ஃபைலை உருவாக்குதல், பார்த்தல் அல்லது பதிவிறக்குதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

இவை போன்ற கோப்புகளை உருவாக்கலாம், கண்டறியலாம், பதிவிறக்கலாம்: 

  • ஆவணங்கள்
  • விரிதாள்கள்
  • விளக்கக்காட்சிகள்
  • படிவங்கள் 

உங்கள் ஃபைல்கள் திருத்துவதற்கு, பகிர்வதற்கு, பிறருடன் இணைந்து பணிபுரிவதற்குக் கிடைக்கின்றன. Google Driveவில் ஃபைல்களைக் கண்டறியும் வழிமுறைகளை அறிக.

முக்கியம்: ஃபிஷிங் அல்லது மால்வேர் எனச் சந்தேகிக்கப்படும் ஃபைலைத் திறக்க முயற்சித்தால் உங்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் காட்டப்படலாம். ஃபைலைத் திறக்கும்போது கூடுதல் கவனத்துடன் இருக்கவும்.

கோப்பை உருவாக்குதல்

  1. உங்கள் Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. கீழ் வலதுபுறத்தில் உருவாக்கு கேள்வியைச் சேர் என்பதைத் தட்டவும்.
  3. டெம்ப்ளேட்டைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது புதிய கோப்பை உருவாக்க வேண்டுமா எனத் தேர்வுசெய்யவும். ஆப்ஸ் புதிய கோப்பைத் திறக்கும்.

கோப்பைப் பார்த்தல்

எந்தவொரு சாதனத்திலும் நீங்கள் உருவாக்கியுள்ள/திறந்துள்ள கோப்புகளையும் Microsoft® Word, Excel அல்லது PowerPoint கோப்புகள் போன்ற பிற ஆவணங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

உதவிக்குறிப்பு: கோப்பில் வேறு யாரேனும் பணியாற்றிக் கொண்டிருந்தால் அவர்கள் செய்யும் மாற்றங்களை உங்களால் பார்க்க முடியும்.

கோப்பினைப் பார்த்தல்

கோப்பைத் திறந்து, பார்க்க Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸில் கோப்பின் பெயரைத் தட்டவும்.

வகையின்படி குழுவாக்கப்பட்ட கோப்புகளைப் பார்த்தல்

  1. உங்கள் Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் மெனு மெனு என்பதைத் தட்டவும்.
  3. நீங்கள் பார்க்க விரும்பும் கோப்புகளைத் தேர்வுசெய்யவும்:
    • சமீபத்தியவை: சமீபத்தில் நீங்கள் பணியாற்றிய கோப்புகள்.
    • என்னுடன் பகிர்ந்தவை: உங்களுடன் பிறர் பகிர்ந்த கோப்புகள்.
    • நட்சத்திரமிட்டவை: முக்கியமானது என நீங்கள் நட்சத்திரமிட்ட கோப்புகள்.
    • ஆஃப்லைன்: உங்கள் மொபைலிலோ டேப்லெட்டிலோ சேமிக்கப்பட்ட கோப்புகள்.

கோப்பின் பெயரை மாற்றுதல்

  1. உங்கள் Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. பெயர் மாற்ற விரும்பும் கோப்பில் மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  3. பெயரை மாற்று பெயரை மாற்று என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் விரும்பும் பெயரை உள்ளிடவும்.
  5. சரி என்பதைத் தட்டவும்.

கோப்பினைச் சேமித்தல்

  • ஆன்லைனில் இருந்தால் நீங்கள் டைப் செய்யும்போதே உங்கள் மாற்றங்களை Google தானாகவே சேமிக்கும். ‘சேமி’ பட்டனைப் பயன்படுத்த வேண்டியதில்லை.
  • ஆஃப்லைனில் இருக்கும்போது நீங்கள் உள்ளிடும் உரை சாதனத்தில் சேமிக்கப்பட்டு, மீண்டும் ஆன்லைனுக்கு வரும்போது Driveவில் சேமிக்கப்படும்.

உதவிக்குறிப்பு: Google Sheetsஸில் நீங்கள் செய்யும் மாற்றங்களைச் சேமிக்க, உள்ளிடும் கலத்திற்கு வெளியே தட்ட வேண்டும்.

கோப்பினை நகலெடுத்தல்

  1. உங்கள் Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. நகலெடுக்க விரும்பும் ஆவணத்தின் பெயருக்கு அருகில் மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  3. நகலெடு Make a copy என்பதைத் தட்டவும்.
  4. தலைப்பை உள்ளிட்டு அதைச் சேமிக்க வேண்டிய இடத்தைத் தேர்வுசெய்யவும்.
  5. சரி என்பதைத் தட்டவும்.

உங்கள் கோப்பின் நகலைப் பதிவிறக்குதல்

  1. உங்கள் Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. நீங்கள் பதிவிறக்க விரும்பும் கோப்பில் மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  3. பதிவிறக்கு என்பதைத் தட்டவும். கோப்பு உங்கள் மொபைலில் பதிவிறக்கப்பட்டு, அறிவிப்புச் செய்தியைப் பெறுவீர்கள்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2479883525322407211
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false