Google Slidesஸை எவ்வாறு பயன்படுத்துவது


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

iPhone & iPadக்கான Google Slides ஆப்ஸ் மூலம் Microsoft Powerpoint® கோப்புகளுடன் Google விளக்கக்காட்சிகளையும் உருவாக்கலாம், பார்க்கலாம், திருத்தலாம். Google Slides ஆப்ஸைப் பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய சில விஷயங்கள் இதோ:

படி 1: Google Slides ஆப்ஸைப் பதிவிறக்குதல்

  1. ஆப்ஸ்டோரைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள தேடல் பெட்டியில் Google Slides எனத் தேடவும்.
  3. பெறுக அதன் பிறகு நிறுவு என்பதைத் தட்டவும். உங்கள் முகப்புத் திரையில் Google Slides ஆப்ஸ் தோன்றும்.

படி 2: விளக்கக்காட்சியை உருவாக்குதல் பார்த்தல் மற்றும் அதில் மாற்றங்களைச் செய்தல்

வெவ்வேறு கோப்பு வடிவங்களைப் பயன்படுத்துதல்

Google Slides ஆப்ஸ் மூலம் கோப்புகளைப் பதிவேற்றலாம், பதிவிறக்கலாம்.

  • இறக்குதல்: PPT, PPTX, ஆகிய கோப்புகளைத் திறக்கலாம், திருத்தலாம்.
  • பதிவிறக்குதல்: PDF அல்லது PPTX ஃபைலாகப் பதிவிறக்கலாம்.
ஸ்லைடுகளைப் பார்த்தல் மற்றும் அவற்றில் மாற்றங்களைச் செய்தல்
  1. iPhone அல்லது iPadடில் Google Slides ஆப்ஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. ஸ்லைடுகளுக்கிடையே நகர, மேலும் கீழும் ஸ்வைப் செய்யவும். பின்ச் செய்தும் ஸ்லைடின் அளவை மாற்றலாம்.
  3. இவற்றைச் செய்ய விரும்பினால்:
    • ஸ்லைடில் மாற்றம் செய்ய: ஸ்லைடைத் தட்டி அதன் பிறகு ஸ்லைடில் மாற்றம் செய் என்பதைத் தட்டவும். 
      • உதவிக்குறிப்பு: மாற்றம் செய்ய விரும்பும் ஸ்லைடை இருமுறை தட்டுவதன் மூலமும் மாற்றங்களைச் செய்யலாம்.
    • கருத்துகளைப் பார்க்க: ஸ்லைடைத் தட்டி அதன் பிறகு கருத்தைக் காட்டு என்பதைத் தட்டவும்.
    • கருத்துகளைச் சேர்க்க: ஸ்லைடைத் தட்டி அதன் பிறகு கருத்தைச் சேர் என்பதைத் தட்டவும்.
3D டச் மூலம் iPhoneகளில் விரைவுச் செயல்பாடுகளைப் பயன்படுத்துதல்

விரைவுச் செயல்பாடுகள் மூலம் சமீபத்திய விளக்கக்காட்சிகளைத் திறக்கலாம், டெம்ப்ளேட்டுகளைப் பயன்படுத்தலாம், புதிய விளக்ககாட்சிகளை உருவாக்கலாம். மெனுவில் சமீபத்திய விளக்கக்காட்சிகளைப் பார்க்க உங்கள் மொபைலைத் திறக்கவும்.

கவனத்திற்கு: உங்கள் iPhoneனில் (iPhone 6s/6s Plus) 3D டச் இருந்தால் மட்டுமே இவற்றைச் செய்யலாம்.

  1. விரைவுச் செயல்பாடுகள் மெனுவைப் பெற Google Slides ஆப்ஸை அழுத்திப் பிடிக்கவும். அதன்பின் விரைவுச் செயல்பாடுகள் மெனு திறக்கும்.
  2. அந்தப் பட்டியலில் இருந்து இவற்றில் ஒரு விருப்பத்தைத் தட்டவும்:
    • நீங்கள் கடைசியாகத் திறந்த/திருத்திய விளக்கப்படங்கள்.
    • டெம்ப்ளேட்டுகள்: டெம்ப்ளேட் மெனுவைத் திறக்கும்.
    • உருவாக்கு: வெற்று விளக்கக்காட்சியை உருவாக்கும்.
  3. உங்கள் விளக்கக்காட்சியோ டெம்ப்ளேட்டோ Google Slides ஆப்ஸில் திறக்கப்படும்.

படி 3: பிறருடன் பகிர்தல், பணியாற்றுதல்

பிறருடன் கோப்புகளையும் கோப்புறைகளையும் பகிரலாம், அத்துடன் அவர்கள் அவற்றைப் பார்ப்பது, திருத்துவது அல்லது கருத்து தெரிவிப்பது ஆகியவற்றைச் செய்ய முடியுமா என்பதைத் தேர்வுசெய்யலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15568814182129555731
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false