உங்கள் படிவத்திற்கான விதிமுறைகளை அமைக்கவும்

மக்கள் படிவத்தை நிரப்புகையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை நீங்கள் உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் மின்னஞ்சல் முகவரிகளைக் கேட்கையில், சரியான வடிவில் மட்டுமே மின்னஞ்சல் முகவரிகள் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்ய முடியும்.

கேள்விக்கான விதிகளை அமைக்க

  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒருவகை கேள்விகளைச் சேர்க்கவும்:
    • குறுகிய பதில்
    • பத்தி
    • செக்பாக்ஸ்கள்
  3. மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்யவும்.
  4. பதிலைச் சரிபார்ஐக் கிளிக் செய்யவும்.
  5. நீங்கள் விரும்பும் விதி வகையைத் தேர்வு செய்யவும்.
  6. வலப்பக்க இறுதியில், உங்கள் விதிமுறைகளை மீறக்கூடிய பதில் உள்ளிட்டப்படும் போது காணப்படும் வகையில் பிழைச் செய்தியை உள்ளிடவும்.

விதிகளின் வகைகள்

பதில் சரிபார்த்தலை அனுமதிக்கும் ஒவ்வொரு வகை கேள்வியும் வெவ்வேறு அமைப்புகளைக் கொண்டிருக்கும்.

சுருக்கமான பதில்
  • எண்:
    • எண் ஒப்பீடு ஆப்பரேட்டர்கள்
      • உதாரணம்: 50ஐ விட அதிகமாக அல்லது சமமாக இருக்கும் எண்
    • இடைப்பட்ட எண்
      • உதாரணம்: 21க்கும் 42க்கும் இடையில் உள்ள ஓர் எண்
    • இதற்கு இடையில் இல்லாத எண்
    • எண்
    • முழு எண்
  • வார்த்தை:
    • இதைக் கொண்டிருப்பவை
      • உதாரணம்: பதில்களில் "candy” என்ற வார்த்தை இருப்பதை உறுதிசெய்துகொள்ளுதல்.
    • இது இல்லாதவை
    • மின்னஞ்சல் முகவரி: பதிலானது மின்னஞ்சல் முகவரி வடிவத்தில் இருக்க வேண்டும்.
    • URL: பதிலானது URL வடிவத்தில் இருக்க வேண்டும்.
  • நீளம்: அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச எழுத்து எண்ணிக்கை தேவை.
    • உதாரணம்: பதில்களை அதிகபட்சம் 500 எழுத்துகளுக்குள் இருக்குமாறு வரம்பிடுதல் அல்லது குறைந்தது 200 எழுத்துகள் தேவை என வரையறுத்தல்.
  • ரெகுலர் எக்ஸ்ப்ரெஷன்: நீங்கள் தேர்வுசெய்யும் குறிப்பிட்ட சூத்திரங்களுக்குப் பொருந்தும் வகையில் பதில் வார்த்தைகள் இருக்க வேண்டும். ரெகுலர் எக்ஸ்ப்ரெஷன்கள் பற்றி மேலும் அறிக.
    • உதாரணம்: பதிலானது 10 இலக்க ஃபோன் எண்ணாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இலக்கமும் 0–9க்குள் இருக்க வேண்டும்.
      • உள்ளீடு: ரெகுலர் எக்ஸ்ப்ரெஷன் பொருத்தங்கள் [0-9]{10}
      • எதிர்பார்க்கப்படும் பதில்: 1234567890
பத்தி
  • நீளம்: அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச எழுத்து எண்ணிக்கை தேவை.
    • உதாரணம்: பதில்களை அதிகபட்சம் 500 எழுத்துகளுக்குள் இருக்குமாறு வரம்பிடுதல் அல்லது குறைந்தது 200 எழுத்துகள் தேவை என வரையறுத்தல்.
  • ரெகுலர் எக்ஸ்ப்ரெஷன்: நீங்கள் தேர்வு செய்யும் சில குறிப்பிட்ட சூத்திரங்களுக்குப் பொருந்தும் வகையில் பதில்களின் உரைகள் இருக்க வேண்டும். ரெகுலர் எக்ஸ்ப்ரெஷன்ஸ் பற்றி மேலும் அறிக.
செக்பாக்ஸ்கள்
  • குறைந்தபட்சம் தேர்ந்தெடுக்க வேண்டியது: குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பெட்டிகளைத் தேர்வு செய்ய அமைக்கவும். சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெட்டிகளாவது தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிபடுத்தவும்.
  • அதிகதபட்சம் தேர்ந்தெடுக்க வேண்டியது: அதிகபட்சம் தேர்வு செய்யக்கூடிய பெட்டிகளை அமைக்கவும்.
  • சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்: தேர்வு செய்ய வேண்டிய பெட்டிகளின் எண்ணிக்கையை குறிப்பிடவும்.

