குரல் மூலம் டைப் செய்தல்

Google Docsஸிலும் Google Slides பேச்சாளர் குறிப்புகளிலும் பேசுவதன் மூலம் டைப் செய்யலாம் திருத்தலாம். இந்த அம்சம் Chrome, Firefox, Edge, Safari உலாவிகளின் சமீபத்திய பதிப்புகளில் செயல்படும்.

படி 1: மைக்ரோஃபோனை இயக்குங்கள்

குரல் டைப்பிங் அல்லது குரல் கட்டளைகளைப் பயன்படுத்த, கம்ப்யூட்டரின் மைக்ரோஃபோன் ஆன் செய்யப்பட்டிருப்பதுடன் இயங்கும் நிலையிலும் இருக்க வேண்டும்.

சாதனங்களும் மைக்ரோஃபோன்களும் மாறுபடலாம், வழிமுறைகளுக்கு உங்கள் கம்ப்யூட்டரின் வழிகாட்டியைப் பார்க்கவும். மைக்ரோஃபோன் அமைப்புகள் பொதுவாக Mac சாதனத்தில் சிஸ்டம் விருப்பத்தேர்வுகளிலும், PCயில் கட்டுப்பாட்டுப் பலகத்திலும் இருக்கும்.

படி 2: குரல் டைப்பிங்கைப் பயன்படுத்துங்கள்

குரல் வழியாக டைப் செய்தல்

ஆவணத்தில் குரல் டைப்பிங்கைத் தொடங்குதல்

  1. மைக்ரோஃபோன் செயல்படுகிறதா என்று சரிபார்த்துகொள்ளவும்.
  2. Chrome உலாவியில் Google Docsஸில் ஓர் ஆவணத்தைத் திறக்கவும்.
  3. கருவிகள் அதன் பிறகு குரல் டைப்பிங் என்பதைக் கிளிக் செய்யவும். மைக்ரோஃபோன் பெட்டி ஒன்று தோன்றும்.
  4. நீங்கள் பேசத் தயாரானதும் மைக்ரோஃபோனைக் கிளிக் செய்யவும்.
  5. இயல்பான சத்தத்துடனும் வேகத்துடனும் தெளிவாகப் பேசவும் (நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்துவது தொடர்பான கூடுதல் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது).
  6. பேசி முடித்ததும் மைக்ரோஃபோனை மீண்டும் கிளிக் செய்யவும்.

Slides பேச்சாளர் குறிப்புகளில் குரல் டைப்பிங்கைத் தொடங்குதல்

  1. மைக்ரோஃபோன் செயல்படுகிறதா என்று சரிபார்த்துகொள்ளவும்.
  2. Chrome உலாவியில் Google Slidesஸில் ஒரு விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  3. கருவிகள் அதன் பிறகு பேச்சாளர் குறிப்புகளைக் குரல் வழியாக டைப் செய் என்பதைக் கிளிக் செய்யவும். பேச்சாளர் குறிப்புகள் திறந்ததும் மைக்ரோஃபோன் பெட்டி ஒன்று தோன்றும்.
  4. நீங்கள் பேசத் தயாரானதும் மைக்ரோஃபோனைக் கிளிக் செய்யவும்.
  5. இயல்பான சத்தத்துடனும் வேகத்துடனும் தெளிவாகப் பேசவும் (நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்துவது தொடர்பான கூடுதல் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது).
  6. பேசி முடித்ததும் மைக்ரோஃபோனை மீண்டும் கிளிக் செய்யவும்.

குரல் டைப்பிங் செய்யும்போது ஏற்படும் பிழைகளைச் சரிசெய்தல்

  • குரல் வழியாக டைப் செய்யும்போது ஏதேனும் பிழை ஏற்பட்டால், மைக்ரோஃபோனை ஆஃப் செய்யாமலேயே பிழை ஏற்பட்டுள்ள இடத்திற்குக் கர்சரை நகர்த்தி அதைச் சரிசெய்யலாம்.
  • பிழையைச் சரிசெய்ததும் தொடர வேண்டிய இடத்திற்குக் கர்சரை நகர்த்தவும்.
  • பரிந்துரைகளின் பட்டியலைப் பார்க்க, சாம்பல் நிறத்தில் அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகளை வலது கிளிக் செய்யவும்.

