ஃபைலை உருவாக்குதல், பார்த்தல் அல்லது பதிவிறக்குதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

இவை போன்ற கோப்புகளை உருவாக்கலாம், கண்டறியலாம், பதிவிறக்கலாம்: 

  • ஆவணங்கள்
  • விரிதாள்கள்
  • விளக்கக்காட்சிகள்
  • படிவங்கள் 

உங்கள் ஃபைல்கள் திருத்துவதற்கு, பகிர்வதற்கு, பிறருடன் இணைந்து பணிபுரிவதற்குக் கிடைக்கின்றன. Google Driveவில் ஃபைல்களைக் கண்டறியும் வழிமுறைகளை அறிக.

முக்கியம்: ஃபிஷிங் அல்லது மால்வேர் எனச் சந்தேகிக்கப்படும் ஃபைலைத் திறக்க முயற்சித்தால் உங்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் காட்டப்படலாம். ஃபைலைத் திறக்கும்போது கூடுதல் கவனத்துடன் இருக்கவும்.

கோப்பினை உருவாக்குதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs, Sheets, Slides அல்லது Formsஸின் முகப்புத் திரைக்குச் செல்லவும்.
  2. உருவாக்கு Plus என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் டெம்ப்ளேட்டில் இருந்தும் ஆவணத்தை உருவாக்கலாம்.

கோப்பினைச் சேமி

ஆன்லைனில் இருக்கும்போது நீங்கள் டைப் செய்யும்போதே உங்கள் Google கோப்புகள் சேமிக்கப்படும். சேமிக்கும் பட்டன் தேவைப்படாது.

இணைய இணைப்பு இல்லை எனில் மாற்றங்களைச் சேமிக்க ஆஃப்லைன் அணுகலை அமைக்கவும்.
உதவிக்குறிப்பு: Google Sheetsஸில் சேமிக்க நீங்கள் டைப் செய்த கலத்திற்கு வெளியே கிளிக் செய்யவும். 

கோப்பினைக் காட்டு

நீங்கள் உருவாக்கியுள்ள/எந்த கம்ப்யூட்டரிலும் திறந்துள்ள கோப்புகளையும் Microsoft® Word, Excel அல்லது PowerPoint கோப்புகள் போன்ற பிற ஆவணங்களையும் பார்க்க இதைச் செய்யவும்:

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs, Sheets அல்லது Slidesஸின் முகப்புத் திரைக்குச் செல்லவும்.
  2. நீங்கள் பார்க்க விரும்பும் ஆவணத்தையோ, விரிதாளையோ, விளக்கக்காட்சியையோ கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் கோப்பினை வேறொருவருடன் பகிர்ந்திருந்தால் அவர்கள் மாற்றங்களைச் செய்யும்போதே அவற்றைப் பெறுவீர்கள். 

கோப்பின் பெயரை மாற்றுக

புதிய ஆவணத்தையோ, விரிதாளையோ, விளக்கக்காட்சியையோ உருவாக்கும்போது அது தானாகவே “Untitled document,” “Untitled spreadsheet” அல்லது “Untitled presentation” எனப் பெயரிடப்படும். கோப்பின் பெயரை மாற்ற இவற்றைச் செய்யவும்:

  1. கோப்பின் மேலே அதன் பெயரைக் கிளிக் செய்ய்வும்.
  2. புதிய பெயரை உள்ளிடவும்.
  3. Enter விசையை அழுத்தவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் கோப்பினை வேறொருவருடன் பகிர்ந்திருந்தால் அவர்கள் மாற்றங்களைச் செய்யும்போதே அவற்றைப் பெறுவீர்கள். 

கோப்பை நகலெடுத்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs, Sheets, Slides அல்லது Formsஸின் முகப்புத் திரைக்குச் செல்லவும்.
  2. நகலெடுக்க விரும்பும் கோப்பினைத் திறக்கவும்.
  3. மெனுவில் கோப்பு அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பெயரை உள்ளிட்டு கோப்பினைச் சேமிப்பதற்கான இடத்தைத் தேர்வுசெய்யவும்.
    • ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி போன்றவற்றிலிருந்து கருத்துகளை நகலெடுக்க விரும்பினால் கருத்துகளையும் பரிந்துரைகளையும் நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும். தீர்க்கப்பட்ட கருத்துகளையும் பரிந்துரைகளையும் புதிய நகலில் சேர்ப்பதற்கு நீங்கள் தேர்வுசெய்யலாம்.
  5. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

கோப்பின் நகலைப் பதிவிறக்கு

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs, Sheets, Slides அல்லது Formsஸின் முகப்புத் திரைக்குச் செல்லவும்.
  2. ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  3. மேலே உள்ள ஃபைல் அதன் பிறகு பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஃபைல் வகையைத் தேர்வுசெய்யவும். கம்ப்யூட்டரில் ஃபைல் பதிவிறக்கப்படும்.

உதவிக்குறிப்பு: Chromeமில் பெரிய Google Docs கோப்பினை .pdf கோப்பாகப் பதிவிறக்க இவற்றைச் செய்யவும்: 

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google ஆவணத்தைத் திறக்கவும்.
  2. மேலே கோப்பு அதன் பிறகு அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும். 
  3. இடதுபுறத்தில் "இலக்கு" என்பதற்கு அருகில் PDF ஆகச் சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. மேலே சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.  
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7596723495170392203
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false