செருகு நிரல்கள், ஆப்ஸ் ஸ்கிரிப்ட், AppSheet, Looker Studio ஆகியவற்றைப் பயன்படுத்துதல்

பணி அல்லது பள்ளிக்கான Google Docsஸில் இருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

செருகு நிரல்களை நிறுவுதலும் பயன்படுத்துதலும் (ஆங்கிலத்தில் மட்டும்)

Google Docs, Sheets, Forms ஆகியவற்றில் மேலும் பலவற்றைச் செய்ய, செருகு நிரல்களைப் பயன்படுத்தலாம். Google Slides இல் செருகு நிரல்கள் கிடைக்காது. Google Forms உடன் செருகு நிரல்களைப் பயன்படுத்த, கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டும்.

செருகு நிரல்களை நிறுவுதல்
  1. Google Docs அல்லது Sheets ஆப்ஸில், ஆவணத்தை அல்லது விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  3. செருகு நிரல்கள் என்பதைத் தட்டவும். உங்கள் தற்போதைய செருகு நிரல்கள் பட்டியலிடப்படும்.
  4. செருகு நிரல்களைப் பெறுக என்பதைத் தட்டவும். Google Play ஸ்டோர் ஆப்ஸில் Play ஸ்டோர் செருகு நிரல்களாகப் பணிபுரியும் ஆப்ஸின் பட்டியல் திறக்கும்.
  5. நிறுவ விரும்பும் செருகு நிரலைத் தட்டவும்.
  6. நிறுவு என்பதைத் தட்டவும்.
  7. பெரும்பாலான செருகு நிரல்களுக்கு, செருகு நிரல் செயல்படத் தேவைப்படுகிற குறிப்பிட்ட தரவிற்கான அணுகலைக் கோரும் செய்தி தோன்றும். செய்தியைப் படித்து, அனுமதி என்பதைத் தட்டவும்.
  8. ஆப்ஸை நிறுவியபிறகு, செருகுநிரலைப் பயன்படுத்த, Google Docs அல்லது Sheets ஆப்ஸை மீண்டும் திறக்க வேண்டும்.
செருகு நிரல்களை இயக்குதலும் முடக்குதலும்

எப்போது வேண்டுமானாலும் செருகு நிரல்களை இயக்கலாம், முடக்கலாம். உங்கள் கோப்புகள் அனைத்திலுமிருந்து செருகு நிரலை அகற்ற, அதை நிறுவல் நீக்கவும்.

  1. Google Docs அல்லது Sheets ஆப்ஸில், ஆவணத்தை அல்லது விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  3. செருகு நிரல்கள் என்பதைத் தட்டவும். உங்கள் தற்போதைய செருகு நிரல்கள் பட்டியலிடப்படும்.
  4. நிர்வகி அதன் பிறகுசெருகு நிரல்கள் என்பதைத் தட்டவும்.
  5. செருகு நிரலை இயக்க அல்லது முடக்க, அதற்கு அடுத்து உள்ள ஸ்விட்சைத் தட்டவும்.
செருகு நிரல்களைப் பயன்படுத்துதல்
  1. Google Docs அல்லது Sheets ஆப்ஸில், ஆவணத்தை அல்லது விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  3. செருகு நிரல்கள் என்பதைத் தட்டவும்.
  4. பயன்படுத்த விரும்பும் செருகு நிரலைத் தட்டவும். ஆப்ஸ் திறக்கும்.
true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
282124819878293383
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false