சூத்திரங்களையும் செயல்பாடுகளையும் சேர்த்தல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

Google Sheetsஸில் சூத்திரங்களை உருவாக்க செயல்பாடுகளைப் பயன்படுத்தி பல்வேறு வகையான கணக்கீடுகளை மேற்கொள்ளலாம். கிடைக்கக்கூடிய அனைத்துச் செயல்பாடுகளின் பட்டியலும் இதோ.

சூத்திரத்தை உருவாக்குதல்

  1. iPhoneனிலோ iPadடிலோ Google Sheets ஆப்ஸில் விரிதாளைத் திறக்கவும்.
  2. சூத்திரத்தைச் சேர்க்க விரும்பும் கலத்தைத் தட்டவும்.
    • செயல்பாடுகளின் பட்டியலில் இருந்து தேர்வுசெய்ய செயல்பாடு செயல்பாடு என்பதைத் தட்டவும். பின்னர் வகையைத் தேர்வுசெய்து உங்கள் சூத்திரத்தில் பயன்படுத்த விரும்பும் செயல்பாட்டைத் தேர்வுசெய்யவும்.
    • கைமுறையாக செயல்பாட்டை உள்ளிட = என்பதையும் நீங்கள் பயன்படுத்த விரும்பும் செயல்பாட்டையும் உள்ளிடவும்.
    • கலத்தில் ஏற்கெனவே சூத்திரம் இருந்தால் படி 5க்குச் செல்லவும்.
  3. செயல்பாட்டின் விளக்கம் அதில் நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போதே சூத்திரம் உருவாக்குவதில் உங்களுக்கு வழிகாட்டுவதற்காகக் காட்டப்படும்.
  4. பிற கலங்களின் உள்ளடக்கத்தை உங்கள் சூத்திரச் சமன்பாட்டில் பயன்படுத்த அந்தக் கலங்களின் பெயர்களை சூத்திரத்தில் உள்ளிடவும்.
  5. சூத்திரத்தில் சேர்ப்பதற்கு கீழேயுள்ள உரைப் பெட்டியில் உள்ள குறியீடுகளில் இருந்து தேர்வுசெய்யவும். உதாரணத்திற்கு ஒரு கலத்தின் உள்ளடக்கங்களை மற்றொரு கலத்தின் உள்ளடக்கத்தில் இருந்து கழிக்க - (கழித்தல்) குறியீட்டைத் தட்டவும்.
  6. சூத்திரத்தை முடிக்க முடிந்ததுமுடிந்தது என்பதைத் தட்டவும்.

சூத்திரங்களை உருவாக்குவதற்கான கூடுதல் அம்சங்கள்

உள்ளாக இடப்பட்ட செயல்பாடுகள்

ஒரே கலத்தில் வேறொரு செயல்பாட்டுடன் பயன்படுத்தப்படும் செயல்பாடு உள்ளாக இடப்பட்ட செயல்பாடு எனப்படும். செயல்பாடுகள் ஒன்றிணைக்கப்படும்போது Google Sheets மிகவும் தனிப்பட்ட செயல்பாட்டை முதலில் கணக்கிடும். உள்ளாக இடப்பட்ட செயல்பாடு அடைப்புக்குறிக்குள் அடைக்கப்பட்டு அதைச் சுற்றி இருக்கும் செயல்பாட்டின் உட்கூறாகப் பயன்படுத்தப்படும்.

உதாரணத்திற்கு நீங்கள் A1:A7 கல வரம்பில் உள்ள பல எண்களின் முழுமையான கூட்டுத்தொகையைக் கணக்கிட விரும்புவதாகக் கொள்வோம். இந்த எண்களின் கூட்டுத்தொகையைக் கணக்கிட கலத்தில் '=SUM(A1:A7)' என்பதை உள்ளிட வேண்டும்.

இந்தக் கூட்டுத்தொகையின் முழுமையான மதிப்பைக் கணக்கிட முழுமையான மதிப்பிற்கான சூத்திரத்திற்குள் கூட்டுத்தொகைக்கான சூத்திரத்தை உள்ளாக இட வேண்டும். இரண்டு சூத்திரங்களையும் ஒரே கலத்தில் கணக்கிட கலத்திற்குள் '=ABS(SUM(A1:A7))' என்பதை உள்ளிடவும். கவனத்திற்கு: =SUM() செயல்பாடு முதலில் செயல்பட்டு =ABS() செயல்பாட்டில் உட்கூறாகப் பயன்படுத்தப்படும்.

சூத்திரத்தை ஹைலைட் செய்தல்

சூத்திரத்தில் பிற கலங்களைக் குறிக்கும்போது சூத்திரத்தை இன்னும் எளிதாக உருவாக்குவதில் உங்களுக்கு உதவ அந்தக் கலங்கள் நிற வேறுபாடுள்ள நிறத்தில் ஹைலைட் செய்யப்படும். முழுமையடைந்த சூத்திரம் உள்ள கலத்தைக் கிளிக் செய்யும்போது இந்த ஹைலைட் செய்யப்பட்ட கலங்களையும் பார்ப்பீர்கள்.

வேலை செய்யாத செயல்பாடுகள்

பிற விரிதாள் நிரல்களின் சில செயல்பாடுகள் Sheetsஸில் வேலை செய்யாது.
வகை விளக்கம்
CALL

டைனமிக் லிங்க் லைப்ரரியையோ குறியீட்டு ஆதாரத்தையோ வழங்கும். இந்த ஆதாரம் எல்லாச் சாதனங்களிலும் கிடைக்காமல் இருக்கலாம் என்பதால் Sheets இந்தச் செயல்பாட்டைப் பயன்படுத்துவதில்லை.

உதவிக்குறிப்பு: அதற்குப் பதிலாக மேக்ரோக்கள்/ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தலாம்.

CUBE செயல்பாடுகள் (CUBEKPIMEMBER, CUBEMEMBER, CUBEMEMBERPROPERTY)

Excelலின் CUBE தரவு மாதிரியைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கும்.

உதவிக்குறிப்பு: ஒத்த CUBEகளைப் பயன்படுத்த விரும்பினால் தரவு இணைப்பான்கள் அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

INFO

Sheets ஆவணக் கோப்பு குறித்த (அதன் கோப்புப்பாதை போன்ற) தகவலை வழங்கும்.

கவனத்திற்கு: Sheets ஆன்லைனில் கூட்டுப்பணியாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிப்பதால் இந்த முறையில் பெறும் பெரும்பாலான தகவல் எல்லாப் பயனர்களுக்கும் கிடைக்காமல் இருக்கலாம் அல்லது அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடன் இல்லாமல் இருக்கலாம்.

REGISTER.ID

Windowsஸிலிருந்து பதிவு ஐடியைப் பெறும்.

கவனத்திற்கு: Sheets எந்தவொரு ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடனும் இணைக்கப்படவில்லை என்பதால் இந்தச் செயல்பாடு ஆதரிக்கப்படாது.

RTD

காம்பனெண்ட் ஆப்ஜெக்ட் மாடல் (COM) தன்னியக்கச் சேவையகத்தின் தரவைப் பெறும்.

உதவிக்குறிப்பு: அனைவராலும் COM சேவையகத்தை அணுக முடியாது என்பதால் மேக்ரோக்கள்/ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தலாம்.

WEBSERVICE

முழுவதுமாக வேலை செய்ய Windowsஸைச் சார்ந்திருக்கும்.

கவனத்திற்கு: Sheets எந்தவொரு ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடனும் இணைக்கப்படவில்லை என்பதால் இந்தச் செயல்பாடு ஆதரிக்கப்படாது.

 

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15927997412272903957
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false