ஸ்லைடுகளைத் தொகுத்து வழங்குதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

முழுத்திரையில் தோன்றும் வகையில் நீங்கள் Google Slidesஸை வழங்கலாம்.

கம்ப்யூட்டரிலும் மொபைல் சாதனத்திலும் Chromecast/AirPlay மூலமாக டிவியிலும் முழுத்திரையில் விளக்கக்காட்சிகளைக் காட்சிப்படுத்தலாம். அதுமட்டுமின்றி வழங்கும்போது பார்வையாளர்களின் கேள்விகளை ஏற்று அவற்றுக்குப் பதிலளிக்கவும் நேரம் ஒதுக்கலாம்

விளக்காக்காட்சியைக் காட்டுதல்

Google Slidesஸில் முழுத்திரையில் விளக்கக்காட்சியைத் தொகுத்து வழங்க இவற்றைச் செய்யவும்:

  1. Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் ஸ்லைடுகாட்சி  என்பதைக் கிளிக் செய்யவும். சிறந்த செயல்பாட்டிற்கு Google Chrome உலாவி மூலம் விளக்கக்காட்சியை வழங்கவும்.
  3. நடப்பு ஸ்லைடிலிருந்து விளக்கக்காட்சி முழுத்திரையில் காட்டப்படும். ஸ்லைடுகளை மாற்ற உங்கள் கீபோர்டில் அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தவும் அல்லது விளக்கக்காட்சியின் கீழுள்ள அம்புக்குறிகளைக் கிளிக் செய்யவும்.
  4. முழுத்திரையிலிருந்து வெளியேற Esc விசையை அழுத்தவும்.

குறிப்புகள், தானாக நகரும் ஸ்லைடுகள் மற்றும் பலவற்றுடன் தொகுத்து வழங்குதல்

பேச்சாளர் குறிப்புகளுடன் விளக்கக்காட்சியைக் காட்டுதல்

  1. Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மேல் வலது மூலையில் உள்ள ஸ்லைடுகாட்சி என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்யவும்.
  3. வழங்குபவர் காட்சி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பேச்சாளர் குறிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

அடுத்தடுத்த ஸ்லைடுகளைத் தானாகக் காட்டுதல்

இதுபோன்ற சமயங்களில் அடுத்தடுத்த ஸ்லைடுகள் தானாகக் காட்டப்படும் வகையில் அமைக்கலாம்:
  • உங்கள் விளக்கக்காட்சியைப் பகிரும்போது.
  • நீங்கள் வெளியிட்ட விளக்கக்காட்சிக்கான இணைப்பை யாரேனும் கிளிக் செய்யும்போது.
  • நீங்கள் வெளியிட்டு இணையத்தில் உட்பொதிக்கப்பட்ட விளக்கக்காட்சியை யாரேனும் பார்க்கும்போது.

தொகுத்து வழங்கும்போது ஸ்லைடுகளைத் தானாகவே நகர விடுதல்

  1. Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மேல் வலது மூலையில் உள்ள ஸ்லைடுகாட்சி  என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழே உள்ள விருப்பங்கள்  அதன் பிறகு தானாக நகர்வதற்கான விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் ஸ்லைடுகள் எவ்வளவு வேகமாக மாற வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்.
உதவிக்குறிப்பு: உங்கள் விளக்கக்காட்சியை ஒவ்வொரு முறை தொகுத்து வழங்கும்போதும் தானாக நகர்வதற்கான விருப்பங்களை மீட்டமைக்கலாம்.

வெளியிட்ட விளக்கக்காட்சியில் அடுத்தடுத்த ஸ்லைடுகளைத் தானாகக் காட்டுதல்

முக்கியம்:

  • Google Slidesஸை பணி அல்லது பள்ளி மூலம் பயன்படுத்தினால் உங்கள் நிறுவனத்திற்குள் இருப்பவர்களுடன் மட்டுமே இணைப்பைப் பகிர முடியும்.
  • விளக்கக்காட்சியை வெளியிட்ட பிறகு இணைப்புள்ள எவரும் உங்கள் விளக்கக்காட்சியைப் பார்க்க முடியும்.
  1. Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கோப்பு அதன் பிறகு இணையத்தில் வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இணை அல்லது உட்பொதி என்பதைத் தேர்வுசெய்யவும்.
  4. "தானாக நகரும் ஸ்லைடுகள்" என்பதன் கீழ் ஸ்லைடுகளுக்கு இடையே எவ்வளவு நேரத்தைச் சேர்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  5. வெளியிடு அதன் பிறகு சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: உங்கள் விளக்கக்காட்சியையோ நேரத்தையோ மாற்ற விரும்பினால் புதிய இணைப்பை நகலெடுக்க வேண்டும்.

