படிவத்தைத் திருத்துதல்

படிவத்தை உருவாக்கிய பிறகு கேள்விகள், விளக்கங்கள், படங்கள், வீடியோக்கள் போன்ற 300 உள்ளடக்கப் பகுதிகள் வரை சேர்க்கலாம், திருத்தலாம். உங்கள் படிவத்தை தலைப்பின்படி ஒழுங்கமைக்க 75 பிரிவுகள் வரை சேர்க்கலாம்.

கேள்விகள், தலைப்புகள், பிரிவுகள் ஆகியவற்றைச் சேர்த்தல்

கேள்வியைச் சேர்த்தல்
  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. சேர் கேள்வியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கேள்வித் தலைப்பின் வலதுபுறத்தில் நீங்கள் விரும்பும் கேள்வி வகையைத் தேர்வுசெய்யவும்.
  4. உங்கள் கேள்விக்கான சாத்தியமான பதிலை உள்ளிடவும். பதிலளிப்பவர்கள் கட்டாயமாகப் பதிலளிக்க வேண்டுமெனில், அவசியம் என்பதை இயக்கவும்.
படம் அல்லது வீடியோவைச் சேர்த்தல்

கேள்வியிலோ பதிலிலோ படம்/வீடியோவைச் சேர்த்தல்

பல தேர்வு அல்லது செக்பாக்ஸ் கேள்விகளுக்கு கேள்வியிலோ பதிலிலோ படத்தைச் சேர்க்கலாம்.

  1. Google Formஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. கேள்வியையோ பதிலையோ கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில், படத்தைச் சேர் படத்தைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. படத்தைப் பதிவேற்றவும் அல்லது தேர்வுசெய்யவும்.
  5. தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

படத்தையோ வீடியோவையோ தானாகவே சேர்த்தல்

உங்கள் படிவத்தில் படத்தையோ YouTube வீடியோவையோ சேர்க்கலாம். உங்களால் கேள்விகளில் வீடியோக்களைச் சேர்க்க முடியாது, ஆனால் கேள்விக்கு முன்னரோ பின்னரோ சேர்க்கலாம்.

  1. Google Formஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. படத்தைச் சேர்க்க படத்தைச் சேர் படத்தைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும். வீடியோவைச் சேர்க்க வீடியோவைச் சேர் Video என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. படத்தையோ வீடியோவையோ தேர்வுசெய்து தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரிவைச் சேர்த்தல்

பிரிவுகளின் மூலம் உங்கள் படிவத்தை படிப்பதற்கும் நிறைவுசெய்வதற்கும் எளிதானதாக மாற்றலாம்.

  1. Google Formஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. பிரிவைச் சேர் Section என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. புதிய பிரிவிற்குப் பெயரிடவும்.
கேள்வி, படம் அல்லது பிரிவை நகலெடுத்தல்

கேள்விகள் அல்லது படங்கள்

  1. கேள்வியையோ படத்தையோ கிளிக் செய்யவும்.
  2. நகல் Make a copy என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரிவுகள்

  1. பிரிவு மேற்குறிப்பைக் கிளிக் செய்யவும்.
  2. மேலும் மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பிரிவை நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
முந்தையப் படிவத்தில் உள்ள கேள்விகளை மீண்டும் பயன்படுத்துதல்
  1. Google Formஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. வலதுபுறத்தில், கேள்வியைச் சேர் கேள்வியைச் சேர் அதன் பிறகுகேள்விகளை இறக்கு கேள்விகளை இறக்குங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் இறக்க விரும்பும் கேள்விகள் உள்ள படிவத்தைக் கிளிக் செய்து அதன் பிறகுதேர்ந்தெடுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வலதுபுறத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் ஒவ்வொரு கேள்விக்கும் அருகிலுள்ள பெட்டியைக் கிளிக் செய்யவும்.
  5. கேள்விகளை இறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆவணங்களை நீக்குதல்/திருத்துதல்

கேள்வி, தலைப்பு அல்லது விளக்கத்தைத் திருத்த நீங்கள் மாற்ற விரும்பும் உரையைக் கிளிக் செய்யவும்.

