை முடக்குதல்

  1. கம்ப்யூட்டரில் ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது வரைபடத்தைத் திறக்கவும்.
  2. கருவிகள் மெனுவில் அணுகல்தன்மை அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பிரெய்ல் ஆதரவை இயக்கு என்பதைத் தேர்வு நீக்கவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13579914704417259194
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false