ரெகுலர் எக்ஸ்ப்ரெஷன்ஸ்

ரெகுலர் எக்ஸ்ப்ரெஷன் எனப்படும் குறிப்பிடத்தக்க வகை அமைப்புடன் பொருந்தக்கூடிய பதில்கள் உங்களுக்குத் தேவைப்படலாம். ரெகுலர் எக்ஸ்ப்ரெஷன்கள் பதில்களில் பேட்டர்ன்களைத் தேடும்.

ரெகுலர் எக்ஸ்ப்ரெஷன்ஸ் எடுத்துக்காட்டுகள்
கீழே உள்ள அட்டவணை Google Docs ஆதரிக்கும் சில எக்ஸ்ப்ரெஷன்களின் மாதிரியைக் காண்பிக்கிறது. இருப்பினும், இன்னும் பல ஆதிரிக்கப்பட்ட எக்ஸ்ப்ரெஷன்களையும் பயனர்கள் பயன்படுத்தலாம்.
எக்ஸ்ப்ரெஷன் விளக்கம் எடுத்துக்காட்டு பொருத்தங்கள் பொருந்தாதவை
. முற்றுப்புள்ளி கொடுக்கப்பட்ட எந்தவொரு எழுத்தையும் குறிக்கும். d. do, dog, dg, ads fog, jog
* எழுத்திற்குப் பின்னால் இருக்கும் நட்சத்திரம் 0 அல்லது அதற்கு மேற்பட்ட முறை காட்டப்படும் அந்த எழுத்தைத் தேடுவதைக் குறிக்கும். do*g dog, dg, dooog dOg, doug
+ எழுத்திற்குப் பின்னால் இருக்கும் கூட்டல் குறி 1 அல்லது அதற்கு மேற்பட்ட முறை காட்டப்படும் அந்த எழுத்தைத் தேடுவதைக் குறிக்கும். do+g dog, dooog dg, dOg, doug
? முந்தைய எக்ஸ்ப்ரெஷன் விருப்பத்திற்குரியது. do?g dg, dog dOg, doug
^ ரெகுலர் எக்ஸ்ப்ரெஷனின் முன்னால் காரெட் குறி எழுதப்பட வேண்டும். இது காரெட் குறிக்கு பின்னால் வரும் எழுத்து(கள்)/வரிசையுடன் சரம் துவங்குவதைக் குறிக்கும். ^[dh]og dog, hog A dog, his hog
$ டாலர் குறி ரெகுலர் எக்ஸ்ப்ரெஷனுக்கு இறுதியில் எழுதப்பட வேண்டும். இது டாலர் குறிக்கு முன்னால் வரும் எழுத்து(கள்)/வரிசையுடன் சரம் முடிவடைவதைக் குறிக்கும். [dh]og$ dog, hog, hot dog dogs, hog, doggy
{A, B} முந்தைய எக்ஸ்ப்ரெஷன் A - B முறைகளுக்கு இடையில் மீண்டும் காட்டப்படும். இதில் A, B ஆகியவை எண்கள். d(o{1,2})g dog, doog dg, dooog, dOg
[x], [xa], [xa5] கொடுக்கப்பட்ட எழுத்தில்(எழுத்துகளில்) ஒன்றாவது தற்போதைய நிலையில் காட்டப்பட வேண்டும் என்பதை எழுத்து அமைப்பு குறிக்கும். பெரும்பாலான பகுதிக்கு, எக்ஸ்ப்ரெஷன்களில் முன்பு குறிப்பிட்ட எழுத்துகள் உட்பட அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் எந்த எழுத்துகளும் சரியானவையே: [xa,$5Gg.] d[ou]g dog, dug dg, dOg, dooog
[a-z] எழுத்து அமைப்பு கொடுக்கப்பட்ட எழுத்துகளின் வரம்பிற்குள் இருக்கும் எழுத்தைத் தேடுவதைக் குறிக்கும். பொதுவான வரம்புகளில் a-z, A-Z, 0-9 ஆகியவை அடங்கும். வரம்புகளை ஒன்றிணைத்து ஒரே வரம்பாக மாற்றலாம்: [a-zA-Z0-9]. வரம்புகளை (முன்பே குறிப்பிட்ட) எழுத்து அமைப்புகளோடும் ஒன்றிணைக்கலாம்: [a-zA-Z,&*]. d[o-u]g dog, dug, dpg, drg dg, dOg, dag
[^a-fDEF] ^ என்பதில் தொடங்கும் எழுத்து அமைப்பு கொடுக்கப்பட்ட அமைப்பிற்குள் இல்லாத எழுத்தைத் தேடுவதைக் குறிக்கும். d[^aeu]g dog, dOg, dig, d$g dg, dag, deg, dug
\s எந்தவொரு இடைவெளி எழுத்தும். d\sg d g, d[TAB]g dg, dog, doug

