தரவுத் தொகுப்புகள் & விரிதாள்கள் ஆகியவற்றை இறக்குதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

விரிதாளை .xls, .csv, .txt, போன்ற பல கோப்பு வடிவங்களில் இறக்கலாம்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. தாளைத் திறக்கவும் அல்லது உருவாக்கவும்.
  3. மேற்புறத்தில் கோப்பு அதன் பிறகு இறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. இந்தக் கோப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்த கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படாத கோப்பைத் தேர்வு செய்யவும்:
    • .xls (Microsoft® Office 95ஐ விட புதிதாக இருந்தால்)
    • .xlsx
    • .xlsm
    • .xlt
    • .xltx
    • .xltm
    • .ods
    • .csv
    • .txt
    • .tsv
    • .tab
  5. இறக்குவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். எல்லாக் கோப்பு வகைகளுமே ஆறு விருப்பங்களைக் கொண்டிருக்காது:
    • புதிய விரிதாளை உருவாக்கு: புதிய உலாவல் தாவலில் இறக்கிய தரவிலிருந்து விரிதாளை உருவாக்கலாம்.
    • புதிய தாள்களைச் செருகு: இறக்கிய தரவுடன் கூடிய புதிய தாள்களை ஏற்கெனவே உள்ள விரிதாளில் சேர்க்கும்.
    • விரிதாளை மாற்றியமை: இறக்கிய கோப்பில் உள்ள தரவின் மூலம் திறந்த விரிதாளை மாற்றியமைக்கலாம்.
    • தற்போதைய தாளை மாற்றியமை: இறக்கிய தரவின் மூலம் தற்போதைய தாளின் உள்ளடக்கங்களை மாற்றியமைக்கலாம்.
    • தாளில் வரிசைகளைச் சேர்: தற்போதைய தாளில் ஏதேனும் தரவுடன் கூடிய கடைசி வரிசைக்குப் பிறகு இறக்கிய தரவைச் சேர்க்கும்.
    • தேர்ந்தெடுத்த கலத்தில் தொடங்கி தரவை மாற்றியமை: இறக்கிய தரவு மூலம் தேர்ந்தெடுத்த கலங்களின் வரம்பு வரை தரவை மாற்றியமைக்கலாம்.
  6. விருப்பத்தேர்வு: "பிரிப்பான் எழுத்துக்குறிக்குக்" கீழ் .csv அல்லது .txt போன்ற எளிய உரையைக் கொண்ட கோப்பை இறக்கினால் கலங்களைப் பிரிப்பதற்கு எந்த எழுத்தை அல்லது சின்னத்தை Google Sheets பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேர்வு செய்யலாம்.
    • தானாகவே கண்டறி: தரவுத் தொகுப்பைப் பிரிப்பதற்கான வழிமுறையை இந்த அம்சம் தானாகவே கண்டறியும். உதாரணமாக நிலையான அகலம் அமைக்கப்பட்ட கோப்பை இது கண்டறியும்.
    • தாவல்
    • கமா
    • பிரத்தியேகமானது: தரவைப் பிரிப்பதற்கு பிரத்தியேக எழுத்தைத் தேர்தெடுக்கலாம். 
  7. இறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10541995608747718073
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false