குரல் டைப்பிங் அம்சத்தை இந்த மொழிகளில் பயன்படுத்தலாம்

இந்த மொழிகளிலும் உச்சரிப்புகளிலும் குரல் டைப்பிங் செயல்படும்:

ஆஃப்ரிகான்ஸ், அம்ஹரிக், அரபிக், அரபிக் (அல்ஜீரியா), அரபிக் (பஹ்ரைன்), அரபிக் (எகிப்து), அரபிக் (இஸ்ரேல்), அரபிக் (ஜோர்டான்), அரபிக் (குவைத்), அரபிக் (லெபனான்), அரபிக் (மொராக்கோ), அரபிக் (ஓமன்), அரபிக் (பாலஸ்தீனம்), அரபிக் (கத்தார்), அரபிக் (சவூதி அரேபியா), அரபிக் (துனிசியா), அரபிக் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), ஆர்மீனியன், அஜர்பைஜானி, பஹாசா இந்தோனேசியா, பாஸ்க், வங்காளம் (பங்களாதேஷ்), வங்காளம் (இந்தியா), பல்கேரியன், கேட்டலன், சீனம் (எளிதாக்கப்பட்டது), சீனம் (மரபுவழி), சீனம் (ஹாங்காங்), குரோஷியன், செக், டேனிஷ், டச்சு, ஆங்கிலம் (ஆஸ்திரேலியா), ஆங்கிலம் (கனடா), ஆங்கிலம் (கானா), ஆங்கிலம் (இந்தியா), ஆங்கிலம் (அயர்லாந்து), ஆங்கிலம் (கென்யா), ஆங்கிலம் (நியூசிலாந்து), ஆங்கிலம் (நைஜீரியா), ஆங்கிலம் (ஃபிலிப்பைன்ஸ்), ஆங்கிலம் (தென் ஆப்பிரிக்கா), ஆங்கிலம் (டான்ஸானியா), ஆங்கிலம் (யுனைடெட் கிங்டம்), ஆங்கிலம் (அமெரிக்கா), ஃபார்சி, ஃபிலிப்பினோ, ஃபின்னிஷ் , ஃபிரெஞ்சு, காலிசியன், ஜார்ஜியன், ஜெர்மன், கிரேக்கம், குஜராத்தி, ஹீப்ரு, இந்தி, ஹங்கேரியன், ஐஸ்லாண்டிக், இத்தாலியன், இத்தாலியன் (இத்தாலி), இத்தாலியன் (சுவிட்சர்லாந்து), ஜப்பானீஸ், ஜாவனீஸ், கன்னடம், கெமர், கொரியன், லவ்ஷன், லாட்வியன், லிதுவேனியன், மலையாளம், மலேசியன், மராத்தி, நேபாளி, நார்வேஜியன், போலிஷ், போர்ச்சுகீஸ் (பிரேசில்), போர்ச்சுகீஸ் (போர்ச்சுகல்), ரோமானியன், ரஷ்யன், ஸ்லோவாக், ஸ்லோவேனியன், செர்பியன், சிங்களம், ஸ்பானிஷ், ஸ்பானிஷ் (அர்ஜென்டினா), ஸ்பானிஷ் (பொலிவியா), ஸ்பானிஷ் (சிலி), ஸ்பானிஷ் (கொலம்பியா), ஸ்பானிஷ் (கோஸ்டா ரிகா), ஸ்பானிஷ் (ஈக்வெடார்), ஸ்பானிஷ் (எல் சல்வடோர்), ஸ்பானிஷ் (ஸ்பெயின்), ஸ்பானிஷ் (அமெரிக்கா), ஸ்பானிஷ் (கவுதமாலா), ஸ்பானிஷ் (ஹோண்டுராஸ்), ஸ்பானிஷ் (லத்தீன் அமெரிக்கா), ஸ்பானிஷ் (மெக்சிகோ), ஸ்பானிஷ் (நிகரகுவா), ஸ்பானிஷ் (பனாமா), ஸ்பானிஷ் (பராகுவே), ஸ்பானிஷ் (பெரு), ஸ்பானிஷ் (புவேர்ட்டோ ரிக்கோ), ஸ்பானிஷ் (உருகுவே), ஸ்பானிஷ் (வெனிசுலா), சுண்டனீஸ், ஸ்வாஹிலி (கென்யா), ஸ்வாஹிலி (டான்ஸானியா), ஸ்வீடிஷ், தமிழ் (இந்தியா), தமிழ் (மலேசியா), தமிழ் (சிங்கப்பூர்), தமிழ் (இலங்கை), தாய், டர்கிஷ், உக்ரைனியன், உருது (இந்தியா), உருது (பாகிஸ்தான்), வியட்னாமீஸ், ஜூலூ.

