விரிதாளில் எண்களை வடிவமைத்தல்

Google Sheetsஸில் பல்வேறு வழிகளில் தரவை வடிவமைக்கலாம் இதன் மூலம் உங்கள் விருப்பத்திற்கேற்ப விரிதாளையும் அதன் உள்ளடக்கத்தையும் காட்சிப்படுத்தலாம்.

எண்கள், தேதிகள், நாணயங்கள் ஆகியவற்றை வடிவமைத்தல்

விரிதாளில் எண்கள், தேதிகள் அல்லது நாணயங்களின் வடிவத்தை வடிவமைக்கவோ மாற்றவோ இவற்றைச் செய்யவும்:

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. நீங்கள் வடிவமைக்க/மாற்றியமைக்க விரும்பும் கல வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வடிவம் அதன் பிறகு எண் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. கல வரம்பிற்குப் பயன்படுத்த வேண்டிய வடிவத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

எண்கள், தேதிகள், நாணயங்கள் ஆகியவற்றைப் பிரத்தியேகமாக வடிவமைத்தல்

நாணயங்கள், தேதிகள், எண்கள் ஆகியவற்றிற்கு பிரத்தியேக வடிவமைப்பைப் பயன்படுத்தலாம். இவற்றில் ஒவ்வொன்றிற்கும் உங்கள் விரிதாளுக்குப் பொருத்தமான வடிவத்தைக் கண்டறிய வடிவமைத்தல் மெனுக்களில் இருக்கும் உரைப் பெட்டிகளில் தேடலாம். நீங்கள் தேடுவதைக் கண்டறிய முடியவில்லை எனில் மெனுக்களுக்குள் உங்களுக்கென பிரத்தியேக வடிவமைப்பை இப்போது உருவாக்கலாம்.

பிரத்தியேகமான தேதி வடிவமைப்பு

உங்கள் விரிதாளில் பிரத்தியேகத் தேதி/நேர வடிவமைப்பைப் பயன்படுத்த இவற்றைச் செய்யவும்:

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. வடிவமைக்க விரும்பும் தரவை ஹைலைட் செய்யவும்.
  3. வடிவம் அதன் பிறகு எண் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பிரத்தியேகத் தேதி மற்றும் நேரம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வடிவத்தைத் தேர்ந்தெடுக்க மெனு வாக்கியப் பெட்டியில் தேடவும். உரைப் பெட்டியில் உங்கள் பிரத்தியேகத் தேதி/நேர வடிவத்தையும் சேர்க்கலாம்.
  6. பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

இயல்பாக காட்டப்படும் நேரம் & தேதி விருப்பங்கள் உங்கள் விரிதால் மொழியின் அடிப்படையில் இருக்கும்.

உங்கள் வடிவமைப்பில் மணிநேரம்/நிமிடம் போன்ற இன்னும் விரிவான நேரம்/தேதி மதிப்புகளைச் சேர்க்க விரும்பினால், மெனு உரைப் பெட்டியின் வலது மூலையில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்து கூடுதல் மதிப்பைத் தேர்ந்தெடுக்கவும். மதிப்பில் உள்ள அம்புக்குறிகளைக் கிளிக் செய்து விருப்பத்தைத் தேர்வுசெய்வதன் மூலம், இந்த மதிப்புகளுக்கான குறிப்பிட்ட வடிவமைப்பை மாற்றலாம். உங்கள் வடிவமைப்பிலிருந்து மதிப்பை நீக்க அந்த மதிப்பைக் கிளிக் செய்து நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பிரத்தியேகமான நாணய வடிவமைப்பு

உங்கள் விரிதாளில் பிரத்தியேக நாணய வடிவத்தைப் பயன்படுத்த இவற்றைச் செய்யவும்:

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. வடிவமைக்க விரும்பும் தரவை ஹைலைட் செய்யவும்.
  3. வடிவம் அதன் பிறகு எண் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பிரத்தியேக நாணயம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வடிவத்தைத் தேர்ந்தெடுக்க மெனு வாக்கியப் பெட்டியில் தேடவும். உரைப் பெட்டியில் உங்கள் பிரத்தியேக நாணய வடிவத்தையும் சேர்க்கலாம்.
  6. பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

உள்ளீட்டுப் பெட்டியின் வலது மூலையில் உள்ள கீழ் தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து விருப்பத்தைத் தேர்வுசெய்வதன் மூலம், எத்தனை தசம இடங்கள் காட்டப்பட வேண்டும் என்பது போன்ற நாணயம் குறித்த சில பண்புகளையும் மாற்றலாம்.

