விரிதாளைத் திருத்துதல் & வடிவமைத்தல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

விரிதாளில் தரவைச் சேர்த்த பின்னர் கலங்களையோ தரவையோ திருத்தலாம் வடிவமைக்கலாம்.

 

கலத்தில் உள்ள தரவைத் திருத்துதல்

  1. Google Sheetsஸில் விரிதாளைத் திறக்கவும்.
  2. காலியாக உள்ள கலத்தைக் கிளிக் செய்யவும் அல்லது காலியாக இல்லாத கலத்தை இருமுறை தட்டவும்.
  3. உள்ளிடத் தொடங்கவும்.
  4. விருப்பத்திற்குரியது: கலத்தில் இன்னொரு கோட்டைச் சேர்க்க Macகில் ⌘ + Enter என்பதையோ Windowsஸில் Ctrl + Enter என்பதையோ அழுத்தவும்.
  5. முடிந்ததும் Enter விசையை அழுத்தவும்.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலங்களை வடிவமைத்தல்

  1. Google Sheetsஸில் விரிதாளைத் திறக்கவும்.
  2. கலத்தைக் கிளிக் செய்து நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் அருகிலுள்ள கலங்கள் முழுவதும் மவுஸை இழுக்கவும் Macகில் விசையையோ Windowsஸில் Ctrl விசையையோ அழுத்திப் பிடிக்கவும்.
  3. கலத்தில் உள்ள உரை/எண்களை வடிவமைக்க மேலே கருவிப்பட்டியில் உள்ள விருப்பங்களைப் பயன்படுத்தவும்.

தரவை வடிவமைத்தல்

கலங்களையோ உரையையோ வடிவமைப்பதற்கான சில விருப்பங்கள் இதோ. இந்த விருப்பங்களை ஆவணத்தின் மேலே கண்டறியலாம்.

  • செயல்தவிர் செயல்தவிர்
  • மீண்டும்செய் மீண்டும்செய்
  • தடிமன் தடிமன்
  • சாய்வாக்கு சாய்வு
  • அடித்தம் அடித்தம்
  • எழுத்துரு/எழுத்துரு அளவை மாற்று
  • வண்ண உரை எழுத்துகளின் வண்ணத்தை மாற்று
  • நிரப்பு வண்ணம் கலத்தின் நிரப்பு வண்ணத்தை மாற்று
    • ஒற்றை வண்ணம்
    • ஒன்று விட்டு ஒன்றாக மாறும் பின்னணி வண்ணங்கள்
  • பார்டர்கள் கலத்தின் பார்டர்களை மாற்று
    • பார்டர் வண்ணம் பார்டரின் வண்ணத்தை மாற்று
    • Border style பார்டர் நடையை மாற்று
  • Merge cells கலங்களை ஒன்றிணை
  • உரையை கிடைமட்டச் சீரமைவிற்கு மாற்று
  • உரையை செங்குத்துச் சீரமைவிற்கு மாற்று
  • கலத்தில் உள்ள உரையை சுழற்று
  • மடிப்பு கலத்தில் உள்ள உரையை மடி

கலத்தில் உள்ள உரை/உள்ளடக்கத்தின் பகுதியை வடிவமைக்க அந்தக் கலத்தை இருமுறை கிளிக் செய்து வடிவமைக்க விரும்புவதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் வடிவமைக்கும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆப்ஜெக்ட்டுகளைச் சீரமைத்தல் & அளவை மாற்றுதல்

ஆப்ஜெக்ட்டை நீங்கள் விரும்பும் இடத்திற்கு நகர்த்தலாம் அல்லது அதன் அளவை மாற்றலாம். கோடுகள் காண்பிக்கப்படும். ஆப்ஜெக்ட் எதனுடன் சீராக அமைந்துள்ளது என்றும், ஆப்ஜெக்ட்டுகளுக்கு இடையே சமமான இடைவெளி உள்ளதா என்றும் அவை காட்டும். இரு ஆப்ஜெக்ட்டுகள் ஒரே அளவில் இருக்கும்போதும் கோடுகள் தோன்றும்.
கலத்தில் எண்களையும் தேதிகளையும் வடிவமைத்தல்
  1. வடிவமைக்க வேண்டிய கலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. மேலே உள்ள வடிவமைப்பு அதன் பிறகு எண் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. காட்டப்படும் மெனுவிலிருந்து வடிவமைப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உங்களுக்குத் தேவைப்படும் வடிவமைப்பு விருப்பம் இல்லை எனில் காட்டப்படும் மெனுவின் கீழ்ப் பகுதியில் "விருப்பமான தேதியும் நேரமும்", "விருப்பமான எண் வடிவமைப்பு" போன்ற பிரத்தியேகமாக்குதல் விருப்பங்களைக் கிளிக் செய்யவும்.

விரிதாளில் எண்களை வடிவமைப்பது குறித்து மேலும் அறிக.

தீமினைச் சேர்த்தல்

மொத்த விரிதாள் வடிவமைப்பிலும் தீம்கள் மூலம் மாற்றங்களைப் பயன்படுத்தலாம்.

  1. Google Sheetsஸில் விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள வடிவமைப்பு அதன் பிறகுதீம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கிடைக்கும் தீமினைத் தேர்வுசெய்யவும் அல்லது நீங்களே ஒன்றை உருவாக்கபிரத்தியேகமாக்குஎன்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்புகள்:

  • பிரத்தியேக தீமினை உருவாக்கினால் மிகச் சமீபத்திய பதிப்பு சேமிக்கப்படும்.
  • எழுத்திலும் நிரப்பு வண்ணத் தேர்விகளிலும் தற்போதைய தீமின் வண்ணங்கள் இருக்கும்.

தீமினால் மாறும் விரிதாளின் பகுதிகள்

  • எழுத்துகளின் எழுத்து வடிவம், கட்ட வார்த்தைகளின் வண்ணம், விளக்கப்படங்கள், பைவட் டேபிள்கள் ஆகியவை
  • கட்ட உரையின் லிங்க் வண்ணம்
  • விளக்கப்படத்தின் பின்புல வண்ணம்
  • விளக்கப்படத்தில் இருக்கும் தொடரின் வண்ணம்
  • பைவட் டேபிள் பின்புலம்

கவனத்திற்கு: விரிதாளில் இருக்கும் ஏதேனும் ஒன்றின் வடிவமைப்பை மாற்றினால் தீம் அமைப்பை மீறி அது செயல்படுத்தப்படும்.

 

தொடர்புடைய இணைப்புகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8140879018323880966
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false