நிறுத்தற்குறிகளைச் சேர்த்தல்

வெவ்வேறு சொற்றொடர்களைப் பயன்படுத்தி வாக்கியங்களில் நிறுத்தற்குறிகளைச் சேர்க்கலாம். சில மொழிகளில் குரல் டைப்பிங் மூலம் நிறுத்தற்குறிகளைச் சேர்க்க முடியாமல் போகலாம்:
 

படி 3: குரல் கட்டளைகளைப் பயன்படுத்துங்கள்

குரல் டைப்பிங்கைத் தொடங்கிய பின்னர், உங்கள் ஆவணத்தைத் திருத்தவும் வடிவமைக்கவும் கட்டளைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, "பத்தியைத் தேர்ந்தெடு", "சாய்வாக்கு" அல்லது "வரியின் கடைசிக்குச் செல்."

உதவிக்குறிப்புகள்:

  • குரல் கட்டளைகளை ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். கணக்கிற்கான மொழியும் ஆவணத்திற்கான மொழியும் ஆங்கிலமாக இருக்க வேண்டும்.
  • Slides பேச்சாளர் குறிப்புகளில் குரல் கட்டளைகளைப் பயன்படுத்த முடியாது.

வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல்

வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க, இந்தக் கட்டளைகளைச் சொல்லுங்கள்:

  • [வார்த்தை அல்லது சொற்றொடர்] என்பதைத் தேர்ந்தெடு
  • அனைத்தையும் தேர்ந்தெடு
  • பொருந்தும் வார்த்தைகள் அனைத்தையும் தேர்ந்தெடு
  • பட்டியலில் உள்ளதைத் தேர்ந்தெடு
  • தற்போதைய நிலையில் பட்டியலில் உள்ளவற்றைத் தேர்ந்தெடு
  • அடுத்த எழுத்தைத் தேர்ந்தெடு
  • அடுத்த [எண்] எழுத்துகளைத் தேர்ந்தெடு
  • கடைசி எழுத்தைத் தேர்ந்தெடு
  • கடைசி [எண்] எழுத்துகளைத் தேர்ந்தெடு
  • வரியைத் தேர்ந்தெடு
  • அடுத்த வரியைத் தேர்ந்தெடு
  • அடுத்த [எண்] வரிகளைத் தேர்ந்தெடு
  • கடைசி வரியைத் தேர்ந்தெடு
  • கடைசி [எண்] வரிகளைத் தேர்ந்தெடு
  • பத்தியைத் தேர்ந்தெடு
  • அடுத்த பத்தியைத் தேர்ந்தெடு
  • அடுத்த [எண்] பத்திகளைத் தேர்ந்தெடு
  • கடைசி பத்தியைத் தேர்ந்தெடு
  • கடைசி [எண்] பத்திகளைத் தேர்ந்தெடு
  • வார்த்தையைத் தேர்ந்தெடு
  • அடுத்த வார்த்தையைத் தேர்ந்தெடு
  • அடுத்த [எண்] வார்த்தைகளைத் தேர்ந்தெடு
  • கடைசி வார்த்தையைத் தேர்ந்தெடு
  • கடைசி [எண்] வார்த்தைகளைத் தேர்ந்தெடு
  • தேர்வுநீக்கு
  • தேர்வுநீக்கு
  • எதையும் தேர்ந்தெடுக்காதே

ஆவணத்தை வடிவமைத்தல்

ஆவணத்தை வடிவமைக்க, இந்தக் கட்டளைகளைச் சொல்லுங்கள்:

வார்த்தைகளின் வடிவமைப்பு

  • 'மேற்தலைப்பு [1–6]' வடிவமைப்பைப் பயன்படுத்து
  • 'இயல்பான உரை' வடிவமைப்பைப் பயன்படுத்து
  • 'துணைத்தலைப்பு' வடிவமைப்பைப் பயன்படுத்து
  • 'தலைப்பு' வடிவமைப்பைப் பயன்படுத்து
  • தடிமன்
  • சாய்வாக்கு
  • சாய்வு
  • அடித்தம்
  • சப்ஸ்கிரிப்ட்
  • சூப்பர்ஸ்கிரிப்ட்
  • அடிக்கோடு
  • பேரெழுத்தாக்கம்
  • தலைப்பெழுத்தாக்கம்
  • சிற்றெழுத்தாக்கம்

