Google Driveவில் உள்ள ஃபைல்களைப் பகிர்தல்

Google Driveவில் நீங்கள் சேகரித்த கோப்புகளையும் கோப்புறைகளையும் எவருடனும் பகிரலாம்.

நீங்கள் Google Driveவில் இருந்து ஃபைலைப் பகிரும்போது அதில் திருத்த, கருத்து தெரிவிக்க அல்லது பார்ப்பதற்கு மட்டும் பிறரை அனுமதிக்கலாமா என்பதை நீங்களே கட்டுப்படுத்தலாம். Google Driveவில் இருந்து உள்ளடக்கத்தைப் பகிரும்போது Google Drive திட்டக் கொள்கைகள் பொருந்தும்.

படி 1: நீங்கள் பகிர விரும்பும் ஃபைலைக் கண்டறிதல்

ஒரு ஃபைலைப் பகிர்தல்

ஃபைலை எப்படிப் பகிர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யுங்கள்:

  1. உங்கள் Android சாதனத்தில் Google Drive, Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. கோப்பின் பெயருக்கு அடுத்துள்ள மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  3. பகிர் என்பதைத் தட்டவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட ஃபைல்களைப் பகிர்தல்
Google Formsஸை அனுப்புதல் மற்றும் பகிர்தல்

Google Formsஸில் உள்ள பகிர்தல் விருப்பங்கள் பிற வகை ஃபைல்களில் உள்ள பகிர்தல் விருப்பங்களில் இருந்து வேறுபட்டவை.

படி 2: ஃபைலை யாருக்குப் பகிர வேண்டும், அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேர்வுசெய்தல்

குறிப்பிட்டவர்களுடன் பகிர்தல்
கவனத்திற்கு: பணி அல்லது பள்ளி மூலம் உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தினால் நிறுவனத்திற்கு வெளியே உங்களால் ஃபைல்களைப் பகிர முடியாமல் போகலாம்.
  1. Android சாதனத்தில் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. பகிர வேண்டிய ஃபைலைத் தேர்ந்தெடுத்து அதன் பிறகு பகிர் அனுமதியளிப்பவரைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஃபைலைப் பகிர விரும்பும் மின்னஞ்சல் முகவரியையோ Google குழுவையோ டைப் செய்யவும்.
  4. உங்கள் ஃபைலைப் பிறர் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யவும். இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
    • பார்வையாளர்
    • கருத்து தெரிவிப்பவர்
    • திருத்தக்கூடியவர்
  5. தகுதிபெறும் பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்தினால், பயனரின் பொறுப்பைத் தட்டி காலாவதித் தேதியைச் சேர்க்கலாம்
  6. நீங்கள் ஃபோல்டரைப் பகிரும்போது ஒவ்வொரு மின்னஞ்சல் முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.
    • விருப்பத்திற்குரியது: உங்கள் அறிவிப்பு மின்னஞ்சலில் மெசேஜைச் சேர்க்கலாம்.
    • அணுகல் நிலை  குறித்து பிறருக்குத் தெரிவிக்க விரும்பவில்லை என்றால் மூன்று புள்ளி மெனு மேலும் அதன் பிறகு பிறருக்குத் தெரிவிக்காதே என்பதைத் தட்டவும்.
  7. அனுப்பு என்பதைத் தட்டவும்.

ஃபைல்களைப் பிறர் எப்படிப் பார்க்கலாம், கருத்து தெரிவிக்கலாம், திருத்தலாம் என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உதவிக்குறிப்பு: எனது Driveவில் இருந்து ஒரு ஃபைலைப் பகிர்வதற்கான அனுமதியை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் பகிரும் நபருக்கு அனுமதிகள் இல்லையென்றால் இவற்றுக்கான அனுமதிகளை மாற்றலாம்:

  • ஃபைல் இருக்கும் ஃபோல்டர்
  • ஃபைல் மட்டும்
குறிப்பிட்ட நபர்களைக் கொண்ட குழுவில் பகிர்தல்

Chat ஸ்பேஸில் பகிர்தல்

Google Chatடில் உரையாடல் மெசேஜ் அல்லது ஸ்பேஸ் மூலம் ஒரு ஃபைலையோ ஃபைலுக்கான இணைப்பையோ பகிரலாம்.Google Chatடில் Drive ஃபைல்களை அனுப்புவது மற்றும் நிர்வகிப்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Google Chatடில் உள்ள Chat ஸ்பேஸில் ஃபைலைப் பகிர:

