படங்களைச் செதுக்கலும் சரிக்கட்டலும்

Google Docs, Slides ஆகியவற்றில் சேர்த்த படங்களைச் செதுக்கலாம், மாஸ்க் செய்யலாம், பார்டர்களைச் சேர்க்கலாம்.

படத்தைச் செதுக்குதல்

படத்தின் முனைகளை டிரிம் செய்யலாம் அல்லது தேவையற்ற பகுதியை அகற்றலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  2. செதுக்க வேண்டிய படத்தின்மீது கிளிக் செய்யவும்.
  3. செதுக்கு செதுக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பார்டரைச் சுற்றிலும், நீலச் சதுரங்களைக் கிளிக் செய்து, இழுத்து விரும்பும் வடிவத்தை அமைக்கவும்.
  5. முடிந்த பிறகு, கீபோர்டில் Enter பட்டனை அழுத்தவும் அல்லது ஃபைலில் எந்த இடத்திலாவது கிளிக் செய்யவும்.

படத்தில் மற்ற மாற்றங்களைச் செய்தல்

நீங்கள் படத்தை ஒரு வடிவத்திற்குள் பொருத்தலாம், பார்டர் சேர்க்கலாம், வண்ணத்தையும் வடிப்பானையும் சரிசெய்யலாம், படத்தை ரீசெட் செய்யலாம்.

Google Slidesஸில் படத்தை மாஸ்க் செய்தல்

Google Slides இல் வடிவத்தில் படத்தைப் பொருத்த, படத்தை மாஸ்க் செய்யலாம்.

  1. கம்ப்யூட்டரில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மாஸ்க் செய்ய விரும்பும் படத்தைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே, செதுக்கு செதுக்கு என்பதற்கு அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  4. மாற்ற விரும்பும் வடிவத்தைக் கிளிக் செய்யவும்.
  5. படத்தை வடிவம் மாஸ்க் செய்யும். வடிவத்தை மாற்ற, வண்ணமான ஹேண்டில்களைக் கிளிக் செய்து, இழுக்கவும்.
படத்தில் பார்டரைச் சேர்த்தல்
  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  2. பார்டரைச் சேர்க்க விரும்பும் படத்தைக் கிளிக் செய்யவும்.
  3. பார்டர் வண்ணம் வரி வண்ணம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வண்ணத்தைத் தேர்வுசெய்யவும்.
வண்ணத்தையும் வடிப்பான்களையும் மாற்றுதல்

படங்களில் ஒன்றிற்கு, வண்ணம், தெளிவுத்திறன் அல்லது ஒளி மாறுபாடு ஆகியவற்றை மாற்றலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  2. மாற்ற விரும்பும் படத்தைக் கிளிக் செய்யவும்.
  3. வடிவம் அதன் பிறகு வடிவமைப்பு விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • "மறுவண்ணம்" என்பதன் கீழே படத்தின் வண்ணத்தை மாற்றலாம்.
    • "மாற்றங்கள்" என்பதன் கீழ்:
      • தெளிவுத்திறன்: படத்தின் பின்புலத்தில் ஸ்லைடு எவ்வளவு காட்டப்படுகிறது என்பதை மாற்றலாம்.
      • ஒளிர்வு: ஸ்லைடில் படம் எப்படி ஒளிர்வாகத் தோன்றுகிறது என்பதை மாற்றலாம்.
      • ஒளி மாறுபாடு: பின்புலத்தில் இருந்து படம் எவ்வளவு தனித்து இருக்கிறது என்பதை மாற்றலாம்.
  4. திருத்துவதைப் பொருத்து, மாற்றங்களைப் பார்ப்பீர்கள்.
படத்தை மீட்டமைத்தல்

உங்கள் படத்தில் செய்த மாற்றங்களைச் செயல்தவிர்க்க விரும்பினால், படத்தை அதன் அசல் படத்திற்கு மீட்டமைக்கவும்.

  1. கம்ப்யூட்டரில் ஆவணம் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. படத்தை மீட்டமை படத்தை மீட்டமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. திருத்தப்பட்ட படமானது ஃபைலில் சேர்க்கப்பட்ட அசல் படமாக மாறும்.

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12470357535977800347
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false