வரைபடங்களை உருவாக்குதல் செருகுதல் திருத்துதல்

பணி அல்லது பள்ளிக்கான Google Docsஸில் இருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா? இலவச G Suite சோதனைக்குப் பதிவு செய்யுங்கள்.

Google வரைபொருளின் மூலம் வரைபடங்களை உருவாக்கலாம் செருகலாம் திருத்தலாம்.

Google Docs இல் வரைபடத்தை உருவாக்குதல்

 1. உங்கள் கம்ப்யூட்டரில் ஆவணத்தைத் திறக்கவும்.
 2. மேல் இடதுபுறத்தில், செருகு அதன் பிறகு வரைபடம் அதன் பிறகு புதிய என்பதைக் கிளிக் செய்யவும்.
 3. திருத்தும் கருவிகள் மூலம் வடிவங்கள், கோடுகள் அல்லது உரையைச் செருகவும்.

Google Drive இல் வரைபடத்தை உருவாக்குதல்

 1. உங்கள் கம்ப்யூட்டரில் ஆவணத்தைத் திறக்கவும்.
 2. மேல் இடதுபுறத்தில், கோப்பு அதன் பிறகு புதிய அதன் பிறகு வரைபடம் என்பதைக் கிளிக் செய்யவும்.
 3. திருத்தும் கருவிகள் மூலம் வடிவங்கள், கோடுகள் அல்லது உரையைச் செருகவும்.

Google Drive இலிருந்து வரைபடத்தைச் செருகுதல்

 1. உங்கள் கம்ப்யூட்டரில் ஆவணத்தைத் திறக்கவும்.
 2. மேல் இடதுபுறத்தில், செருகு அதன் பிறகு வரைபடம் அதன் பிறகுDrive இலிருந்து என்பதைக் கிளிக் செய்யவும்.
 3. செருக வேண்டிய வரைபடத்தைக் கிளிக் செய்யவும். 
 4. தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

செருகிய வரைபடம் அசல் வரைபடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

 • வரைபடத்தைப் புதுப்பிக்க: வரைபடத்தைக் கிளிக் செய்யவும். மேல் வலதுபுறத்தில், புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும். 
 • வரைபடத்தை இணைப்பு நீக்க: வரைபடத்தைக் கிளிக் செய்யவும். மேல் வலதுபுறத்தில், இணைப்பை நீக்கு இணைப்பை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

திருத்தும் கருவிகளைப் பயன்படுத்துதல்

கோடுகள், வடிவங்கள், உரைப் பெட்டிகள், படங்கள் ஆகியவற்றைச் சேர்க்க, திருத்தும் கருவிகளைப் பயன்படுத்தலாம்.

கோடு ஒன்று வரைதல்
 1. பக்கத்தின் மேலே, கோட்டைத் தேர்ந்தெடு என்பதைக் கண்டுபிடித்து, கிளிக் செய்யவும்.
 2. உங்களுக்கு வேண்டிய கோட்டு வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. உங்கள் வரைபடத்தில் அந்தக் கோட்டைப் பொருத்தவும்:
  • கோடு, வளைந்த இணைப்பான், வளைவு இணைப்பான் அல்லது அம்புக்குறி: தொடங்க, கிளிக் செய்து, கேன்வாஸ்க்கு இடையில் இழுக்கவும்.
  • வளைவு அல்லது பலகோடு: தொடங்க, கிளிக் செய்து, பிறகு கோடு வளைய வேண்டிய ஒவ்வொரு புள்ளியிலும் கிளிக் செய்யவும். முடிக்க, இரு கிளிக் செய்யவும் அல்லது வடிவத்தை முடிக்கவும்.
  • கிறுக்கல்: தொடங்க, கிளிக் செய்து, கேன்வாஸ்க்கு இடையில் இழுக்கவும்.
 4. தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
வடிவத்தை வரைதல்
 1. பக்கத்தின் மேலே, வடிவம் என்பதைக் கண்டுபிடித்து, கிளிக் செய்யவும்.
 2. பயன்படுத்த வேண்டிய வடிவத்தைத் தேர்வுசெய்யவும்.
 3. உங்கள் வடிவத்தை வரைய, கேன்வாஸ் மீது கிளிக் செய்து இழுக்கவும்.
உரையைச் செருகுதல்
 1. பக்கத்தின் மேலே, செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
  • கேன்வாஸின் மீது நேரடியாக உரையை வடிவமாகப் பொருத்த, எழுத்து வடிவங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பாக்ஸ் அல்லது வரையறுக்கப்பட்ட பகுதியின் உள்ளே உரையைப் பொருத்த, உரைப் பெட்டி என்பதைக் கிளிக் செய்து, அதை வைக்க வேண்டிய இடத்தில் கிளிக் செய்யவும்.
 2. உங்கள் உரையை உள்ளிட்டு, Enter விசையை அழுத்தவும்.
 3. எழுத்து வடிவங்கள் அல்லது உரைப் பெட்டியைத் தேர்ந்தெடுக்கலாம், அளவுமாற்றலாம், வடிவமைக்கலாம் அல்லது உரையில் தடிமனாக்கு அல்லது சாய்வாக்கு போன்ற நடைகளைப் பயன்படுத்தலாம்.
படத்தைச் செருகுதல்
 1. பக்கத்தின் மேலே, படம் என்பதைக் கண்டுபிடித்து, கிளிக் செய்யவும்.
 2. படத்தைத் தேர்ந்தெடுக்க அல்லது பதிவேற்ற, வழிமுறைகளைப் பின்பற்றவும்.
 3. வேறு எந்த வடிவத்தைப் போன்றும் படத்தை நகர்த்தலாம், வடிவமைக்கலாம்.
  • படத்தை நகர்த்த: கேன்வாஸின் மீது அதை இழுக்கவும்.
  • படத்தை அளவுமாற்ற: மூலைகளில் நீல பாக்ஸ்களை இழுக்கவும்.
  • படத்தைச் சுழற்ற: வடிவத்தின் வெளியே உள்ள நீலப் புள்ளிகளை இழுக்கவும். ஒரே நேரத்தில் 15°சுழற்ற, Shift விசையைப் பிடிக்கவும்.
  • பார்டர் வண்ணம், கோட்டின் தடிமன் அல்லது பார்டர்/கோட்டு நடையை மாற்ற: கேன்வாஸின் மீதுள்ள பொத்தான்களைப் பயன்படுத்தவும்.

