சூத்திரங்களையும் செயல்பாடுகளையும் சேர்த்தல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

Google Sheetsஸில் சூத்திரங்களை உருவாக்க செயல்பாடுகளைப் பயன்படுத்தி பல்வேறு வகையான கணக்கீடுகளை மேற்கொள்ளலாம். கிடைக்கக்கூடிய அனைத்துச் செயல்பாடுகளின் பட்டியலும் இதோ.

Add formulas and functions to a spreadsheet

மாதிரி விரிதாளைப் பெற்று வீடியோவைப் பின்பற்றிச் செய்ய, “நகலெடு” என்பதைக் கிளிக் செய்யவும்.

நகலெடு

சூத்திரத்தைப் பயன்படுத்துதல்

  1. விரிதாளைத் திறக்கவும்.
  2. கலத்தில் சமக் குறியை (=) டைப் செய்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் செயல்பாட்டை டைப் செய்யவும். 

கவனத்திற்கு: உங்கள் தரவின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் சூத்திரங்களும் வரம்புகளும் காட்டப்படலாம்.

குறிப்பிற்கான உதாரணத்துடன் செயல்பாட்டின் விளக்கத்தையும் அதன் தொடரியலையும் உங்களுக்கு வழங்குவதற்காக, திருத்தும் செயல்முறை முழுவதும் செயல்பாட்டு உதவிப் பெட்டி காட்டப்படும். கூடுதல் தகவல் தேவையெனில் முழுக் கட்டுரையையும் திறக்க உதவிப் பெட்டியின் கீழேயுள்ள “மேலும் அறிக” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: சூத்திரங்களை முழுமையாக வழங்க, டைப் செய்வதற்குத் தொடர்புடைய செயல்பாடுகள் பரிந்துரைக்கப்படக்கூடும். அவற்றை ஏற்கலாம் நிராகரிக்கலாம்.

பரிந்துரைகளை இயக்க அல்லது முடக்க, மேலே உள்ள கருவிகள் அடுத்து சூத்திரத்திற்கான பரிந்துரைகளை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

சூத்திரங்களை உருவாக்குவதற்கான கூடுதல் அம்சங்கள்

வரம்புகளைத் தேர்ந்தெடுத்து, திருத்துவதற்கான எளிய வழிகள்

வரம்பைத் தேர்ந்தெடுக்கும் பயன்முறை

  • சூத்திரத்தைத் திருத்தும்போது சூத்திரத்தில் உங்களுக்கு வரம்பு தேவைப்பட வாய்ப்புள்ளபோது, கர்சருக்கு அருகில் வரம்பைத் திருத்தும் சிக்னல் (சாம்பல் நிற அடைப்புக்குறி) தோன்றும். சிக்னல் தெரியும்போது வரம்பைத் தேர்ந்தெடுக்க கீபோர்ட் அம்புக்குறி விசைகள் மூலம் உங்கள் தாளில் நகர்த்தலாம்.
  • F2/’Ctrl + e’ என்ற கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பயன்படுத்தி இந்தப் பயன்முறையை இயக்கலாம்/முடக்கலாம். வரம்பைத் தேர்தெடுக்கும் பயன்முறை முடக்கப்பட்டிருந்தால் வரம்பைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தி கர்சரை உள்ளீட்டுப் பெட்டிக்குள் நகர்த்தலாம்.
  • சூத்திரத்தைத் திருத்தும்போது வரம்பைத் தேர்ந்தெடுக்க தாளுக்குள்ளும் கிளிக் செய்யலாம்.