எழுத்துகளின் வண்ணம் & ஹைலைட் செய்தல்

  • எழுத்துகளின் வண்ணம் [வண்ணம்]
  • ஹைலைட்
  • ஹைலைட் [வண்ணம்]
  • பின்புல வண்ணம் [வண்ணம்]
  • ஹைலைட்டை அகற்று
  • பின்புல வண்ணத்தை அகற்று
உதவிக்குறிப்பு: சிவப்பு, சிவப்பு பெர்ரி, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, சியான், நீலம், கான்ஃபிளவர் நீலம், பர்பிள், மஜந்தா, கருப்பு, வெள்ளை, சாம்பல் ஆகிய வண்ணங்கள் உபயோகத்திற்குக் கிடைக்கின்றன. கருப்பு, வெள்ளை ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து வண்ணங்களுக்கும் "அடர்" அல்லது "வெளிர்" என்று சேர்க்கலாம். அத்துடன் 1-3க்குள் ஓர் எண்ணையும் சேர்க்கலாம் (சாம்பலுக்கு, 1-4). எடுத்துக்காட்டாக, “அடர் பர்பிள் 3.” "ஹைலைட்" என்று மட்டும் நீங்கள் சொன்னால் மஞ்சள் வண்ணத்தில் ஹைலைட் செய்யப்படும்.

எழுத்தின் அளவு

  • எழுத்தின் அளவைக் குறை
  • எழுத்தின் அளவை அதிகரி
  • எழுத்தின் அளவு [6-400]
  • பெரிதாக்கு
  • சிறிதாக்கு

பத்தியை வடிவமைத்தல்

  • ஓரஇடத்தைக் குறை
  • ஓரஇடத்தை அதிகரி
  • வரி இடைவெளி [1-100]
  • வரி இடைவெளி இரட்டை
  • வரி இடைவெளி ஒற்றை

சீரமைத்தல்

  • மையத்தில் சீரமை
  • ஓரத்தில் சீரமை
  • இடதுபுறம் சீரமை
  • வலதுபுறம் சீரமை
  • மையச் சீரமைப்பு
  • இடதுபுறச் சீரமைப்பு
  • வலதுபுறச் சீரமைப்பு

நெடுவரிசைகள்

  • ஒரு நெடுவரிசையில் பயன்படுத்து
  • 2 நெடுவரிசைகளில் பயன்படுத்து
  • 3 நெடுவரிசைகளில் பயன்படுத்து
  • நெடுவரிசை விருப்பங்கள்
  • நெடுவரிசை முறிப்பைச் சேர்

பட்டியல்கள்

  • பொட்டுக்குறியிட்ட பட்டியலை உருவாக்கு
  • எண்ணிடப்பட்ட பட்டியலை உருவாக்கு
  • பொட்டுக்குறியைச் சேர்
  • எண்ணைச் சேர்

வடிவமைப்பை அகற்றுதல்

  • வடிவமைப்பை அழி
  • வடிவமைப்பை அகற்று
  • தடிமனை அகற்று
  • சாய்வை அகற்று
  • அடித்தத்தை அகற்று
  • அடிக்கோட்டை அகற்று

ஆவணத்தைத் திருத்துதல்

ஆவணத்தைத் திருத்த, இந்தக் கட்டளைகளைச் சொல்லுங்கள்:

  • நகலெடு
  • வெட்டு
  • ஒட்டு
  • நீக்கு
  • கடைசி சொல்லை நீக்கு
  • [வார்த்தை அல்லது சொற்றொடர்] என்பதை நீக்கு
  • இணைப்பைச் சேர் [நீங்கள் பயன்படுத்த விரும்பும் URLலைச் சொல்லவும்]
  • இணைப்பை நகலெடு
  • இணைப்பை நீக்கு
  • பொருளடக்கத்தைச் சேர்
  • பொருளடக்கத்தை நீக்கு
  • பொருளடக்கத்தைத் திருத்து
  • கருத்தைச் சேர் [உங்கள் கருத்தைச் சொல்லவும்]
  • புத்தகக்குறியைச் சேர்
  • சமன்பாட்டைச் சேர்
  • அடிக்குறிப்பைச் சேர்
  • அடிக்குறிப்பைச் சேர்
  • மேற்குறிப்பைச் சேர்
  • கிடைமட்டக் கோட்டைச் சேர்
  • பக்க முறிப்பைச் சேர்

உதவிக்குறிப்புகள்:

  • “நீக்கு” என்ற வார்த்தையை மட்டும் சொன்னால் கர்சருக்கு முன்னால் இருக்கும் வார்த்தை நீக்கப்படும்.
  • ஒரு URLலின் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு “இணைப்பைச் சேர்” என்று சொன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவை லிங்க்காக மாறிவிடும்.

