கோப்பில் உள்ள அடையாளமற்ற அல்லது பெயரில்லாத நபர்கள்

உங்களால் அடையாளம் காண முடியாத பெயர் அல்லது "அடையாளமற்ற விலங்குகள்" உங்கள் ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைப் பார்ப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆவணம் பொதுவிலோ இணைப்பைக் கொண்டுள்ள எவருடனும் பகிரப்பட்டாலோ இது நிகழலாம்.

தெரியாத ஒருவரை நீங்கள் பார்த்தால்

தெரியாத ஒருவர் உங்கள் கோப்பைப் பார்க்கலாம், ஏனெனில்:

  • அஞ்சல் பட்டியலுடன் கோப்புப் பகிரப்பட்டது.
  • Google கணக்கு இல்லாதவருடனோ அதில் உள்நுழையாதவருடனோ கோப்புப் பகிரப்பட்டது.
  • உங்கள் கோப்பைத் திருத்தக்கூடிய அல்லது இணைப்பைக் கொண்ட ஒருவர் பிறருடன் அதைப் பகிர்ந்திருக்கலாம்.
  • ஒருவர் அவரின் Google கணக்கின் பெயரை மாற்றியுள்ளார். உங்கள் கோப்பில் உள்ள பகிர் அதன் பிறகு மேம்பட்டவை என்பதைக் கிளிக் செய்யும்போது அவரின் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் பார்க்க முடியும்.

உங்கள் கோப்பைப் பிறர் எப்படிப் பார்க்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்துதல்

நீங்கள் திருத்தக்கூடிய கோப்பைப் பகிர்வதை நிறுத்த வேண்டுமெனில் அது எப்படி என்பது குறித்து அறிந்துகொள்ளவும்:

"அடையாளமற்ற விலங்குகள்"

இணைப்பைப் பயன்படுத்தி நீங்கள் கோப்பைப் பகிர்ந்தாலோ திறந்தாலோ அதைப் பார்ப்பவர்களின் பெயர்களை உங்களால் பார்க்க முடியாமல் போகலாம்.

  • நீங்கள் தனியாக அழைக்காத நபர்கள் கோப்பில் உள்ளபோது அடையாளமற்ற விலங்குகளாகக் காட்டப்படும்.
  • தனியாக நீங்கள் அழைத்த நபர்கள் கோப்பில் உள்ளபோது அவர்களின் பெயர் காட்டப்படும்.

கோப்பைப் பார்ப்பதற்குப் பிறருக்கு நீங்கள் தனிப்பட்ட அணுகலை வழங்கும்போது அல்லது அஞ்சல் பட்டியலில் அவர்கள் இருந்தால் மட்டும் அவர்களின் பெயர்களை நீங்கள் பார்க்க முடியும்.

தனிப்பட்ட கோப்பில் அடையாளமற்ற விலங்குகள்

இணைப்புவழிப் பகிர்வை முடக்கினால் இன்னமும் பல அடையாளமற்ற விலங்குகளை நீங்கள் பார்க்கலாம்:

  • கோப்பை ஒருவர் பலமுறை திறக்கும்போது. பார்க்காதவர்கள் மறைவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.
  • Messenger சேவை மூலம் இணைப்பை ஒருவர் திறந்தால். இணைப்புகளில் ஃபிஷிங், வைரஸ் தாக்குதல்கள் அல்லது மால்வேர் உள்ளதா என்பதை சில சேவைகள் சோதிக்கும்.
  • இணைப்பைத் தானாகப் பின்பற்றும் உலாவி நீட்டிப்பையோ ஸ்கிரிப்ட்டையோ பயன்படுத்தும்போது.
அடையாளமற்ற விலங்குகளும் பணி அல்லது பள்ளிக்கான Google ஆப்ஸும்

பணி அல்லது பள்ளி மூலம் பயன்படுத்தும் Google ஆப்ஸை நீங்கள் பயன்படுத்தினால் உங்கள் டொமைனில் உள்ளவர்கள் உங்கள் கோப்பைப் பார்க்கும்போது அவர்கள் பெயர் எப்போதும் காட்டப்படும்.

உங்கள் டொமைனுக்கு வெளியில் கோப்புகளைப் பகிர உங்கள் நிர்வாகி அனுமதித்தால் உள்நுழையாதவர்கள் அடையாளமற்ற விலங்குகளின் பெயர்கொண்டு காட்டப்படுவார்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7627721115855964327
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false