மீறலைப் புகாரளித்தல்

Googleளின் சேவை விதிமுறைகள் அல்லது திட்டக் கொள்கைகளை மீறுவதாக நீங்கள் கருதும் நடத்தையைப் புகாரளிக்கலாம். மீறல்களில் உள்ளடங்குபவை:

  • ஸ்பேம், மால்வேர் மற்றும் ஃபிஷிங்
  • வன்முறை
  • வெறுப்பைத் தூண்டும் பேச்சு
  • பயங்கரவாதம் தொடர்பான உள்ளடக்கம்
  • உபத்திரவம், மிரட்டுதல் & அச்சுறுத்துதல்
  • ஆபாசமான பாலியல் உள்ளடக்கம்
  • சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்துதல்
  • ஆள்மாறாட்டம்
  • தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்
  • சட்டவிரோத நடவடிக்கைகள்
  • பொதுவில் ஸ்ட்ரீம் செய்தல்
  • பதிப்புரிமை மீறல்
  • உள்ளடக்க உபயோகம் மற்றும் சமர்ப்பிப்பு

தவறான பயன்பாட்டைப் புகாரளித்தல்

கொள்கைமீறும் உள்ளடக்கத்தை கம்ப்யூட்டரில் இருந்து நீங்கள் புகாரளிக்க முடியும்.

Google Docs, Sheets, Slides அல்லது Forms

Google Docs, Sheets அல்லது Slides

மீறலைப் புகாரளிக்க:

  1. ஃபைலைத் திறக்கவும்.
  2. உதவி மெனுவைக் கிளிக் செய்யவும்.
  3. தவறான பயன்பாட்டைப் புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. ஃபைலில் கண்டறியப்பட்ட தவறான பயன்பாட்டின் வகையைத் தேர்வுசெய்யவும். எங்கள் கொள்கைகளை இந்த ஃபைல் மீறியுள்ளதா என்பதைத் தீர்மானிப்பதில் உங்களுக்கு உதவ ஒவ்வொரு தவறான பயன்பாட்டின் வகையிலும் விளக்கம் இருக்கும்.
  5. தவறான பயன்பாடு குறித்த புகாரைச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Forms

மீறலைப் புகாரளிக்க:

  1. படிவத்தின் கீழ் உள்ள தவறான பயன்பாட்டைப் புகாரளி என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. படிவத்தில் கண்டறியப்பட்ட தவறான பயன்பாட்டின் வகையைத் தேர்வுசெய்யவும்.
  3. தவறான பயன்பாடு குறித்த புகாரைச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
Google Sites

Google Sitesஸில் உருவாக்கப்பட்டு Google Driveவில் ஹோஸ்ட் செய்யப்பட்ட இணையதளங்களில் உள்ள கொள்கைமீறும் உள்ளடக்கத்தை உங்களால் புகாரளிக்க முடியும். எங்கள் திட்டக் கொள்கைகளின் சில மீறல்கள்:

ஒரு Google தளத்திலிருந்து நேரடியாகத் தவறான பயன்பாட்டைப் புகாரளிக்க அந்தப் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள தவறான பயன்பாட்டைப் புகாரளி என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Drive

Google Driveவில் சேமிக்கப்பட்டுள்ள PDFகள், படங்கள் அல்லது பிற உள்ளடக்கத்தை உங்களால் புகாரளிக்க முடியும். 

மீறலைப் புகாரளிக்க:

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. புகாரளிக்க விரும்பும் ஃபைலை வலது கிளிக் செய்யவும்.
  3. புகாரளி அல்லது தடு  > புகாரளி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஃபைலில் கண்டறியப்பட்ட தவறான பயன்பாட்டின் வகையைத் தேர்வுசெய்யவும். எங்கள் கொள்கைகளை இந்த ஃபைல் மீறியுள்ளதா என்பதைத் தீர்மானிப்பதில் உங்களுக்கு உதவ ஒவ்வொரு தவறான பயன்பாட்டின் வகையிலும் விளக்கம் இருக்கும்.
  5. தவறான பயன்பாடு குறித்த புகாரைச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: Android அல்லது iOS சாதனத்தில் பகிர்தல் அறிவிப்பு அல்லது கருத்து அறிவிப்பின் மூலமும் மீறல்களைப் புகாரளிக்கலாம்.

  • புகாரளிக்க, பகிர்தல் அறிவிப்பு அல்லது கருத்து அறிவிப்பை விரிவாக்கி புகாரளித்துத் தடு என்பதைத் தட்டவும். 

புகாரளிப்பதால் அந்த ஃபைல் அகற்றப்படும் என்பதற்கோ Google தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதற்கோ எந்த உத்திரவாதமும் இல்லை. உள்ளடக்கத்தை நீங்கள் மறுப்பதாலோ பொருத்தமற்றது எனக் கருதுவதாலோ அந்த உள்ளடக்கம் Googleளின் சேவை விதிமுறைகளையும் திட்டக் கொள்கைகளையும் மீறுகிறது என்பது எப்போதும் பொருளல்ல.

தவறான பயன்பாடு உள்ள உள்ளடக்கம் மீது நாங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்

  • கணக்கில் இருந்து அந்த ஃபைலை அகற்றுதல்.
  • ஃபைல் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்துதல்.
  • அந்த ஃபைலை யார் பார்க்கலாம் என வரம்பிடுதல்.
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Google தயாரிப்புகளுக்கான அணுகலை முடக்குதல்.
  • Google கணக்கை நீக்குதல்.
  • சட்டத்திற்குப் புறம்பான ஆவணங்களை உரிய சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் புகாரளித்தல்.

மீறல் குறித்து மறுபரிசீலனை கோருதல்

உங்கள் ஃபைல் தொடர்பான மீறல் அறிவிப்பு இருந்தால் அந்த மீறலை மதிப்பாய்வு செய்யுமாறு நீங்கள் கோர முடியும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16706873051347011210
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false