பிரத்தியேகமான எண் வடிவமைப்பு

உங்கள் விரிதாளில் பிரத்தியேக எண் வடிவத்தைப் பயன்படுத்த இவற்றைச் செய்யவும்:

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. வடிவமைக்க விரும்பும் தரவை ஹைலைட் செய்யவும்.
  3. வடிவம் அதன் பிறகு எண் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பிரத்தியேக எண் வடிவம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வடிவத்தைத் தேர்ந்தெடுக்க மெனு வாக்கியப் பெட்டியில் தேடவும். உரைப் பெட்டியில் உங்கள் பிரத்தியேக எண் வடிவத்தையும் சேர்க்கலாம்.
  6. பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

கவனத்திற்கு: பிரத்தியேக வடிவத்தை உருவாக்கும்போது வடிவமைப்பில் அரைப்புள்ளியால் பிரிக்கப்பட்ட 4 பகுதிகள் வரை இருக்கலாம்: positive;negative;zero;non-numeric. நிதி வடிவங்களும் ஆதரிக்கப்படும்.

வடிவத்தின் விரும்பும் பகுதிக்குள் எங்கு வேண்டுமானாலும் அடைப்புக்குறிகளுக்கும் நிறத்தைச் சேர்ப்பதன் மூலம் (எ.கா., [Red]), நேர்மறை & எதிர்மறை எண்களுக்கு இடையே வேறுபாட்டைக் கண்டறிவது போன்றவற்றுக்கு வடிவமைப்பில் நிறங்களைப் பயன்படுத்தலாம். வடிவமைப்பு நிறங்கள் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். பயன்படுத்தக்கூடிய நிறங்கள்:

பிரத்தியேக எண் வடிவத்தை உருவாக்குவதற்குப் பயன்படுத்தக்கூடிய பொதுவான தொடரியல் எழுத்துகளின் பட்டியல் இதோ:

எழுத்து விளக்கம்
0 எண்ணில் உள்ள இலக்கம். முடிவுகளில் முக்கியமல்லாத 0 தோன்றும்.
# எண்ணில் உள்ள இலக்கம். முடிவுகளில் முக்கியமல்லாத 0 தோன்றாது.
? எண்ணில் உள்ள இலக்கம். முடிவுகளில் முக்கியமல்லாத 0 இடைவெளியாகத் தோன்றும்.
$ எண்களை டாலர் மதிப்பாக வடிவமைக்கும்.
.(முற்றுப்புள்ளி)

தசமப் பிரிப்பான் மூலம் எண்களை வடிவமைக்கும்.

  • எண் மதிப்புகள் அனைத்திற்கும் தசமப் பிரிப்பானாக எந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை விரிதாளின் மொழி தீர்மானிக்கும்.
  • நியூமெரிக் கீபேடில் தசமப் புள்ளி பட்டனை அழுத்தும்போது எந்த எழுத்தைச் சேர்க்க வேண்டும் என்பதையும் விரிதாளின் மொழி நிர்ணயிக்கும்.
,(காற்புள்ளி) எண்களை ஆயிரங்களில் உள்ள பிரிப்பான்களுடன் வடிவமைக்கும்.
/ எண்களை பின்னமாக வடிவமைக்கும்.
% எண்களை சதவீதமாக வடிவமைக்கும்
E எண்களை அடுக்காக வடிவமைக்கும்.
"உரை" சூத்திரத்தில் உரையைச் சேர்க்கும். விரும்பும் உரையை அது தோன்றுவதற்கான மேற்கோள்களுக்குள் செருகவும்.
@

கலத்தில் உள்ளிடப்படும் உரையைக் காட்டும்.

*

கலத்தில் மீதமுள்ள இடைவெளியை நிரப்ப அடுத்துவரும் எழுத்தை மீண்டும் காட்டும்.

_ (அடிக்கோடு)

அடுத்துவரும் எழுத்தின் அகலத்திற்குச் சமமான இடைவெளியைச் சேர்க்கும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9141711345183917606
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false