உங்கள் தரவை வரிசைப்படுத்தி வடிகட்டுதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

அகர வரிசையிலும் எண் வரிசையிலும் தரவை வரிசைப்படுத்தலாம் அல்லது நீங்கள் பார்க்க விரும்பாத தரவை வடிப்பான்களைப் பயன்படுத்தி மறைக்கலாம்.

Sort and Filter Your Data

மாதிரி விரிதாளைப் பெற்று வீடியோவைப் பின்பற்றிச் செய்ய, “நகலெடு” என்பதைக் கிளிக் செய்யவும்.

நகலெடு

அகர வரிசை/எண் வரிசையில் தரவை வரிசைப்படுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. நீங்கள் வரிசைப்படுத்த விரும்பும் கலங்களின் குழுவை ஹைலைட் செய்யவும்.
  3. உங்கள் தாளில் தலைப்பு வரிசை இருந்தால் முதல் வரிசையை நிலையாக்கவும்.
  4. தரவு அதன் பிறகு வரம்பை வரிசைப்படுத்து அதன் பிறகுவரம்பின்படி வரிசைப்படுத்துவதற்கான மேம்பட்ட விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. நெடுவரிசைகளில் தலைப்புகள் இருந்தால் தரவில் தலைப்பு வரிசை உள்ளது என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. நீங்கள் முதலில் வரிசைப்படுத்த விரும்பும் நெடுவரிசையைத் தேர்ந்தெடுத்து, வரிசைப்படுத்தும் முறையைத் தேர்வுசெய்யவும்.
    • வரிசைப்படுத்துவதற்கான மற்றொரு விதியைச் சேர்க்க வேறு வரிசைப்படுத்தல் நெடுவரிசையைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. வரிசைப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

தாள் முழுவதையும் வரிசைப்படுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே, நீங்கள் வரிசைப்படுத்த விரும்பும் நெடுவரிசையின் எழுத்தை வலது கிளிக் செய்யவும்.
  3. A-Z முறையில் தாளை வரிசைப்படுத்து என்பதையோ Z-A முறையில் தாளை வரிசைப்படுத்து என்பதையோ கிளிக் செய்யவும்.

வண்ணத்தின்படி வரிசைப்படுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. கலங்களின் வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. தரவு அதன் பிறகு வடிப்பானை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வடிப்பான் விருப்பங்களைப் பார்க்க, வரம்பின் மேற்பகுதிக்குச் சென்று வடிப்பான் வடிப்பான் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வண்ணத்தின்படி வரிசைப்படுத்துதல்: எந்த உரை/நிரப்பு வண்ணத்தை வடிகட்ட வேண்டும் அல்லது வரிசைப்படுத்த வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும். வரிசைப்படுத்துவதற்கு நீங்கள் தேர்வுசெய்த வண்ணத்தைக் கொண்ட கலங்கள் வரம்பின் மேற்பகுதிக்கு நகர்த்தப்படும். நீங்கள் வடிவமைப்பு வண்ணங்களுக்கான நிபந்தனையின்படி வரிசைப்படுத்தலாம். ஆனால் வேறுபடுத்தும் வண்ணங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்த முடியாது.
  6. வடிப்பானை முடக்க தரவு அதன் பிறகு வடிப்பானை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

தரவை வடிகட்டுதல்

முக்கியம்: வடிப்பானைச் சேர்க்கும்போது உங்கள் விரிதாளுக்கான அணுகல் உள்ள அனைவராலும் அந்த வடிப்பானைப் பார்க்க முடியும். உங்கள் விரிதாளைத் திருத்துவதற்கான அனுமதி உள்ள அனைவராலும் அந்த வடிப்பானை மாற்ற முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. வடிப்பானை உருவாக்க ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • கலங்களின் வரம்பைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு தரவு அதன் பிறகு வடிப்பானை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். 
    • கலத்தின் மீதோ கலங்களின் வரம்பின் மீதோ வலது கிளிக் செய்து வடிப்பானை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வடிப்பான் விருப்பங்களைப் பார்க்க, வரம்பின் மேற்பகுதிக்குச் சென்று வடிகட்டுவதற்கான ஐகானை வடிப்பான் பட்டியல் கிளிக் செய்யவும்.
    • நிபந்தனையின்படி வடிகட்டுதல்: நிபந்தனைகளைத் தேர்வுசெய்யலாம் அல்லது பிரத்தியேகச் சூத்திரங்களை நீங்களே உருவாக்கலாம்.

