Google Slidesஸில் டெம்ப்ளேட்டைப் பயன்படுத்துதல் அல்லது தீம், பின்புலம், தளவமைப்பு போன்றவற்றை மாற்றுதல்

Google Slidesஸில் உங்கள் விளக்கக்காட்சி காட்டப்படும் விதத்தை நீங்கள் பிரத்தியேகமாக்கலாம். டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தி உங்கள் விளக்கக்காட்சியைத் தொடங்கலாம். அல்லது, தீம், பின்புலம், தளவமைப்பு போன்றவற்றை மாற்றலாம்.

  • தீம்: வண்ணங்கள், எழுத்து வடிவங்கள், பின்புலம், தளவமைப்புகள் ஆகியவற்றின் முன்னமைக்கப்பட்ட குழுவாகும்.
  • பின்புலம்: ஸ்லைடின் உள்ளடக்கத்திற்குப் பின்னால் இருக்கும் படம் அல்லது வண்ணம்.
  • தளவமைப்பு: ஸ்லைடில் வார்த்தைகளும் படங்களும் அமைந்திருக்கும் முறை.
  • டெம்ப்ளேட்: பின்வருபவை அடங்கிய, முன்பே வடிவமைக்கப்பட்ட ஸ்லைடுகளின் தொகுப்பு:
    • தீம்கள்
    • தளவமைப்புகள்
    • பின்புலங்கள்
    • எழுத்து வடிவங்கள்
    • வண்ணத் திட்டங்கள்
    • மாதிரி அல்லது ஒதுக்கிட உள்ளடக்கம்

தீமினை மாற்றுதல்

தீம் என்பது வண்ணங்கள், எழுத்துருக்கள், பின்புலங்கள், தளவமைப்புகள் ஆகியவற்றின் முன்னமைக்கப்பட்ட குழுவாகும்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Slides ஆப்ஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மாற்ற விரும்பும் ஸ்லைடை இருமுறை தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனு மேலும் அதன் பிறகு தீமினை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. விரும்பும் தீமினைத் தட்டவும்.

தளவமைப்பை மாற்றுதல்

தளவமைப்பு என்பது ஸ்லைடில் வார்த்தைகளையும் படங்களையும் நீங்கள் அமைக்கும் முறையாகும்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Slides ஆப்ஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மாற்ற விரும்பும் ஸ்லைடை இருமுறை தட்டவும்.
  3. மூன்று புள்ளி மெனு மேலும் அதன் பிறகு தளவமைப்பை மாற்று என்பதைத் தட்டவும்.
  4. பயன்படுத்த விரும்பும் தளவமைப்பைத் தட்டவும்.

பின்புலப் படத்தை மாற்றுதல்

பின்புலத்தை மாற்ற, கம்ப்யூட்டரில் உங்கள் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.

ஸ்லைடின் பின்புலத்தை எப்படி மாற்றுவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தி ஸ்லைடுகளை உருவாக்குதல்

பின்புலம் என்பது ஸ்லைடின் உள்ளடக்கத்திற்குப் பின்னால் இருக்கும் படம் அல்லது வண்ணமாகும்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Slides ஆப்ஸை திறக்கவும்.
  2. கீழே உள்ள சேர்ப்பதற்கான பட்டனை புதியவை தட்டவும்.
  3. டெம்ப்ளேட்டைத் தேர்வுசெய் அதன் பிறகு டெம்ப்ளேட்டைத் தேர்ந்தெடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8134797447395463551
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false