வடிவங்களைத் தேர்ந்தெடுத்தல், வடிவமைத்தல்

 1. உங்கள் கம்ப்யூட்டரில், Google Drive இல் வரைபடத்தைத் திறக்கவும்.
 2. பக்கத்தின் மேலே, தேர்ந்தெடு என்பதைக் கண்டுபிடித்து, கிளிக் செய்யவும்.
 3. கேன்வாஸின் மீது, மாற்ற வேண்டிய வடிவம், கோடு அல்லது உரைப் பெட்டி ஆகியவற்றைக் கிளிக் செய்யவும்.
  • வடிவத்தை நகர்த்த: கேன்வாஸின் மீது அதை இழுக்கவும்.
  • வடிவத்தை அளவுமாற்ற: மூலைகளில் நீல பாக்ஸ்களை இழுக்கவும்.
  • கோட்டைச் சுழற்ற: வடிவத்தின் வெளியே உள்ள நீலப் புள்ளிகளை இழுக்கவும். கோடுகள் இந்த விதத்தில் சுழற்றப்படலாம்.
  • வடிவத்தைச் சுழற்ற: வடிவத்தின் வெளியே உள்ள நீலப் புள்ளியை இழுக்கவும். ஒரே நேரத்தில் 15°சுழற்ற, Shift விசையைப் பிடிக்கவும்.
  • வண்ணத்தை நிரப்பு வண்ணம், கோட்டு வண்ணம், கோட்டின் தடிமன் அல்லது பார்டர்/கோட்டு நடையை மாற்ற: கேன்வாஸின் மீதுள்ள பொத்தான்களைப் பயன்படுத்தவும்.
  • வடிவத்தினுள் உரையை வைக்க: வரையறுக்கப்பட்ட வடிவத்தில் இரு கிளிக் செய்து, உள்ளிடத் தொடங்கவும்.

வடிவத்தை நகலெடுத்தல்

வடிவத்தை நகலெடுக்க, Option (Macs இல்) விசையை அல்லது Ctrl (Windows இல்) விசையைப் பிடித்துக்கொண்டு, புதிய இடத்திற்கு நகலெடுக்க, இழுக்கவும்.

உங்கள் வரைபட அளவை மாற்றுதல்

 1. உங்கள் கம்ப்யூட்டரில், Google Drive இல் வரைபடத்தைத் திறக்கவும்.
 2. மெனுவிற்குச் சென்று, கோப்பு அதன் பிறகு பக்க அமைவு என்பதைக் கிளிக் செய்யவும்.
 3. கீழ் தோன்றும் மெனுவிலிருந்து அளவைத் தேர்ந்தெடுக்கவும். விருப்பமான அளவைத் தேர்வுசெய்ய, தனிப்பயன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இது பயனுள்ளதாக இருந்ததா?
இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?