      பிரத்தியேகச் சூத்திரத்திற்கான உதாரணங்கள்

      தரவு வரம்பிற்குள் தனித்துவ மதிப்புகளைத் தேடுதல்
      • பிரத்தியேகச் சூத்திரமானது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
      • =COUNTIF(தரவு_வரம்பு, தரவு_வரம்பு)=1 என்று டைப் செய்யவும்
      தரவு வரம்பிற்குள் “நன்று” அல்லது “சிறப்பு” என்பதற்குப் பொருந்தும் வார்த்தையைத் தேடுதல்
      • பிரத்தியேகச் சூத்திரமானது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
      • =OR(REGEXMATCH(தரவு_வரம்பு, "நன்று"), REGEXMATCH(தரவு_வரம்பு, "சிறப்பு")) என்று டைப் செய்யவும்
    • மதிப்புகளின்படி வடிகட்டுதல்: தரவுப் புள்ளிகளை மறைக்க, தரவுப் புள்ளிக்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கி, சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
      • வடிப்பானை உருவாக்கி கல மதிப்பின்படி வடிகட்ட, கலத்தின் மீது வலது கிளிக் செய்தபிறகு கல மதிப்பின்படி வடிகட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • தேடுதல்: தேடல் பெட்டியில் டைப் செய்து தரவுப் புள்ளிகளைத் தேடவும்.
    • வண்ணத்தின்படி வடிகட்டுதல்: எந்த வார்த்தை வண்ணம் அல்லது நிரப்பு வண்ணத்தை வடிகட்ட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும். நிபந்தனை வடிவமைப்பின்படி வண்ணங்களை வடிகட்டலாம், ஆனால் மாற்று வண்ணங்களை வடிகட்ட முடியாது.
  4. வடிப்பானை அகற்ற ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • தரவு அதன் பிறகு வடிப்பானை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஏதேனும் ஒரு கலத்தின் மீது வலது கிளிக் செய்து, வடிப்பானை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

வடிகட்டியபிறகு, அட்டவணையில் உள்ள மொத்த வரிசைகளில் எத்தனை வரிசைகள் காட்டப்படுகின்றன என்ற எண்ணிக்கை கீழ் வலதுபுறத்தில் காட்டப்படும்.

உதவிக்குறிப்பு: ஒன்றிணைக்கப்பட்ட கலங்களிலும் ஃபில்ட்டர்களைப் பயன்படுத்தலாம். வரிசைகள் அல்லது நெடுவரிசைகளை எப்படி ஒன்றிணைப்பது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஃபில்ட்டர் காட்சியை உருவாக்குதல், சேமித்தல், நீக்குதல் அல்லது பகிர்தல்

முக்கியம்: விரிதாளைப் பார்ப்பதற்கு மட்டுமே உங்களுக்கு அனுமதி இருந்தால் நீங்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய தற்காலிக ஃபில்டர் காட்சியை உருவாக்கலாம். உங்கள் ஃபில்டர் காட்சி சேமிக்கப்படாது.

கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் விரிதாளில் நீங்கள் தரவை வடிகட்டலாம், இதனால் வடிகட்டப்பட்ட தரவு மட்டுமே விரிதாளில் காட்டப்படும். வடிப்பான் காட்சியில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் தானாகவே சேமிக்கப்படும்.

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. தரவு அதன் பிறகு வடிப்பான் காட்சிகள் அதன் பிறகு புதிய வடிப்பான் காட்சியை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தரவை வரிசைப்படுத்தி வடிகட்டவும்.
  4. உங்கள் வடிப்பான் காட்சியை மூட மேல் வலதுபுறத்தில் உள்ள மூடுக மூடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் வடிப்பான் காட்சி தானாகச் சேமிக்கப்படும்.

