எண்ணிடப்பட்ட பட்டியல், பொட்டுக்குறியிடப்பட்ட பட்டியல் அல்லது சரிபார்ப்புப் பட்டியலைச் சேர்த்தல்

Google Docsஸிலும் Slidesஸிலும் பொட்டுக்குறியிடப்பட்ட/எண்ணிடப்பட்ட பட்டியல்களைச் சேர்க்கலாம் பிரத்தியேகமாக்கலாம். அத்துடன் Google Docsஸில் சரிபார்ப்புப் பட்டியல்களையும் சேர்க்கலாம்.

ஒரு பட்டியலைச் சேர்த்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Docs அல்லது Slidesஸில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  2. நீங்கள் பட்டியலைச் சேர்க்க விரும்பும் பக்கம் அல்லது ஸ்லைடைக் கிளிக் செய்யவும்.
  3. கருவிப்பட்டியில், பட்டியல் வகையைத் தேர்வு செய்யவும். அது காட்டப்படவில்லை எனில் மேலும் மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • எண்ணிடப்பட்ட பட்டியல் எண்ணிடப்பட்ட பட்டியல்
    • பொட்டுக்குறியிட்ட பட்டியல் பொட்டுக்குறியிட்ட பட்டியல்
    • சரிபார்ப்புப் பட்டியல்  (Google Docsஸில் மட்டும் இருக்கும்)
  4. விருப்பத்திற்குரியது:
    • ஒரு பட்டியலுக்குள் பட்டியலைத் தொடங்க, உங்கள் விசைப்பலகையில் Tabஐக் கிளிக் செய்யவும். புதிய பட்டியல் ஓரம் தள்ளப்படும்.
    • முதன்மைப் பட்டியலுக்குச் செல்ல, கீபோர்டில் Enter விசையை இருமுறை அழுத்தவும். 

பட்டியலைத் திருத்துதல்

பட்டியலின் பொட்டுக்குறி வகை, ஓரஇடங்கள், முன்ஒட்டுக்கள் மற்றும் பின்ஒட்டுக்களை நீங்கள் மாற்றலாம்.

பட்டியல் வகை & வண்ணத்தை மாற்றல்

பட்டியலின் வகையை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தையோ Slidesஸில் விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  2. எண், பொட்டுக்குறி, செக்பாக்ஸ் (Google Docsஸில் மட்டும் இருக்கும்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே, வடிவம் அதன் பிறகு பொட்டுக்குறிகள் & எண்ணிடல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு புதிய பொட்டுக்குறி வகையைத் தேர்வு செய்யவும்:
    • பட்டியல் விருப்பங்கள்: பிரத்தியேகமான பொட்டுக்குறியைச் செய்ய, மேலும் பொட்டுக்குறிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • எண்ணிடப்பட்ட பட்டியல்
    • பொட்டுக்குறியிட்ட பட்டியல்
    • சரிபார்ப்புப் பட்டியல்: அடித்தத்துடனோ அடித்தம் இல்லாமலோ ஒரு சரிபார்ப்புப் பட்டியலை உருவாக்கவும்.

பட்டியலின் வண்ணத்தை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தையோ Slidesஸில் விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  2. எண், பொட்டுக்குறி, செக்பாக்ஸ் (Google Docsஸில் மட்டும் இருக்கும்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கிளிக் செய்யவும்.
  3. கருவிப்பட்டியில் உள்ள உரை வண்ணம் வண்ண உரை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆவணங்கள் & ஸ்லைடுகள்: எண்ணிடப்பட்ட பட்டியலை மீண்டும் துவங்கவும்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Docs அல்லது Slidesஸில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  2. முதல் எண்ணை இரண்டுமுறை கிளிக் செய்யவும்.
  3. மேலே, வடிவமை அதன் பிறகு பொட்டுக்குறிகள் & எண்ணிடல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. விருப்பங்களைப் பட்டியலிடு அதன் பிறகு எண்ணிடலை மீண்டும் துவங்குஐத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் பட்டியலுக்குப் புதிய துவக்க எண்ணை உள்ளிடவும்.
  6. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆவணம்: எண்ணிடப்பட்ட பட்டியலைத் தொடரவும்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. முதல் எண்ணை இரண்டுமுறை கிளிக் செய்யவும்.
  3. மேலே, வடிவமை அதன் பிறகு பொட்டுக்குறிகள் & எண்ணிடல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. விருப்பங்களைப் பட்டியலிடு அதன் பிறகு முந்தைய எண்ணிடலைத் தொடர்ஐத் தேர்ந்தெடுக்கவும்.
  5. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஓரஇடங்களை மாற்றுதல்

தொங்கும் ஓரஇடத்தைச் சேர்த்தல்

தொங்கும் ஓரஇடத்துடன், முதல் வரியைத் தவிர அனைத்தும் ஓரம் தள்ளப்படும்.

Google Docs

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. நீங்கள் ஓரஇடம் தள்ள விரும்பும் உரையை ஹைலைட் செய்யவும்.
  3. மேலே உள்ள மெனுவில், வடிவமை அதன் பிறகு சீரமை & ஓரஇடம் அதன் பிறகு ஓரஇட விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "சிறப்பு ஓரஇடம்"இன் கீழ், "தொங்கும்" என்பதைத் தேர்வு செய்யவும்.
  5. விருப்பத்திற்குரியது: "தொங்கும்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியில், ஓரஇடத்தின் அளவை மாற்றவும்.
  6. பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

Google ஸ்லைடுகள்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. நீங்கள் ஓரஇடம் தள்ள விரும்பும் உரையை ஹைலைட் செய்யவும்.
  3. மேலே உள்ள மெனுவில், வடிவமை அதன் பிறகு வடிவமைப்பு விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வலதுபக்கத்தில் உரைப் பொருத்தம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. "சிறப்பு ஓரஇடம்"இன் கீழ், "தொங்கும்" என்பதைத் தேர்வு செய்யவும்.
  6. விருப்பத்திற்குரியது: "வாரியாக" என்பதன் கீழ், ஓரஇடத்தின் அளவை மாற்றவும்.

Google Slidesஸில் உரையைச் சுற்றி இடைவெளியைச் சேர்த்தல்

ஸ்லைடில் உரை மற்றும் உரைப் பெட்டியின் மூலைகள் இடையிலான இடைவெளியை நீங்கள் மாற்றலாம்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. நீங்கள் மாற்ற விரும்பும் உரையை ஹைலைட் செய்யவும்.
  3. மேலே உள்ள மெனுவில், வடிவமை அதன் பிறகு வடிவமைப்பு விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வலதுபக்கத்தில் உரைப் பொருத்தம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. "இடைவெளி"இன் கீழ் உங்கள் மாற்றங்களை மேற்கொள்ளவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15292726746202295384
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false