குறிப்பு: ரெகுலர் எக்ஸ்ப்ரெஷனில் ^ மற்றும் $ போன்ற குறிப்பிட்ட அர்த்தத்தைக் கொண்டிருக்கும் ஏதேனும் எழுத்துகளின் உண்மையான நேர்வுகளைத் தேட முயற்சிக்கும் போது, உங்கள் தேடல் வினவலில் உள்ள எழுத்தை அதன் முன் ஒரு பேக்ஸ்லாஷை இடுவதன் மூலம் "எஸ்கேப்" செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, $ எழுத்தின் ஒரு நேர்வைத் தேட விரும்பினால், \$ என்று எழுத வேண்டும்.

ஒரு விரித்தாளில் எவ்வாறு ரெகுலர் எக்ஸ்ப்ரெஷன்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கு ஓரிரு எடுத்துக்காட்டுக்கள் கீழே உள்ளன:

டாலர் தொகைகளைக் கொண்டிருக்கும் கலங்களைத் தேட

கண்டறி பட்டியில் பின்வருவதை உள்ளிடவும்: ^\$([0-9,]+)?[.][0-9]+

இது டாலர் தொகையைக் குறிக்கும். இதில் முதல் எண் பூஜ்ஜியம் அல்லது அதற்கு மேற்பட்ட முறை வரும் 0-9க்கு இடையில் ஏதேனும் ஓர் எண்/காற்புள்ளி, அதற்கடுத்து [.], பிறகு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை காட்டப்படும் 0-9க்கு இடையில் ஏதேனும் ஓர் எண்ணைக் குறிக்கிறது. இந்தத் தேடல் பின்வருவனவற்றில் எதையேனும் திருப்பியளிக்கும்: $4.666, $17.86, $7.76, $.54, $900,001.00, $523,877,231.56

யு.எஸ் அஞ்சல் குறியீடுகளைக் கொண்டிருக்கும் கலங்களைத் தேட

கண்டறி பட்டியில் பின்வருவதை உள்ளிடவும்: [0-9]{5}(-[0-9]{4})?

இது யூஎஸ் அஞ்சல் குறியீட்டைக் குறிக்கும். இதில் ஐந்து எண்களும் விரும்பினால் ஹைஃபன் & கூடுதலாக நான்கு எண்களும் இருக்கும்.

சிற்றெழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்டிருக்கும் கலங்களைத் தேடுதல்

கண்டறி பட்டியில் பின்வருவதை உள்ளிடவும்: ^[a-z].*

இது சிற்றெழுத்தில் தொடங்கி, அதற்கடுத்து 0 அல்லது அதற்கு மேற்பட்ட முறை வரும் வேறொரு எழுத்தைக் கொண்டிருக்கும் கலத்தைக் குறிக்கும். இந்தத் தேடல் பின்வருவனவற்றில் எதையேனும் திருப்பியளிக்கும்: bob, jim, gEORGE, marTin

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14721516652531895218
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false