ஃபில்டர் காட்சியை நீக்கவோ நகலெடுக்கவோ, மேல் வலதுபுறத்தில் உள்ள விருப்பத்தேர்வுகள் அமைப்புகள் அதன் பிறகு நீக்கு அல்லது நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

அனைத்து வடிப்பான்களையும் அகற்ற, ஒவ்வொரு வடிப்பான் காட்சிக்கும் சென்று 'விருப்பங்கள்' அமைப்புகள் அதன் பிறகு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: வடிப்பான் காட்சிகளின் வரிசையை மாற்ற முடியாது.

ஏற்கெனவே இருக்கும் ஃபில்டர் காட்சியைப் பார்த்தல்

கவனத்திற்கு: ஒரே நேரத்தில் ஒரு வடிப்பான் காட்சியை மட்டுமே பயன்படுத்த முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. தரவு அதன் பிறகு வடிப்பான் காட்சிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஃபில்டர் காட்சியைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உங்கள் வடிப்பான் விரிதாளில் பயன்படுத்தப்படும்.
  5. உங்கள் ஃபில்டர் காட்சியை மூட, மேல் வலதுபுறத்தில் உள்ள மூடுவதற்கான ஐகானை மூடு கிளிக் செய்யவும்.

ஒரு ஃபில்டரை ஃபில்டர் காட்சியாகச் சேமித்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. வடிப்பானைப் பயன்படுத்தவும்.
  3. தரவு அதன் பிறகு வடிப்பான் காட்சிகள் அதன் பிறகு வடிப்பான் காட்சியாகச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஃபில்டர் காட்சியின் பெயரை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. தரவு அதன் பிறகு வடிப்பான் காட்சிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஃபில்டர் காட்சியைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. தாளின் மேல் இடதுபுறத்தில் உள்ள "பெயர்" என்பதற்கு அடுத்துள்ள ஃபில்டர் காட்சியின் பெயரைக் கிளிக் செய்து புதிய பெயரை டைப் செய்யவும்.
  5. Enter பட்டனை அழுத்தவும்.
வடிப்பான் காட்சிக்கான இணைப்பைப் பகிர்தல் & அனுப்புதல்
  1. On your computer, open a spreadsheet in Google Sheets.
  2. Apply the filter view .
  3. Copy the URL.
  4. Share the filter view link.

வடிப்பான்கள் மற்றும் வடிப்பான் காட்சிகள் குறித்து மேலும் அறிக

வடிப்பான்கள் மற்றும் வடிப்பான் காட்சிகள் மூலம் விரிதாளில் உள்ள தரவுத் தொகுப்பை நீங்கள் பகுப்பாய்வு செய்யலாம்.

வடிப்பான்களின் மூலம்:

  • பிறர் உங்கள் விரிதாளைத் திறக்கும்போது குறிப்பிட்ட வடிப்பானைக் காட்டலாம்.
  • வடிப்பானைப் பயன்படுத்திய பிறகு தரவை வரிசைப்படுத்தலாம்.

வடிப்பான் காட்சிகள் மூலம்:

  • பல வடிப்பான்களைச் சேமிக்கலாம்.
  • வடிப்பானுக்குப் பெயரிடலாம்.
  • ஒரே நேரத்தில் பலர் பல்வேறு வடிப்பான் காட்சிகளைப் பார்க்க அனுமதிக்கலாம்.
  • பிறருடன் வெவ்வேறு வடிப்பான்களைப் பகிரலாம்.
  • ஒரே மாதிரியான விதிகளைக் கொண்ட மற்றொரு காட்சியை நகலெடுக்கலாம் அல்லது உருவாக்கலாம்.
  • திருத்துவதற்கான அணுகல் இல்லாத விரிதாளை வடிகட்டலாம் வரிசைப்படுத்தலாம். இந்தச் சூழலில் ஃபில்டர் காட்சி தற்காலிகமாக உருவாக்கப்படும்.

உதவிக்குறிப்பு: ஃபில்டர் செய்யப்பட்ட வரம்பிற்குள் உள்ள ஒரு கலத்தைக் குறிப்பிடும் சூத்திரம் இருந்தால், அந்த வரம்பை வரிசைப்படுத்துவது சூத்திரத்தை மாற்றாது என்பதை நினைவில் கொள்ளவும். உதாரணத்திற்கு, B2 என்பது ஃபில்டர் செய்யப்பட்ட வரம்பிற்குள் உள்ளவரை "=B2" என்பது "=B2" என்றே இருக்கும்.

 

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4632119846677937491
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false