  1. Android சாதனத்தில் Google Chat ஆப்ஸைத் திறக்கவும்.
  2. கீழே உள்ள, ஸ்பேஸ்கள் என்பதைத் தட்டவும்.
  3. ஃபைலைப் பகிர்வதற்கான Chat ஸ்பேஸைத் திறக்கவும்.
  4. கீழே இடதுபுறத்தில் உள்ள, செயல் மெனு and then Drive என்பதைத் தட்டவும்.
  5. Chat ஸ்பேஸில் பகிர விரும்பும் ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.
  7. அனுப்பு என்பதைத் தட்டவும்.

Drive ஆப்ஸில் இணைப்பு மூலமாக ஃபைலைப் பகிர:

  1. மொபைல் சாதனத்தில் Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. Chat ஸ்பேஸில் பகிர விரும்பும் ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வலதுபுறத்தில் உள்ள மேலும் விருப்பங்கள் என்பதைத் தட்டவும்.
  4. இணைப்பை நகலெடு என்பதைத் தட்டவும்.
  5. Google Chat ஆப்ஸைத் திறக்கவும்.
  6. கீழே உள்ள, ஸ்பேஸ்கள் என்பதைத் தட்டவும்.
  7. ஃபைலைப் பகிர்வதற்கான Chat ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. நகலெடுத்த இணைப்பை மெசேஜ் புலத்தில் ஒட்டவும்.
  9. அனுப்பு என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்புகள்:

  • Drive ஃபைலை Chat ஸ்பேஸில் பகிரும்போது அணுகலை வழங்குமாறு கேட்டு ஓர் அறிவிப்பு காட்டப்படும்.
    • Chat ஸ்பேஸிற்கு நீங்கள் அணுகல் அனுமதி வழங்கினால், அந்த ஸ்பேஸில் எதிர்காலத்தில் சேரும் நபர்களும் அதில் பகிரப்பட்டுள்ள ஃபைல்களுக்கான அணுகலைப் பெறுவார்கள்.
  • Chat ஸ்பேஸில் இருந்து நபர்கள் வெளியேறும்போது, பகிர்வதற்கான அணுகல் அவர்களிடம் இல்லையெனில் அந்த ஸ்பேஸில் உள்ள Drive ஃபைல்களுக்கான அணுகலை அவர்கள் இழப்பார்கள்:
    • தனிநபராக
    • மற்றொரு குழுவின் உறுப்பினராக
  • Drive ஃபைலுக்கான அணுகலை வழங்க, நீங்கள் பகிர விரும்பும் ஃபைலைத் திருத்துவதற்கான அனுமதி உங்களிடம் இருக்க வேண்டும்.
ஃபைலுக்குப் பொதுவான அணுகலை வழங்குதல்

உங்கள் ஃபைலை அனைவரும் அணுகலாமா, அணுகல் உள்ளவர்கள் மட்டும் அணுக வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். இணைப்புள்ள அனைவரையும் அணுக அனுமதித்தால் இணைப்பைக் கொண்டிருக்கும் யார் வேண்டுமானாலும் உங்கள் ஃபைலை அணுக முடியும்.

  1. திருத்த விரும்பும் ஃபைலைத் திறக்கவும்.
  2. அணுகலை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  3. “பொதுவான அணுகல்” என்பதற்குக் கீழேயுள்ள மாற்று என்பதைத் தட்டவும்.
  4. யாரெல்லாம் ஃபைலை அணுகலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்.
    • உதவிக்குறிப்பு: பணி அல்லது பள்ளிக்காக Google கணக்கைப் பயன்படுத்தினால் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் குறிப்பிட்ட பார்வையாளருடன் மட்டுமே (எ.கா. உங்கள் துறையில் உள்ளவர்கள்) உங்களால் பகிர முடியும்.
  5. உங்கள் ஃபைலில் பிறரது பொறுப்பு என்ன என்பதைத் தீர்மானிக்க ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. தேடல் முடிவுகளில் ஃபைலைப் பிறர் கண்டறியலாமா வேண்டாமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. பின்செல் என்பதைத் தட்டவும்.
ஃபைல் அல்லது ஃபோல்டரைப் பொதுவில் பகிர்தல்
  1. பகிர விரும்பும் ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. பகிர் அல்லது பகிர் பகிர் என்பதைத் தட்டவும்.
  3. “பொதுவான அணுகல்” என்பதற்குக் கீழேயுள்ள மாற்று என்பதைத் தட்டவும்.
  4. இணைப்புள்ள எவரும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் ஃபைலில் பிறரது பொறுப்பு என்ன என்பதைத் தீர்மானிக்க ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. இணைப்பை நகலெடு என்பதைத் தட்டவும்.
  7. பின்செல் என்பதைத் தட்டவும்.
  8. மின்னஞ்சலிலோ நீங்கள் பகிர விரும்பும் இடத்திலோ இணைப்பை ஒட்டவும்.

