படங்களைச் செதுக்கலும் சரிக்கட்டலும்

Google Docs, Slides ஆகியவற்றில் சேர்த்த படங்களைச் செதுக்கலாம், மாஸ்க் செய்யலாம், பார்டர்களைச் சேர்க்கலாம்.

Google Docs அல்லது Slides இல் வண்ணங்களை மாற்ற, கம்ப்யூட்டரில் docs.google.com அல்லது slides.google.com என்பதற்குச் செல்லவும்.

Google Slides இல் படத்தைச் செதுக்குதல்

படத்தின் முனைகளை டிரிம் செய்யலாம் அல்லது தேவையற்ற பகுதியை அகற்றலாம்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  3. செதுக்க விரும்பும் படத்தைத் தட்டவும்.
  4. கீழே, செதுக்கு செதுக்கு என்பதைத் தட்டவும்.
  5. பார்டரைத் தொட்டு, இழுக்கவும்.
  6. முடிந்தபிறகு, ஸ்லைடில் எந்த இடத்திலாவது தட்டவும்.

Google Docs இல் படத்தைச் செதுக்க, கம்ப்யூட்டரில் docs.google.com என்பதற்குச் செல்லவும்.

Google Slides இல் படத்தை மாஸ்க் செய்தல்

Google Slides இன் வடிவத்தில் படத்தைப் பொருத்த, படத்தை மாஸ்க் செய்யவும்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  3. மாஸ்க் செய்ய விரும்பும் படத்தைத் தட்டவும்.
  4. கீழே, செதுக்கு செதுக்கு என்பதைத் தட்டவும்.
  5. கீழே, மாஸ்க் செய் மாஸ்க் என்பதைத் தட்டவும்.
  6. விரும்பும் வடிவத்தைத் தட்டவும்.
  7. படத்தை வடிவம் மாஸ்க் செய்யும். வடிவத்தை மாற்ற, பார்டரைத் தொட்டு, இழுக்கவும்.
Google Slides இல் வண்ணத்தையும் வடிப்பான்களையும் மாற்றுதல்
  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  3. சீரமைக்க விரும்பும் படத்தைத் தட்டவும்.
  4. மேலே, வடிவமைப்பு வடிவமைப்பு என்பதைத் தட்டவும்.
    • வடிப்பானைத் தேர்வுசெய்ய, மறுவண்ணம் என்பதைத் தட்டவும்.
    • தெளிவுத்திறன், ஒளிர்தல், ஒளி மாறுபாடு ஆகியவற்றை மாற்ற, சீரமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  5. முடித்தபிறகு, ஸ்லைடில் எந்தப் பகுதியிலாவது தட்டி மூடவும்.
Google Slides இல் டிராப் ஷேடோவை சீரமைத்தல்

டிராப் ஷேடோவின் வண்ணத்தைச் சேர்க்க, மாற்ற:

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  3. சீரமைக்க விரும்பும் படத்தைத் தட்டவும்.
  4. மேலே, வடிவமைப்பு வடிவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. கீழே, டிராப் ஷேடோ என்பதைத் தட்டவும்.
  6. டிராப் ஷேடோவைப் பயன்படுத்து என்பதை இயக்கவும்.
  7. டிராப் ஷேடோவுக்கான வண்ணத்தைத் தேர்வுசெய்யவும்.
  8. முடித்தபிறகு, ஸ்லைடில் எந்தப் பகுதியிலாவது தட்டி மூடவும்.

குறிப்பு: டிராப் ஷேடோவை அகற்ற, டிராப் ஷேடோவைப் பயன்படுத்து என்பதை முடக்கவும்.

படத்தில் பார்டரைச் சேர்த்தல்

Google Docs

  1. உங்கள் Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Docs ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஆவணத்தைத் திறக்கவும்.
  3. பார்டர் சேர்க்க விரும்பும் படத்தைத் தட்டவும்.
  4. மேலே வலதுபுறத்தில், வடிவமைப்புவடிவமைப்பு என்பதைத் தட்டவும்.
  5. கோட்டின் வண்ணம், தடிமன், டேஷ் ஆகியவற்றைத் தேர்வுசெய்யவும்.

Google Slides

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  3. பார்டர் சேர்க்க விரும்பும் படத்தைத் தட்டவும்.
  4. மேலே, வடிவமைப்பு வடிவமைப்பு என்பதைத் தட்டவும்.
  5. பார்டரின் வண்ணம், தடிமன், டேஷ் ஆகியவற்றைத் தேர்வுசெய்யவும்.
  6. முடித்தபிறகு, ஸ்லைடில் எந்தப் பகுதியிலாவது தட்டி மூடவும்.
Google Docs இல் படத்தை மீட்டமைத்தல்

உங்கள் படத்தில் செய்த மாற்றங்களைச் செயல்தவிர்க்க விரும்பினால்:

  1. உங்கள் Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Docs ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஆவணத்தைத் திறக்கவும்.
  3. மீட்டமைக்க விரும்பும் படத்தைத் தட்டவும்.
  4. மேலே வலதுபுறத்தில், வடிவமைப்புவடிவமைப்பு என்பதைத் தட்டவும்.
  5. படத்தை மீட்டமை என்பதைத் தட்டவும்.

Google Slides இல் படங்களை மீட்டமைக்க, கம்ப்யூட்டரில் slides.google.com என்பதற்குச் செல்லவும்.

படத்தின் அளவை மாற்றுதல் அல்லது சுழற்றுதல்

Google Docs

  1. உங்கள் Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Docs ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஆவணத்தைத் திறக்கவும்.
  3. மேலே வலதுபுறத்தில், மேலும்மேலும் என்பதைத் தட்டவும்.
  4. "அச்சிடல் தளவமைப்பு" முடக்கு என்பதை இயக்கவும்.
  5. சீரமைக்க விரும்பும் படத்தைத் தட்டவும்.
  6. படத்தின் அளவை மாற்றலாம் அல்லது அதைச் சுழற்றலாம்:
    • அளவு மாற்று: முனைகளில் உள்ள சதுரங்களைத் தொட்டு, இழுக்கவும்.
    • சுழற்று: படத்துடன் இணைந்துள்ள வட்டத்தைத் தொட்டு, இழுக்கவும்.

Google Slides

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  3. சீரமைக்க விரும்பும் படத்தைத் தட்டவும்.
  4. படத்தின் அளவை மாற்றலாம் அல்லது அதைச் சுழற்றலாம்:
    • அளவு மாற்று: முனைகளில் உள்ள சதுரங்களைத் தொட்டு, இழுக்கவும்.
    • சுழற்று: படத்துடன் இணைந்துள்ள வட்டத்தைத் தொட்டு, இழுக்கவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16127076287844252263
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false