டேபிள்களைச் சேர்த்தல் & திருத்துதல்

டேபிள்களைச் சேர்க்கவும் திருத்தவும் இந்தக் கட்டளைகளைச் சொல்லுங்கள்:

  • டேபிளைச் சேர்
  • [1-20] வரிசைகள், [1-20] நெடுவரிசைகள் உள்ள டேபிளைச் சேர்
  • வரிசையைச் சேர்
  • நெடுவரிசையைச் சேர்
  • புதிய நெடுவரிசையைச் சேர்
  • புதிய நெடுவரிசையை இடதுபுறத்தில் சேர்
  • புதிய வரிசையைச் சேர்
  • புதிய வரிசையை மேலே சேர்
  • புதிய வரிசையைக் கீழே சேர்
  • நெடுவரிசையை நீக்கு
  • வரிசையை நீக்கு
  • டேபிளை நீக்கு
  • நெடுவரிசையை அகற்று
  • வரிசையை அகற்று
  • டேபிளை அகற்று
  • டேபிளில் இருந்து வெளியேறு

ஆவணத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லுதல்

ஆவணத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்ல, இந்தக் கட்டளைகளைச் சொல்லுங்கள்:

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

எடுத்துக்காட்டு:

இதற்குச் செல்

முடிவு பத்தி

இதற்குச் செல்

இதற்கு நகர்த்து

முடிவு

தொடக்கம்

பத்தி

நெடுவரிசை

கோடு

வரிசை

டேபிள்

ஆவணம்

இதற்குச் செல்

இதற்கு நகர்த்து

அடுத்த

முந்தைய

எழுத்து

நெடுவரிசை

அடிக்குறிப்பு

வடிவமைப்பு மாற்றம்

தலைப்பு

தலைப்பு [1-6]

படம்

கோடு

இணைப்பு

பட்டியல்

பட்டியல் உறுப்பு

எழுத்துப்பிழை

பத்தி

வரிசை

டேபிள்

வார்த்தை

பக்கம்

செல்

நகர்த்து

முன்னே

பின்னே

[எண்] எழுத்துகள்

[எண்] வார்த்தைகள்

செல்

நகர்த்து

மேலே

கீழே

[எண்] வரிகள்

[எண்] பத்திகள்

நகர்த்துதல்

  • கீழே செல்
  • மேலே செல்

குரல் டைப்பிங்கை நிறுத்துதல்

குரல் டைப்பிங்கை நிறுத்த, "கேட்பதை நிறுத்து" என்று சொல்லவும்.

குரல் டைப்பிங்கை மீண்டும் தொடங்குதல்

பத்தியின் முடிவுக்குக் கர்சரை நகர்த்திய பின்னர் மீண்டும் குரல் டைப்பிங்கைத் தொடங்க, "மீண்டும் தொடங்கு" என்று கூறவும்.

குறிப்பிட்ட வார்த்தை/சொற்றொடரின் முடிவுக்குக் கர்சரை நகர்த்த, "[வார்த்தை அல்லது சொற்றொடர்] என்பதிலிருந்து மீண்டும் தொடங்கு" என்று கூறவும்.

குரல் டைப்பிங்கை மீண்டும் தொடங்க, இந்தக் கட்டளைகளை நீங்கள் சொல்லலாம்:

  • மீண்டும் தொடங்கு
  • [வார்த்தை அல்லது சொற்றொடர்] என்பதிலிருந்து மீண்டும் தொடங்கு
  • பத்தியின் முடிவுக்குச் செல்
  • பத்தியின் முடிவுக்கு நகர்த்து
  • வரியின் முடிவுக்குச் செல்
  • வரியின் முடிவுக்கு நகர்த்து
  • [வார்த்தை] என்பதற்குச் செல்
குரல் கட்டளைகள் தொடர்பான உதவியைத் திறப்பதற்கான கட்டளைகள்