Google கணக்கின் மூலம் உள்நுழையாதவர்களுக்கு உங்கள் ஃபைலில் ஏதேனும் அடையாளமற்ற விலங்குகள் தோற்றப்படங்களாகக் காட்டப்படும்அடையாளமற்ற விலங்குகள் தோற்றப்படங்களாகக் காட்டப்படுவது குறித்து மேலும் அறிக.

காலாவதித் தேதியைச் சேர்த்தல்

தகுதிபெறும் பணி அல்லது பள்ளிக் கணக்குகளில் மட்டுமே காலாவதித் தேதி அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

நீங்கள் தற்போது உள்நுழைந்திருக்கவில்லை.

பணி அல்லது பள்ளிக் கணக்கில் உள்நுழையுங்கள்

ஃபைலைப் பலருடன் பகிர்தல் மற்றும் அதில் கூட்டுப்பணி செய்தல்

முக்கியம்:

  • ஒரே நேரத்தில் Google Docs, Sheets அல்லது Slides ஃபைலை அதிகபட்சமாக 100 உலாவிப் பக்கங்களில் அல்லது சாதனங்களில் திறந்து திருத்த முடியும். ஃபைல் 100க்கும் அதிகமான எண்ணிக்கையில் திறந்திருப்பின், உரிமையாளரும் திருத்துவதற்கான அனுமதிகளைக் கொண்ட சில பயனர்களும் மட்டுமே ஃபைலைத் திருத்த முடியும்.
  • ஒரு ஃபைலை அதிகபட்சமாக 600 தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு மட்டுமே பகிர முடியும்.

அதிகமானவர்களுடன் ஃபைலைப் பகிர்வதற்கும் அதில் கூட்டுப்பணி செய்வதற்கும்:

ஃபைலை வெளியிடுங்கள்

Google தளத்தை உருவாக்குதல்

தளத்தில் உள்ள மாற்றும் அனுமதி கொண்டவர்களுடன் ஃபைல்களைப் பகிர்தல்

  • தளங்களில் உட்பொதிக்கப்பட்டுள்ள ஃபைல்கள் தளத்தில் உள்ள மாற்றும் அனுமதி கொண்டவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அணுகக்கூடிய வகையில் இருப்பதை உறுதிசெய்ய, தளத்தை வெளியிடும்போது ஃபைலுக்கான அணுகலை அவர்களுக்கு நீங்கள் பகிர வேண்டும். ஃபைலை உட்பொதிக்கும்போதோ தளத்தை வெளியிடும்போதோ பகிரும்போதோ பகிர்தல் அனுமதிகளை நீங்கள் மாற்றலாம்.

Google Forms மூலம் கருத்துகளைச் சேகரித்தல்

  • நிறைய தகவல்களைச் சேகரிக்க வேண்டியிருந்தால் ஒரு Google படிவத்தை உருவாக்கவும். பயனர்களின் பதில்கள் Google விரிதாளில் பதிவுசெய்யப்படும். பயனர்களின் பதில்களை வைத்துப் பணியாற்ற வேண்டியிருப்பவர்களுக்கு மட்டும் திருத்துவதற்கான அணுகலை வழங்கவும். பயனர்களின் பதில்களை 100க்கும் அதிகமானோர் திறக்க வேண்டும் என்றால் முதலில் விரிதாளை இணையத்தில் வெளியிடவும். அதன்பிறகு, ஓர் இணைப்பை உருவாக்கி அணுகல் உள்ளவர்களுடன் அதைப் பகிரவும். ஃபைலை எப்படி வெளியிடுவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பலருடன் பகிரப்பட்ட ஆவணங்களில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்தல்

