Google Slidesஸில் டெம்ப்ளேட்டைப் பயன்படுத்துதல் அல்லது தீம், பின்புலம், தளவமைப்பு போன்றவற்றை மாற்றுதல்

Google Slidesஸில் உங்கள் விளக்கக்காட்சி காட்டப்படும் விதத்தை நீங்கள் பிரத்தியேகமாக்கலாம். டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தி உங்கள் விளக்கக்காட்சியைத் தொடங்கலாம். அல்லது, தீம், பின்புலம், தளவமைப்பு போன்றவற்றை மாற்றலாம்.

  • தீம்: வண்ணங்கள், எழுத்து வடிவங்கள், பின்புலம், தளவமைப்புகள் ஆகியவற்றின் முன்னமைக்கப்பட்ட குழுவாகும்.
  • பின்புலம்: ஸ்லைடின் உள்ளடக்கத்திற்குப் பின்னால் இருக்கும் படம் அல்லது வண்ணம்.
  • தளவமைப்பு: ஸ்லைடில் வார்த்தைகளும் படங்களும் அமைந்திருக்கும் முறை.
  • டெம்ப்ளேட்: பின்வருபவை அடங்கிய, முன்பே வடிவமைக்கப்பட்ட ஸ்லைடுகளின் தொகுப்பு:
    • தீம்கள்
    • தளவமைப்புகள்
    • பின்புலங்கள்
    • எழுத்து வடிவங்கள்
    • வண்ணத் திட்டங்கள்
    • மாதிரி அல்லது ஒதுக்கிட உள்ளடக்கம்

தீமினை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள ஸ்லைடு அதன் பிறகு தீமினை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில், நீங்கள் விரும்பும் தீமினைக் கிளிக் செய்யவும்.
பின்புல வண்ணத்தையோ படத்தையோ மாற்றுதல்

பின்புல வண்ணத்தை மாற்றுதல்

பின்புலம் என்பது ஸ்லைடின் உள்ளடக்கத்திற்குப் பின்னால் இருக்கும் படம் அல்லது வண்ணமாகும். விளக்கக்காட்சியின் ஒரே ஒரு ஸ்லைடு அல்லது அனைத்து ஸ்லைடுகளின் பின்புல வண்ணத்தை மாற்றலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. ஸ்லைடைத் தேர்வுசெய்யவும்.
  3. மேலே உள்ள ஸ்லைடு அதன் பிறகு பின்புலத்தை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "வண்ணம்" என்பதற்கு வலதுபுறத்தில் உள்ள பெட்டியைக் கிளிக் செய்யவும்.
  5. ஒரு வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
    1. நீங்கள் விரும்பும் வண்ணத்தைச் சேர்க்க, "பிரத்தியேகமானவை" என்பதன் கீழே உள்ள புதியவை ஐகானைக் கிளிக் செய்யவும்.
    2. ஹெக்ஸ் குறியீட்டைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது நீங்களாகவே வண்ணம், வண்ணச் சாயல், தெளிவுத் திறன் ஆகியவற்றைச் சரிசெய்யலாம்.
    3. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. வண்ணத்தை:
    • ஒரு ஸ்லைடில் சேர்க்க, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஒட்டுமொத்த விளக்கக்காட்சிக்கும் சேர்க்க, தீமில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

பின்புலப் படத்தை மாற்றுதல்

Google Drive அல்லது கம்ப்யூட்டரில் உள்ள படத்தை ஒரே ஒரு ஸ்லைடிலோ ஒட்டுமொத்த விளக்கக்காட்சியிலோ சேர்க்கலாம்.

முக்கியம்: படங்கள் .gif, .jpg அல்லது .png வடிவமைப்பிலும் 50 மெ.பை.க்கும் குறைவானதாகவும் இருக்க வேண்டும்.

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. ஸ்லைடைத் தேர்வுசெய்யவும்.
  3. மேலே உள்ள ஸ்லைடு அதன் பிறகு பின்புலத்தை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "படம்" என்பதற்கு வலதுபுறத்தில் உள்ள தேர்வுசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. படத்தைத் தேர்வு செய்து தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஒரே ஒரு ஸ்லைடிற்குப் படத்தைச் சேர்க்க முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஒட்டுமொத்த விளக்கக்காட்சிக்கும் படத்தைச் சேர்க்க, தீமில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: Google Slidesஸில் படத்தை இழுத்தும் விடலாம். விளக்கக்காட்சியின் பின்புலப் படத்தை மாற்ற, விளக்கக்காட்சிக் கேன்வாஸின் ஓரத்திற்குக் கர்சரைக் கொண்டுசெல்லவும்.

புதிய தீமினை இறக்குதல்

முக்கியம்: பின்புலத்தை மாற்ற இவற்றில் இருந்து புதிய தீமினை இறக்கிக்கொள்ளலாம்:

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள ஸ்லைடு அதன் பிறகு தீமினை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழ் வலதுபுறத்தில் உள்ள தீமினை இறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பயன்படுத்த விரும்பும் விளக்கக்காட்சியை இரு கிளிக் செய்யவும்.
  5. விரும்பும் தீமினைக் கிளிக் செய்யவும்.
  6. தீமினை இறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
தீமின் வண்ணங்களை மாற்றுதல்

உங்கள் விளக்கக்காட்சியின் தீமில் உள்ள ஒவ்வொரு தனிப்பட்ட வண்ணத்தையும் மாற்ற முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள ஸ்லைடு அதன் பிறகு தீமினை மாற்று அதன் பிறகு வண்ணங்கள் வண்ணம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் உள்ள "தீம் வண்ணங்கள்" என்பதன் கீழே, மாற்ற விரும்பும் வண்ணத்தைக் கீழ் தோன்றும் பெட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
    • ஏற்கெனவே இருக்கும் வண்ணத்தைப் பயன்படுத்த: "இயல்பு" என்பதன் கீழே நீங்கள் பயன்படுத்த விரும்பும் வண்ணத்தைக் கிளிக் செய்யவும்.
    • வண்ணத்தைப் பிரத்தியேகமாக்க: பல வண்ணங்களைக் கொண்ட சதுரப் பெட்டியில் இருந்து விரும்பும் வண்ணத்தைக் கிளிக் செய்யவும் அல்லது அதன் ஹெக்ஸ் மதிப்பை டைப் செய்யவும். அத்துடன் ஒவ்வொரு வண்ணத்தின் தெளிவுத்திறனையும் நீங்கள் மாற்றலாம்.
தளவமைப்பை மாற்றுதல்

தளவமைப்பு என்பது ஸ்லைடில் வார்த்தைகளும் படங்களும் அமைந்திருக்கும் முறையாகும்.

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. ஸ்லைடைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள தளவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பயன்படுத்த விரும்பும் தளவமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தி ஸ்லைடுகளை உருவாக்குதல்

தளவமைப்பு என்பது ஸ்லைடில் வார்த்தைகளும் படங்களும் அமைந்திருக்கும் முறையாகும்.

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கருவிப்பட்டியில் உள்ள ஃபைல் அதன் பிறகு புதிது அதன் பிறகு டெம்ப்ளேட் கேலரியிலிருந்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வலதுபுறத்தில், நீங்கள் விரும்பும் தீமினைக் கிளிக் செய்யவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17283129570810834491
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false