பகிர்தலை நிறுத்துதல் கட்டுப்படுத்துதல் அல்லது மாற்றுதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

பிறருடன் ஃபைலைப் பகிர்ந்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் பகிர்வதை நீங்கள் நிறுத்தலாம். நீங்கள் ஃபைலைப் பகிர்ந்துள்ளவர்கள் அதைத் திருத்தலாமா பகிரலாமா என்பதையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

உதவிக்குறிப்பு: எனது Driveவில் இருந்து ஒரு ஃபைலைப் பகிர்வதற்கான அனுமதியை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் பகிரும் நபருக்கு அனுமதிகள் இல்லையென்றால் இவற்றுக்கான அனுமதிகளை மாற்றலாம்:

  • ஃபைல் இருக்கும் ஃபோல்டர்
  • ஃபைல் மட்டும்

ஃபைலைப் பகிர்வதை நிறுத்துதல்

நீங்கள் ஒரு ஃபைலைப் பகிர்கிறீர்கள் எனில் உரிமையாளரும் திருத்துவதற்கான அணுகல் உள்ள எவரும் அந்த ஃபைலின் அனுமதிகளை மாற்றி அதைப் பகிர முடியும்.

ஃபைல் அல்லது ஃபோல்டரைப் பகிர்வதை நிறுத்துதல்
  1. Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஒரு ஃபைலையோ ஃபோல்டரையோ தேர்ந்தெடுக்கவும்.
  3. அணுகலை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  4. இனி நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பாத நபரைக் கண்டறியவும்.
  5. அவரது பெயரைத் தட்டி அதன் பிறகு அகற்று என்பதைத் தட்டவும்.
ஃபைல் அல்லது ஃபோல்டருக்கான பொதுவான அணுகலை வரம்பிடுதல்

ஓர் ஆவணத்தின் பொது அணுகலை ‘வரம்பிடப்பட்டது‘ என மாற்றினால் அணுகல் உள்ளவர்கள் மட்டுமே ஃபைலைத் திறக்க முடியும்.

  1. Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஃபைலைத் திறக்கவும் அல்லது தேர்ந்தெடுக்கவும்.
  3. அணுகலை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  4. “பொதுவான அணுகல்” என்பதற்குக் கீழேயுள்ள மாற்று என்பதைத் தட்டவும்.
  5. அணுகல் உள்ள பார்வையாளர்களைத் தட்டவும்.
  6. வரம்பிடப்பட்டது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பகிர்ந்த ஃபைலை நீக்குதல்

உங்களுக்குச் சொந்தமான பகிர்ந்த ஃபைலை நீக்கினால்:

  • ஃபைலை நிரந்தரமாக நீக்கும் வரையில் அதைப் பார்க்கும், கருத்து தெரிவிக்கும், திருத்தும் அனுமதியுடைய நபர்களால் அதை நகலெடுக்க முடியும்.
  • ஃபைலை நிரந்தரமாக நீக்குவதற்கு, 'நீக்கியவை' ஃபோல்டரில் அந்த ஃபைலைக் கண்டறிந்து மேலும் மேலும் அதன் பிறகு நிரந்தரமாக நீக்கு என்பதைத் தட்டவும்.

வேறொருவருக்குச் சொந்தமான பகிர்ந்த ஃபைலை நீங்கள் நீக்கினால்:

  • அது உங்கள் Driveவில் இருந்து அகற்றப்படும், ஆனால் மாற்றும் அனுமதி கொண்ட பிறரால் அதனைத் தொடர்ந்து அணுக முடியும்.
  • ஃபைலை மீண்டும் அணுக, அதன் இணைப்பைத் திறக்கவும். "என்னுடன் பகிர்ந்தவை" என்பதில் ஃபைலைப் பார்க்கலாம்.

Google Formsஸிற்கான பகிர்தல் அமைப்புகளை மாற்றுதல்

Google Formsஸில் உள்ள பகிர்தல் விருப்பங்கள் பிற வகை ஃபைல்களில் உள்ள பகிர்தல் விருப்பங்களில் இருந்து வேறுபட்டவை.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14589140407398841109
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false