உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?
இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!
விரிதாளில் தரவைச் சேர்த்த பின்னர் கலங்களையோ தரவையோ திருத்தலாம் வடிவமைக்கலாம்.
கலத்தில் உள்ள தரவைத் திருத்துதல்
- Google Sheets ஆப்ஸில் விரிதாளைத் திறக்கவும்.
- விரிதாளில் நீங்கள் திருத்த விரும்பும் கலத்தை இருமுறை தட்டவும்.
- தரவை உள்ளிடவும்.
- விருப்பத்திற்குரியது: வார்த்தைகளை வடிவமைக்க, அவற்றைத் தொட்டுப் பிடித்துவிட்டு, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
- புதிய வரியைச் சேர்க்க, வரி முறிவைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது Ctrl + Enter அழுத்தவும்.
- இதைச் செய்ததும் ஐகானைத் தட்டவும்.
செயல்பாட்டைச் செயல்தவிர்த்தல்/மீண்டும்செய்தல்
தரவைத் திருத்தும்போது வடிவமைக்கும்போதோ கடைசியாகச் செய்த செயல்பாட்டைத் தவிர்க்கவோ மீண்டும்செய்யவோ திரையின் மேல் பகுதிக்குச் சென்று இவற்றைத் தட்டவும்:
- செயல்தவிர் .
- மீண்டும்செய் .
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலங்களை வடிவமைத்தல்
- Google Sheets ஆப்ஸில் விரிதாளைத் திறக்கவும்.
- கலத்தைத் தட்டி நீல நிறக் குறிப்பான்களை நீங்கள் தேர்ந்த்டுக்க விரும்பும் அருகிலுள்ள கலங்கள் முழுவதும் இழுக்கவும்.
- வடிவமைப்பு என்பதைத் தட்டவும்.
- "வார்த்தைகள்" பிரிவில் உங்கள் வார்த்தைகளை வடிவமைப்பதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
- தடிமன்
- சாய்வு
- அடிக்கோடு
- அடித்தம்
- இடதுபுற உரைச் சீரமைப்பு
- மைய உரைச் சீரமைப்பு
- வலதுபுற உரைச் சீரமைப்பு
- மேல் சீரமைப்பு (செங்குத்து)
- மையச் சீரமைப்பு (செங்குத்து)
- கீழ் சீரமைப்பு (செங்குத்து)
- உரையின் அளவு, வண்ணம், நடை
- வார்த்தைகளின் சுழற்சி
- "கலம்" பிரிவில் உங்கள் கலத்தை வடிவமைப்பதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
- கல நிரப்பு வண்ணம்
- ஒன்று விட்டு ஒன்றாக மாறும் பின்னணி வண்ணங்கள்
- பார்டர்கள்
- கலத்தின் பார்டர்
- பார்டரின் நடை
- பார்டர் வண்ணம்
- வார்த்தைகள் மடிப்பு
- கலங்களை ஒன்றிணை
- மாற்றங்களைச் சேமிக்க தாளைத் தட்டவும்.