குரல் கட்டளைகளின் பட்டியலை ஆவணத்தில் திறக்க, இந்தக் கட்டளைகளைச் சொல்லுங்கள்:

  • குரல் டைப்பிங் உதவி
  • குரல் கட்டளைகளின் பட்டியல்
  • குரல் கட்டளைகள் அனைத்தையும் காட்டு
வாசித்தல் (அணுகலம்சத்திற்காக)

இந்தக் கட்டளைகளைப் பயன்படுத்த, ஸ்கிரீன் ரீடர் உதவியை இயக்கவும். ஸ்கிரீன் ரீடர் வாசிப்பவை உங்கள் ஆவணத்தில் டைப் செய்யப்படாமல் இருக்க ஹெட்ஃபோன்களை அணிவது சிறந்தது.

  • கர்சர் இருக்குமிடத்தில் உள்ளதை வாசி
  • கர்சர் இருக்கும் இடத்திலிருந்து வாசி
  • தேர்ந்தெடுக்கப்பட்டதை வாசி
  • தேர்ந்தெடுக்கப்பட்டதன் வடிவமைப்பை வாசி
  • டேபிள் வரிசை மற்றும் நெடுவரிசையின் தலைப்புகளை வாசி
  • டேபிள் கலம் இருக்குமிடத்தில் உள்ளதை வாசி
  • டேபிள் நெடுவரிசையின் தலைப்பை வாசி
  • டேபிள் வரிசையின் தலைப்பை வாசி

பிழையறிந்து திருத்துதல்

குரல் டைப்பிங் செயல்படாவிட்டால் இந்தப் படிகளைப் பின்பற்றுங்கள்.

"நீங்கள் பேசுவது சரியாகக் கேட்கவில்லை"

"நீங்கள் பேசுவது சரியாகக் கேட்கவில்லை" எனும் பிழைச் செய்தி காட்டப்பட்டால் இவற்றைச் செய்து பார்க்கவும்:

  • சத்தமில்லாத இடத்திற்குச் செல்லவும்.
  • வெளிப்புற மைக்ரோஃபோனைப் பயன்படுத்தவும்.
  • மைக்ரோஃபோனில் உள்ளீட்டு ஒலியளவை மாற்றவும்.

மைக்ரோஃபோன் இயங்கவில்லை

உங்கள் கம்ப்யூட்டரில் மைக்ரோஃபோன் இயங்காவிட்டால் இவற்றைச் செய்து பார்க்கவும்:

  • மைக்ரோஃபோன் பழுதடையாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • கம்ப்யூட்டரின் சிஸ்டம் விருப்பத்தேர்வுகளில் மைக்ரோஃபோன் அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
  • கம்ப்யூட்டரில் உங்கள் மைக்ரோஃபோன் இணைக்கப்பட்டிருப்பதையும் வேறெந்த ஆப்ஸும் அதைப் பயன்படுத்தவில்லை என்பதையும் சரிபார்க்கவும்.
  • சத்தமில்லாத இடத்திற்குச் செல்லவும்.
  • கம்ப்யூட்டரை மீண்டும் தொடங்கவும்.

குரல் கட்டளைகள் செயல்படவில்லை

குரல் கட்டளைகள் செயல்படாவிட்டால் இவற்றைச் செய்து பார்க்கவும்:

  • இன்னும் மெதுவாகவும் தெளிவாகவும் பேசவும்
  • ஒவ்வொரு கட்டளையையும் நிறுத்தி நிதானமாகச் சொல்லவும். நீங்கள் சொல்லும் கட்டளைகள் செயலாக்கப்படுவதற்கு முன்னர் அவற்றின் வார்த்தைகள் ஆவணத்தில் ஒரு வினாடி காட்டப்படலாம். எடுத்துக்காட்டாக, "அனைத்தையும் தேர்ந்தெடு" என்று நீங்கள் சொன்னால் வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே "அனைத்தையும் தேர்ந்தெடு" என்பது திரையில் காட்டப்படும்.
  • மிகவும் சமீபத்திய கட்டளை அடங்கிய குமிழை மைக்ரோஃபோன் காட்டும். Docs அல்லது Slides சரியான கட்டளையைக் கேட்டதா என்பதைச் சரிபார்த்துகொள்ளவும். இல்லையெனில் நீங்கள் “செயல்தவிர்” என்று சொல்லலாம்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6698342579461116014
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false