உங்கள் ஆவணம் பலருடன் பகிரப்பட்டு, சிதைவடைகிறது என்றாலோ விரைவாகப் புதுப்பிக்கப்படாமல் இருந்தாலோ பிழையறிந்து திருத்துவதற்கான இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றிப் பாருங்கள்:

  • ஆவணத்திலோ விரிதாளிலோ பயனர்களைக் கருத்து தெரிவிக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, கருத்துகளைப் பெறும் வகையில் ஒரு Google படிவத்தை உருவாக்கவும். Google படிவத்தை எப்படி உருவாக்குவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
  • ஆவணத்தை நகலெடுக்கிறீர்கள் என்றால் தீர்க்கப்பட்ட கருத்துகளையும் பரிந்துரைகளையும் அதில் சேர்க்காதீர்கள். நகலெடுப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
  • பழைய தகவல்களை நீக்கவும் அல்லது தரவைப் புதிய ஆவணத்திற்கு நகர்த்தவும்.
  • ஆவணத்தைப் பயன்படுத்தாதபோது அதை மூடும்படி அணுகல் உள்ளவர்களிடம் தெரிவிக்கவும்.
  • வெளியிடப்படும் ஆவணத்தில் மிக முக்கியமான தகவல்களை மட்டுமே சேர்க்கவும். சிறிய ஆவணங்கள் வேகமாக ஏற்றப்படும்.
  • ஆவணத்தைத் திருத்துவதற்கான அணுகல் உள்ள பயனர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும்.
  • பல ஆவணங்களில் இருந்து தகவல்களைச் சேகரிக்கிறீர்கள் என்றால் அதிகமான பயனர்களுடன் பகிரும் வகையில் 'அணுக மட்டுமே அனுமதியுள்ள' புதிய ஆவணத்தை உருவாக்கவும்.

ஃபைல் பகிரப்படும் விதத்தைக் கட்டுப்படுத்துதல்

பிறர் பார்ப்பது, கருத்து தெரிவிப்பது, திருத்துவது போன்றவற்றைச் செய்ய முடியுமா என்பதைத் தேர்வுசெய்தல்

ஃபைலை ஒருவருக்குப் பகிரும்போது அவருக்கான அணுகல் நிலையை நீங்கள் தேர்வுசெய்யலாம்:

  • பார்வையாளர்: ஃபைலைப் பார்க்க முடியும், ஆனால் அதில் மாற்றம் செய்யவோ அதைப் பிறருடன் பகிரவோ முடியாது.
  • கருத்து தெரிவிப்பவர்: கருத்துகளையும் பரிந்துரைகளையும் தெரிவிக்க முடியும், ஆனால் ஃபைலில் மாற்றம் செய்யவோ ஃபைலைப் பிறருடன் பகிரவோ முடியாது.
  • திருத்தக்கூடியவர்: மாற்றங்களைச் செய்யவும், பரிந்துரைகளை ஏற்கவும் மறுக்கவும் முடியும், அத்துடன் பிறருடன் ஃபைலைப் பகிரவும் முடியும்.
ஃபைலுக்கான பொது அணுகலை மாற்றுதல்

உங்கள் ஃபைலுக்குப் பரவலான அணுகலை அனுமதிக்கலாம். உங்கள் Google கணக்கானது பணிக் கணக்கா, பள்ளிக் கணக்கா அல்லது Gmail மூலம் உருவாக்கப்பட்ட கணக்கா என்பதைப் பொறுத்தே இந்த விருப்பங்கள் அமையும்.

  • பொது: Google கணக்கில் உள்நுழையாமலேயே எவரும் Googleளில் தேடி உங்கள் ஃபைலை அணுகலாம்.
  • இணைப்பைக் கொண்ட எவரும்: இணைப்புள்ள எவரும் தங்கள் Google கணக்கில் உள்நுழையாமலேயே உங்கள் ஃபைலை அணுகலாம்.
  • வரம்பிடப்பட்டது: அணுகல் உள்ளவர்கள் மட்டுமே ஃபைலைத் திறக்க முடியும்.

தொடர்புடைய கட்டுரைகள்

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11517862080959520690
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false