படிவத்திலுள்ள பதில்களைச் சேமிக்கும் இடத்தைத் தேர்வுசெய்தல்

பதிலளிப்பவர்கள் உங்கள் படிவத்தை நிரப்பும்போது, அந்தப் பதில்களை இணைக்கப்பட்ட Google விரிதாளில் பார்ப்பதற்கு நீங்கள் தேர்வுசெய்யலாம்.

பதில்களை எங்கே சேமிப்பது எனத் தேர்வுசெய்தல்

  1. Google Formsஸில் ஒரு படிவத்தைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள “பதில்கள்” என்பதன் கீழ் சுருக்கவிவரம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள மேலும் மேலும்அதன் பிறகு பதில்களைப் பெறுவதற்கான விரிதாளைத் தேர்ந்தெடுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்: 
    • புதிய விரிதாளை உருவாக்கு: Google Sheets இல் பதில்களுக்காக, விரிதாளை உருவாக்கும்
    • ஏற்கெனவே உள்ள விரிதாளைத் தேர்ந்தெடு: பதில்களைச் சேமிக்க, Google Sheetsஸில் ஏற்கெனவே உள்ள விரிதாள்களில் இருந்து தேர்வுசெய்யவும்
  5. உருவாக்கு அல்லது தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
முக்கியம்: கூட்டுப்பணி செய்பவருடன் படிவத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் எனில் படிவத்தின் இணைக்கப்பட்ட விரிதாளுக்கான அணுகலும் அவருக்கு இருக்கக்கூடும். கூட்டுப்பணி செய்பவரை அகற்ற விரும்பினால் படிவத்தில் இருந்தும் விரிதாளில் இருந்தும் தனித்தனியாக அகற்ற வேண்டும்.

உதவிக்குறிப்பு: Google Sheets முகப்புத் திரை, Google Sheets ஆப்ஸ் அல்லது Google Drive ஆகியவற்றில் பதில் விரிதாளைக் கண்டறியலாம்.

படிவத்திலிருந்து விரிதாளின் இணைப்பை நீக்குதல்

 
  1. Google Forms இல் படிவத்தைத் திறக்கவும்.
  2. மேலே இடதுபுறத்தில், “பதில்கள்” என்பதன் கீழ், சுருக்கவிவரம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே வலதுபுறத்தில், மேலும் மேலும் அதன் பிறகு படிவத்தை இணைப்பு நீக்கு இணைப்பை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. இணைப்பை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
 

படிவம் அல்லது பதில்களை நீக்குதல்

உதவிக்குறிப்பு: பதில்களை விரிதாளிலேயே வைத்திருந்தால் Google Driveவில் அது தனிப்பட்ட ஃபைலாகச் சேமிக்கப்படும். இணைக்கப்பட்டுள்ள பிற ஃபைலை நீக்காமலே விரிதாள்/படிவத்தை நீக்கலாம். படிவத்தில் உள்ள பதில்களை நீக்குவது நிரந்தரமானதாகும்.

படிவத்திலிருந்து எல்லா பதில்களையும் நீக்குதல்

  1. Google Forms இல் படிவத்தைத் திறக்கவும்.
  2. மேலே இடதுபுறத்தில், “பதில்கள்” என்பதன் கீழ், சுருக்கவிவரம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே வலதுபுறத்தில், மேலும் மேலும் அதன் பிறகு எல்லா பதில்களையும் நீக்கு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

தனிநபர் பதில்களை நீக்குதல் 

  1. Google Formsஸில் ஒரு படிவத்தைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் “பதில்கள்” என்பதன் கீழே உள்ள தனிநபர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீக்க விரும்பும் பதிலைக் கண்டறிய, முந்தையது முந்தையது அல்லது அடுத்து அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீக்கு நீக்கு அதன் பிறகு சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: Google Sheets இல் பதில்களைச் சேமித்திருந்தால், படிவம் அல்லது தாளில் பதிலை நீக்குவதால், மற்றதில் அது பாதிப்பை ஏற்படுத்தாது.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7018551824927704736
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false