ஆவணங்களை மொழிபெயர்த்தல் அல்லது வேறொரு மொழியில் எழுதுதல்

Google Docs மூலம் ஆவணங்களை பல மொழிகளுக்கு மொழிபெயர்க்க முடியும்.

ஆவணத்தை மொழிபெயர்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள மெனுவில் கருவிகள் அதன் பிறகு ஆவணத்தை மொழிபெயர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மொழிபெயர்த்த ஆவணத்திற்கு பெயரை உள்ளிட்டு மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. மொழிபெயர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் ஆவணத்தின் மொழிபெயர்க்கப்பட்ட நகல் புதிய சாளரத்தில் திறக்கும். இந்த நகலை உங்கள் Google Driveவிலும் பார்க்கலாம்.

உதவிக்குறிப்பு: "ஆவணத்தை மொழிபெயர்" காட்டப்படவில்லை எனில் நீங்கள் Microsoft Office கோப்புகளைத் திருத்துதல் அம்சத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். மொழிபெயர்க்க, உங்கள் கோப்பினை Google Docsஸுக்கு மாற்றவும். Microsoft Office எடிட்டிங் அம்சம் குறித்தும் Microsoft Office ஃபைல்களில் வடிவமைப்பை மாற்றுவது எப்படி என்பது குறித்தும் தெரிந்துகொள்ளுங்கள்.

உள்ளிடும் மொழியை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் ஓர் ஆவணத்தை Google Docsஸில், விளக்கக்காட்சியை Google Slidesஸில் அல்லது தாளை Google Sheetsஸில் திறக்கவும்.
    • Google Docsஸிலோ Google Slidesஸிலோ மேலே உள்ள மெனுவிற்குச் சென்று ஃபைல் அதன் பிறகு மொழி என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு உங்களுக்குத் தேவையான மொழியைக் கிளிக் செய்யவும்.
    • Google Sheetsஸில் மேலே உள்ள மெனுவிற்குச் சென்று ஃபைல் அதன் பிறகு விரிதாள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்து உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்வுசெய்யவும்.
  2. லத்தீன் அல்லாத மொழியைத் தேர்வுசெய்யும்போது கருவிப்பட்டியில் "உள்ளீட்டுக் கருவிகள் மெனு" காட்டப்படும். இந்தி அல்லது சீன மொழி போன்ற லத்தீன் அல்லாத எழுத்துகளை டைப் செய்ய, "உள்ளீட்டுக் கருவிகள் மெனு" என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.  கவனத்திற்கு: உங்கள் கீபோர்டில் Ctrl + Alt + Shift + k (PC) அல்லது ⌘ + Option + Shift + k (Mac) ஆகிய விசைகளை அழுத்தியும் "உள்ளீட்டுக் கருவிகள் மெனுவைத்" திறக்கலாம்.
    • ஒலிப்புமுறை உள்ளீடு: ஒரு சொல்லின் ஒலிப்புமுறை எழுத்துகளை லத்தீன் எழுத்துகளில் உள்ளிடவும், அதன்பிறகு திரையில் காட்டப்படும் விருப்பங்களில் சரியாகப் பொருந்தக்கூடிய ஒன்றைக் கிளிக் செய்யவும்.
    • கீபோர்ட் உள்ளீடு: எழுத்துகளையும் சின்னங்களையும் உள்ளிட விர்ச்சுவல் கீபோர்டில் உள்ள பட்டன்களைக் கிளிக் செய்யவும் அல்லது உங்கள் கீபோர்டில் அதற்குரிய பட்டன்களை டைப் செய்யவும்.
    • கையெழுத்து வடிவ உள்ளீடு: திரையின் கீழ் வலதுபுறத்தில் உள்ள பேனலில் எழுத்துகளை வரையவும், அதன்பிறகு திரையில் காட்டப்படும் விருப்பங்களில் சரியாகப் பொருந்தக்கூடிய ஒன்றைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: நிர்வாகிக் கன்சோலில் "தனிப்பட்ட கட்டுப்பாடு இல்லாத கூடுதல் சேவைகளுக்கான அணுகல்" விருப்பம் இயக்கத்தில் இருந்தால் மட்டுமே Workspaceஸில் கையெழுத்து வடிவ உள்ளீட்டைப் பயன்படுத்த முடியும்.

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
159355124481697704
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false