விரிதாளின் இருப்பிடத்தையும் கணக்கீட்டு அமைப்புகளையும் அமைத்தல்

Google Sheetsஸில் விரிதாளின் மொழி, நேர மண்டலம், கணக்கீட்டு அமைப்புகள், செயல்பாடுகளின் மொழி ஆகியவற்றை மாற்றலாம்.

ஏதேனும் மாற்றம் செய்யும்போது அது விரிதாள் முழுவதும் செயல்படுத்தப்படும். அதில் பணியாற்றும் அனைவரும் எங்கிருந்தாலும் அதன் மாற்றங்களைப் பார்ப்பார்கள்.

மொழியையும் நேர மண்டலத்தையும் மாற்றுதல்

விரிதாளின் மொழியையும் நேர மண்டலத்தையும் மாற்றினால் விரிதாளின் இயல்புநிலை நாணயம், தேதி, எண் வடிவமைப்பு ஆகியவை மாற்றப்படும்.

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் விரிதாளைத் திறக்கவும்.
  2. ஃபைல் அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அமைப்புகளை மாற்ற, "பொது" என்பதற்குக் கீழே உள்ள "மொழி", "நேர மண்டலம்" ஆகிய மெனுக்களைக் கிளிக் செய்யவும்.
  4. அமைப்புகளைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொழியை மாற்றுவதால் Google Sheetsஸில் உங்கள் மொழி அமைப்புகள் மாற்றப்படாது. Google கணக்கு அமைப்புகளில் மொழியை அமைக்கலாம்.

செயல்பாடுகளுக்கான மொழியை மாற்றுதல்

Google Sheets செயல்பாடுகளின் மொழியை ஆங்கிலம் மற்றும் 21 பிற மொழிகளுக்கு மாற்றலாம்.

  1. Google கணக்கு அமைப்புகளில் ஆங்கிலமல்லாத மொழியை அமைத்திருப்பதை உறுதிசெய்யவும்.
  2. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் விரிதாளைத் திறக்கவும்.
  3. ஃபைல் அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் அமைக்கும் மொழியில் ஃபங்க்ஷன்களைப் பார்க்க, "காட்சி மொழி" என்பதன் கீழே "ஃபங்க்ஷனின் பெயர்களை எப்போதும் ஆங்கிலத்திலேயே பயன்படுத்து” என்பதைத் தேர்வுநீக்கவும்.
  5. அமைப்புகளைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொழி விருப்பங்கள்

இந்த மொழியில் உள்ள செயல்பாடுகள் Google Sheetsஸில் ஆதரிக்கப்படும்:

  • செக்
  • டேனிஷ்
  • டச்சு
  • ஆங்கிலம்
  • எஸ்தோனியன்
  • ஃபின்னிஷ்
  • ஃபிரெஞ்சு
  • ஜெர்மன்
  • ஹங்கேரியன்
  • இத்தாலியன்
  • ஜாப்பனீஸ்
  • மலேஷியன்
  • நார்வேஜியன் (பொக்மால்)
  • போலிஷ்
  • போர்ச்சுகீஸ் (போர்ச்சுகல்)
  • போர்ச்சுகீஸ் (பிரேசில்)
  • ரஷ்யன்
  • ஸ்லோவேனியன்
  • ஸ்பானிஷ்
  • ஸ்வீடிஷ்
  • டர்கிஷ்
  • உக்ரைனியன்
எப்போதெல்லாம் சூத்திரங்கள் கணக்கிடப்படும் என்பதைத் தேர்வுசெய்தல்

தாளில் ஏதேனும் ஒரு மதிப்பு மாறும்போது அது தானாகவே மறுகணக்கிடலைத் தூண்டும்.

உதாரணமாக, கலம் A1ல் 5 என்ற மதிப்பு இருக்கும்போது மற்ற பக்கங்கள், கலங்கள் அல்லது சூத்திரம் எதுவும் A1 கலத்தைக் குறிப்பிடவில்லை எனில் A1ல் உள்ள மதிப்பை 5ல் இருந்து 7 ஆக மாற்றும்போது மறுகணக்கிடல் நிகழாது. 

எனினும் மற்ற பக்கங்கள், கலங்கள் அல்லது சூத்திரங்களில் A1 கலம் குறிப்பிடப்பட்டிருந்தால் A1ன் மதிப்பை மாற்றும் போதெல்லாம் மறுகணக்கிடல் தானாகவே தூண்டப்படும். உதாரணமாக, கலம் B1ல் =A1+10 என்ற சூத்திரம் இருத்தல்.

மறுகணக்கிடல் எப்போதெல்லாம் தூண்டப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்க, சில செயல்பாடுகளுக்குக் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் தேவை. உதாரணமாக, TODAY, NOW, RAND, RANDBETWEEN போன்ற நிலையற்ற செயல்பாடுகளின் மதிப்புகள் இயல்பாக எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். TODAY என்பது ஒவ்வொரு நாளும் மாறும், NOW என்பது ஒவ்வொரு நொடியும் மாறும், RAND மற்றும் RANDBETWEEN இரண்டும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.

இது ஒட்டுமொத்தத் தாளின் செயல்பாட்டையும் தடுக்கலாம். எப்போதெல்லாம் சூத்திரங்கள் கணக்கிடப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய: 

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் விரிதாளைத் திறக்கவும்.
  2. ஃபைல் அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு கணக்கிடல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இவற்றுக்கான அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்:
    • மீண்டும் கணக்கிடுதல்: எப்போதெல்லாம் சில சூத்திரங்கள் புதுப்பிக்கப்படும் என்பதை அமைக்கும்.
    • மீண்டும் மீண்டும் கணக்கிடுதல்: சர்குலர் ரெஃபரன்ஸ் உள்ள சூத்திரம் எத்தனை முறை பயன்படுத்தப்படலாம் என்பதை அமைக்கும்.
  4. அமைப்புகளைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

விரிதாளுக்கு வெளியே இருந்து தரவைப் பெறும் செயல்பாடுகள் பின்வரும் முறை மீண்டும் கணக்கிடும்:

  • ImportRange: 30 நிமிடங்கள்
  • ImportHtml, ImportFeed, ImportData, ImportXml: 1 மணிநேரம்
  • GoogleFinance: 20 நிமிடங்கள் வரை தாமதமாகலாம்
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13454346015018880999
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false