கலத்தில் கீழ்த்தோன்றும் பட்டியலை உருவாக்குதல்

Google Sheets மூலம் கலத்தில் கீழ்த்தோன்றும் பட்டியல்களை உருவாக்கலாம்.

கீழ்த்தோன்றல் பட்டியலை உருவாக்குதல்

  1. Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. கீழ்த்தோன்றல் பட்டியலை உருவாக்க விரும்பும் கலத்தையோ கலங்களையோ தேர்ந்தெடுக்கவும்.
  3. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • “@” என்று டைப் செய்யவும். மெனுவில் காம்பனென்ட்டுகள் பிரிவின் கீழ் உள்ள கீழ்த்தோன்றல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
      • உதவிக்குறிப்பு: "திட்டப்பணியின் நிலை" அல்லது "முன்னுரிமை" போன்ற உபயோகச் சூழல்களுக்கு நீங்கள் முன்னமைக்கப்பட்ட கீழ்த்தோன்றல்களையும் சேர்க்கலாம்.
    • மேலேயுள்ள சேர் அதன் பிறகு கீழ்த்தோன்றல் மெனு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • தரவு அதன் பிறகு தரவுச் சரிபார்ப்பு என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு விதியைச் சேர்ப்பதற்கான ஐகானைக் கிளிக் செய்யவும்.
    • கலத்தின் மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு கீழ்த்தோன்றல் மெனு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தரவுச் சரிபார்ப்பு விதிகள் பேனலில் "நிபந்தனை" என்பதற்குக் கீழே ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • கீழ்த்தோன்றல் (வரம்பில் இருந்து): பட்டியலில் சேர்க்க, கலங்களைத் தேர்வுசெய்யவும்.
    • கீழ்த்தோன்றல்: கீழ்த்தோன்றல் மதிப்பை வழங்கவும்.
      • கூடுதல் கீழ்த்தோன்றல் மதிப்புகளைச் சேர்க்க மற்றொன்றைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. விருப்பத்திற்குரியது: பட்டியலில் உள்ளவற்றுடன் பொருந்தாத கலத்தில் மதிப்பை வழங்கினால் அது நிராகரிக்கப்படும். பட்டியலில் இல்லாத மதிப்புகளைப் பயனர்களால் வழங்க முடிய வேண்டும் என நீங்கள் விரும்பினால்:
    1. மேம்பட்ட விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. "தவறான தரவின்போது:" என்பதன் கீழ், எச்சரிக்கை காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

கீழ்த்தோன்றல் சிப் பரிந்துரைகளை இயக்குதல் அல்லது முடக்குதல்

  1. Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள கருவிகள் அதன் பிறகு பரிந்துரைக் கட்டுப்பாடுகள் அதன் பிறகு கீழ்த்தோன்றல் சிப் பரிந்துரைகளை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஏற்கெனவே தரவைக் கொண்ட கலங்களில் கீழ்த்தோன்றல் பட்டியலை உருவாக்குதல்

  1. Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. ஏற்கெனவே தரவைக் கொண்ட கலத்தையோ கலங்களையோ தேர்ந்தெடுக்கவும்.
  3. வலது கிளிக் செய்து அதன் பிறகு கீழ்த்தோன்றல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    1. தேர்ந்தெடுக்கப்பட்ட கலத்தில் ஏற்கெனவே ஒரு கீழ்த்தோன்றல் மெனு இருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்த்தோன்றும் பட்டியல் விதியுடன் பிற கல மதிப்புகள் சேர்க்கப்படும்.
    2. தேர்ந்தெடுக்கப்பட்ட வரம்புகளின் வரிசைமுறையில் கீழ்த்தோன்றல் விருப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. கீழ்த்தோன்றல் விருப்பங்களின் வரிசையில் முதலில் நெடுவரிசைகளும், அதன் பிறகு வரிசைகளும் நிரப்பப்படும்.
    3. விருப்பத்திற்குரியது: கூடுதல் கீழ்த்தோன்றல் மதிப்புகளைச் சேர்க்க:
      1. தரவுச் சரிபார்ப்பு விதிகள் பேனலுக்குச் செல்லவும்.
      2. "நிபந்தனை" என்பதற்குக் கீழ், இன்னொரு மதிப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. விருப்பத்திற்குரியது: பட்டியலில் உள்ளவற்றுடன் பொருந்தாத கலத்தில் மதிப்பை வழங்கினால் அது நிராகரிக்கப்படும். பட்டியலில் இல்லாத மதிப்புகளைப் பயனர்களால் வழங்க முடிய வேண்டும் என நீங்கள் விரும்பினால்:
    1. மேம்பட்ட விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. "தவறான தரவின்போது:" என்பதன் கீழ், எச்சரிக்கை காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

கீழ்த்தோன்றல் பட்டியலை மாற்றுதல் அல்லது நீக்குதல்

முக்கியம்: வரம்பில் இருந்து கீழ்த்தோன்றல் மதிப்பு தானாக நிரப்பப்படும்போது நிபந்தனை மூல வரம்பில் இருந்து வண்ணம் ஒதுக்கப்பட்ட மதிப்பை நீங்கள் நீக்கினால் நிபந்தனையின் கீழ் அந்த மதிப்பும் வண்ணமும் காட்டப்படும் ஆனால் அதைத் திருத்த முடியாது. பட்டியலில் இருந்து மதிப்பை அகற்ற, மூல வரம்பையோ எந்தவொரு மதிப்பின் நிறத்தையோ மாற்றலாம்.

  1. Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. நீங்கள் மாற்ற விரும்பும் கலத்தையோ கலங்களையோ தேர்ந்தெடுத்தபின் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • தரவு அதன் பிறகு தரவுச் சரிபார்ப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • கீழ்த்தோன்றல் மெனு அதன் பிறகு திருத்துவதற்கான பட்டனை கிளிக் செய்யவும்.
  3. கீழ்த்தோன்றும் பட்டியலைத் திருத்துதல்:
    • பட்டியலிடப்பட்ட விருப்பங்களை மாற்ற "நிபந்தனை" என்பதற்குக் கீழுள்ளவற்றை மாற்றவும்.
    • பட்டியலை நீக்க ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
      • விதியை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
      • கலங்கள் காலியாக இருந்தால் கலங்களைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பிறகு Backspace பட்டனை அழுத்தவும்.
      • கலங்கள் காலியாக இருந்தால் கலங்களைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பிறகு திருத்து அதன் பிறகு நீக்கு அதன் பிறகு மதிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • காட்சி நடையை மாற்ற: மேம்பட்ட விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பிறகு, "காட்சி நடை" என்பதற்குக் கீழ் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
      • சிப்
      • அம்புக்குறி
      • எளிய உரை
  4. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுத்த உள்ளடக்க வரம்பை மாற்றினால் அவை பட்டியலில் தானாகப் புதுப்பிக்கப்படும்.
true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3040561194807452877
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false