கேள்வி, படம் அல்லது பிரிவை நீக்குதல்

கேள்விகள் அல்லது படங்கள்

  1. கேள்வியையோ படத்தையோ கிளிக் செய்யவும்.
  2. நீக்கு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரிவு

  1. பிரிவு மேற்குறிப்பைக் கிளிக் செய்யவும்.
  2. மேலும் மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பிரிவை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரிவை மறுவரிசைப்படுத்துதல்
  1. ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகள் இருந்தால் வரிசையை மாற்றலாம்.
  2. பிரிவின் மேல் வலதுபுறத்தில் மேலும் மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பிரிவை நகர்த்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பிரிவை நகர்த்த மேலே மேல் அம்புக்குறி அல்லது கீழே Down arrow என்பதைக் கிளிக் செய்யவும்.
செயல்தவிர்த்தல்
  1. சமீபத்தில் செய்த மாற்றத்தைச் செயல்தவிர்க்க விரும்பினால்:
  2. படிவத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள செயல்தவிர்Undo என்பதைக் கிளிக் செய்யவும்.

கேள்விகளையும் பதில்களையும் ரேண்டமாக வரிசைப்படுத்தலாம்

உங்கள் படிவத்தை நிரப்பும் அனைவருக்கும் கேள்விகளும் பதில்களும் வெவ்வேறு வரிசையில் தோன்றும்படி அமைக்கலாம்.

கவனத்திற்கு: கேள்விகளும் பதில்களும் ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு முறை மட்டுமே கலைக்கப்படும். ஒவ்வொரு முகவரியும் தனித்தனியாக உள்ளிடப்படுவதையும் Google குழுவிற்கு அனுப்பப்படவில்லை என்பதையும் உறுதிசெய்யவும்.

கேள்வியின் வரிசையைக் கலைத்தல்
முக்கியம்: ஒரு குறிப்பிட்ட வரிசையில் கேள்விகள் காட்டப்பட வேண்டுமெனில் அவற்றைக் கலைக்கக்கூடாது.
  1. படிவத்தின் மேலே உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. “விளக்கக்காட்சி” என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை Down arrow கிளிக் செய்யவும்.
  3. “படிவத்தின் விளக்கக்காட்சி” என்பதற்குக் கீழே உள்ள கேள்வியின் வரிசையைக் கலைத்துப் போடு என்பதை இயக்கவும்.
பதில் விருப்பங்களைக் கலைத்தல்
பல தேர்வு, செக்பாக்ஸ், கீழ்த்தோன்றல் ஆகிய கேள்விகளுக்கு பதில்களைக் கலைத்துப் போடலாம்.
  1. பதில்களைக் கலைத்துப் போட விரும்பும் கேள்வியைக் கிளிக் செய்யவும்.
  2. கீழ் வலதுபுறத்தில் மேலும் மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. விருப்பத்தின் வரிசையைக் கலைத்துப் போடு என்பதைக் கிளிக் செய்யவும்.

பதிலளிப்பவர்களின் பதில்களைத் 'தானாகச் சேமிக்கும்' அம்சத்தை முடக்குதல்

இயல்பாகவே படிவங்களின் வரைவுப் பதில்கள், பதிலளிப்பவர் கடைசியாகத் திருத்தியதில் இருந்து 30 நாட்கள் வரை அல்லது படிவம் நிறைவுசெய்யப்படும் வரை (இவற்றில் எது முதலில் நடக்கிறதோ அதிலிருந்து) தானாகச் சேமிக்கப்படும்.

இவ்வாறான படிவங்களில் தானாகச் சேமிக்கும் அம்சத்தை நீங்கள் முடக்க விரும்பலாம்:

  • தரவு உள்ளீட்டினைப் பலமுறை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படும் படிவங்கள்
  • இணையதளங்களில் உட்பொதிக்கப்படும் படிவங்கள்
  • பலர் பயன்படுத்தும் சாதனங்களில் பதிவுசெய்யப் பயன்படுத்தப்படும் படிவங்கள்

தானாகச் சேமிக்கும் அம்சத்தை இயக்க/முடக்க:

  1. வினாடி வினாவின் மேலே உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. “விளக்கக்காட்சி” என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை Down arrow கிளிக் செய்யவும்.
  3. பதிலளிப்பவர்கள் அனைவருக்கும் பதில்களைத் தானாகச் சேமிக்கும் அம்சத்தை முடக்கு என்பதை இயக்கவும்/முடக்கவும்.

உங்கள் இயல்பு அமைப்புகளை மாற்றலாம்

ஒவ்வொரு புதிய படிவமும் ஒரே அமைப்புகளைப் பயன்படுத்தும்படி செய்ய இவற்றைச் செய்யவும்:

  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. வினாடி வினாவின் மேற்பகுதியில் உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "இயல்பு" என்பதன் கீழ் நீங்கள் இயக்கும் எந்தவொரு அமைப்பும் புதிதாகப் பயன்படுத்தும் படிவத்திற்கு இயல்பு அமைப்பாக இருக்கும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4319544879957984926
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false