வரம்பை மாற்றியமைத்தல்

  • உங்கள் சூத்திரத்தில் ஹைலைட் செய்யப்பட்ட வரம்பின் உரை இருக்கும்போது F2/’Ctrl + e’ விசைகளைப் பயன்படுத்தி, வரம்பைத் தேர்ந்தெடுக்கும் பயன்முறையில் நுழைந்து வரம்பில் எளிதாக மாற்றங்களைச் செய்யலாம்.
  • வரம்பின் உரையைத் திருத்தும்போது ’Shift + F2’/’Shift + Ctrl + e’ விசைகளை அழுத்தினால் அந்தச் சூத்திரத்தில் உள்ள வரம்பின் எல்லா நிகழ்வுகளிலும் எளிதாக மாற்றங்களைச் செய்யலாம்.

கவனத்திற்கு: அருகில் இல்லாத வரம்புகளையும் சூத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்கலாம். பல கலங்களைத் தேர்ந்தெடுக்க உங்கள் கீபோர்டில் Ctrl விசையை அழுத்திப் பிடித்தபடி (Macகில் Cmd விசை) சூத்திரத்தில் சேர்க்க விரும்பும் கலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

சூத்திரத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள்

குறிப்பிட்ட வரம்பிற்குச் சூத்திரத்தைப் பயன்படுத்திய பின் அதில் பிழைகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கான பரிந்துரையுடன் கூடிய "சூத்திரத் திருத்தம்" பெட்டி காட்டப்படும்.

பரிந்துரைகளை ஏற்க/நிராகரிக்க:

  • ஏற்கிறேன்  அல்லது நிராகரி cancel என்பதைக் கிளிக் செய்யவும்.
  • Crtl + Enter அல்லது (Mac சாதனத்தில்) Cmd + Return அழுத்தவும்.

‘சூத்திரத் திருத்தம்’ விருப்பத்தை இயக்க/முடக்க:

  1. மேல் இடதுபுறத்தில் உள்ள கருவிகள் and then தன்னிரப்பி என்பதைக் கிளிக் செய்யவும். 
  2. சூத்திரத் திருத்தங்களை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.  
உள்ளாக இடப்பட்ட செயல்பாடுகள்

ஒரே கலத்தில் வேறொரு செயல்பாட்டுடன் பயன்படுத்தப்படும் செயல்பாடு உள்ளாக இடப்பட்ட செயல்பாடு எனப்படும். செயல்பாடுகள் ஒன்றிணைக்கப்படும்போது Google Sheets மிகவும் தனிப்பட்ட செயல்பாட்டை முதலில் கணக்கிடும். உள்ளாக இடப்பட்ட செயல்பாடு அடைப்புக்குறிக்குள் அடைக்கப்பட்டு அதைச் சுற்றி இருக்கும் செயல்பாட்டின் உட்கூறாகப் பயன்படுத்தப்படும்.

உதாரணத்திற்கு நீங்கள் A1:A7 கல வரம்பில் உள்ள பல எண்களின் முழுமையான கூட்டுத்தொகையைக் கணக்கிட விரும்புவதாகக் கொள்வோம். இந்த எண்களின் கூட்டுத்தொகையைக் கணக்கிட கலத்தில் '=SUM(A1:A7)' என்பதை உள்ளிட வேண்டும்.

இந்தக் கூட்டுத்தொகையின் முழுமையான மதிப்பைக் கணக்கிட முழுமையான மதிப்பிற்கான சூத்திரத்திற்குள் கூட்டுத்தொகைக்கான சூத்திரத்தை உள்ளாக இட வேண்டும். இரண்டு சூத்திரங்களையும் ஒரே கலத்தில் கணக்கிட கலத்திற்குள் '=ABS(SUM(A1:A7))' என்பதை உள்ளிடவும். கவனத்திற்கு: =SUM() செயல்பாடு முதலில் செயல்பட்டு =ABS() செயல்பாட்டில் உட்கூறாகப் பயன்படுத்தப்படும்.

சூத்திரத்தை ஹைலைட் செய்தல்

சூத்திரத்தில் பிற கலங்களைக் குறிக்கும்போது சூத்திரத்தை இன்னும் எளிதாக உருவாக்குவதில் உங்களுக்கு உதவ அந்தக் கலங்கள் நிற வேறுபாடுள்ள நிறத்தில் ஹைலைட் செய்யப்படும். முழுமையடைந்த சூத்திரம் உள்ள கலத்தைக் கிளிக் செய்யும்போது இந்த ஹைலைட் செய்யப்பட்ட கலங்களையும் பார்ப்பீர்கள்.

சூத்திரப் பட்டியின் அளவை மாற்றுதல் 

சூத்திரப் பட்டியைப் பெரிதாக்கவோ சிறிதாக்கவோ அதன் கீழ்ப்பகுதியைக் கிளிக் செய்து மேலே/கீழே இழுக்கவும்.

கவனத்திற்கு: கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பயன்படுத்தியும் அளவை மாற்றலாம். சூத்திரப் பட்டியைத் தட்டி இவற்றைக் கிளிக் செய்யவும்:

  • PC: ’Ctrl + மேல்நோக்கிய அம்புக்குறி’ & ’Ctrl + கீழ்நோக்கிய அம்புக்குறி’ 
  • Mac: ’Ctrl + Option + மேல்நோக்கிய அம்புக்குறி’ & ’Ctrl + Option + கீழ்நோக்கிய அம்புக்குறி’
வேலை செய்யாத செயல்பாடுகள்
பிற விரிதாள் நிரல்களின் சில செயல்பாடுகள் Sheetsஸில் வேலை செய்யாது.
வகை விளக்கம்
CALL

டைனமிக் லிங்க் லைப்ரரியையோ குறியீட்டு ஆதாரத்தையோ வழங்கும். இந்த ஆதாரம் எல்லாச் சாதனங்களிலும் கிடைக்காமல் இருக்கலாம் என்பதால் Sheets இந்தச் செயல்பாட்டைப் பயன்படுத்துவதில்லை.

உதவிக்குறிப்பு: அதற்குப் பதிலாக மேக்ரோக்கள்/ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தலாம்.

CUBE செயல்பாடுகள் (CUBEKPIMEMBER, CUBEMEMBER, CUBEMEMBERPROPERTY)

Excelலின் CUBE தரவு மாதிரியைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கும்.

உதவிக்குறிப்பு: ஒத்த CUBEகளைப் பயன்படுத்த விரும்பினால் தரவு இணைப்பான்கள் அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

INFO

Sheets ஆவணக் கோப்பு குறித்த (அதன் கோப்புப்பாதை போன்ற) தகவலை வழங்கும்.

கவனத்திற்கு: Sheets ஆன்லைனில் கூட்டுப்பணியாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிப்பதால் இந்த முறையில் பெறும் பெரும்பாலான தகவல் எல்லாப் பயனர்களுக்கும் கிடைக்காமல் இருக்கலாம் அல்லது அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடன் இல்லாமல் இருக்கலாம்.

REGISTER.ID

Windowsஸிலிருந்து பதிவு ஐடியைப் பெறும்.

கவனத்திற்கு: Sheets எந்தவொரு ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடனும் இணைக்கப்படவில்லை என்பதால் இந்தச் செயல்பாடு ஆதரிக்கப்படாது.

RTD

காம்பனெண்ட் ஆப்ஜெக்ட் மாடல் (COM) தன்னியக்கச் சேவையகத்தின் தரவைப் பெறும்.

உதவிக்குறிப்பு: அனைவராலும் COM சேவையகத்தை அணுக முடியாது என்பதால் மேக்ரோக்கள்/ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தலாம்.

WEBSERVICE

முழுவதுமாக வேலை செய்ய Windowsஸைச் சார்ந்திருக்கும்.

கவனத்திற்கு: Sheets எந்தவொரு ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடனும் இணைக்கப்படவில்லை என்பதால் இந்தச் செயல்பாடு ஆதரிக்கப்படாது.

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3485185002843116421
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false