வெளியிடுவதை நிறுத்துதல்

  • Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  • கோப்பு அதன் பிறகு இணையத்தில் வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  • கீழே வெளியிட்ட உள்ளடக்கம் & அமைப்புகள் அதன் பிறகு வெளியிடுவதை நிறுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் ஸ்கிரீனைப் பகிரும்போது ஹைலைட் செய்தல் மற்றும் குறிப்புகளைச் சேர்த்தல்

நீங்கள் ஸ்கிரீனைப் பகிரும்போது, பேனா கருவியைப் பயன்படுத்தி வரையலாம், குறிப்புகளைச் சேர்க்கலாம். நீங்கள் விளக்கக்காட்சியைக் காட்டும்வரை சிறுகுறிப்புகள் காட்டப்படும், ஆனால் ஸ்லைடுகாட்சியை நிறுத்தியதும் மறைந்துவிடும்.

ஸ்லைடுகாட்சியைக் காட்டும்போது பேனா கருவியைப் பயன்படுத்துதல்

  1. உலாவியில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மேல் வலது மூலையில் உள்ள ஸ்லைடுகாட்சி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழ் இடதுபுறத்தில் உள்ள விருப்பங்கள் ஐகானை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு பேனா கருவியை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வரையவோ குறிப்பைச் சேர்க்கவோ உங்கள் ஸ்லைடில் கிளிக் செய்து இழுக்கவும்.
  5. விருப்பத்திற்குரியது:
    • பேனாவின் வண்ணத்தை மாற்ற, கீழே உள்ள பேனா கருவி ஐகானை கிளிக் செய்து அதன் பிறகு ஒரு வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
    • தற்போதைய ஸ்லைடில் உள்ள குறிப்புகளை அழிக்க, கீழே உள்ள அழிப்பதற்கான ஐகானை கிளிக் செய்து அதன் பிறகு அனைத்தையும் அழி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • நீங்கள் விளக்கக்காட்சியைக் காட்டும்போது பேனா கருவியை முடக்க இவற்றில் ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
      • கீழே உள்ள பேனா கருவி ஐகானை கிளிக் செய்து அதன் பிறகு முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
      • கீழே உள்ள விருப்பங்கள் ஐகானை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு பேனா கருவியை முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்கிரீனைப் பகிரும்போது செய்யக்கூடிய பிற செயல்கள்

When you present, you can choose more options from the toolbar at the bottom of the presentation window:

  • Select slides to present from a list
  • Open "Presenter" view
  • Turn on laser pointer
  • Print the presentation
  • Download the presentation in PDF or PPTX format
ஸ்கிரீனைப் பகிரும்போது பயன்படும் கீபோர்டு ஷார்ட்கட்கள்

PC கீபோர்டு ஷார்ட்கட்கள்

ஸ்கிரீனைப் பகிர்வதை நிறுத்த Esc
அடுத்து
முந்தையது
குறிப்பிட்ட ஸ்லைடிற்குச் செல்ல (7ஐ அழுத்தி Enter பட்டனை அழுத்தினால் 7வது ஸ்லைடிற்குச் செல்லும்) எண்ணை அழுத்தி Enter பட்டனை அழுத்தவும்
முதல் ஸ்லைடு Home
கடைசி ஸ்லைடு End
பேச்சாளர் குறிப்புகளைத் திறக்க s
பார்வையாளர் கருவிகளைத் திறக்க a
லேசர் பாயிண்டரை இயக்க/முடக்க l
அச்சிட Ctrl + p
வசனங்களை இயக்க/முடக்க (ஆங்கிலம் மட்டும்) Ctrl + Shift + c
முழுத்திரையைக் காட்ட/குறைக்க F11
காலியான கருப்பு ஸ்லைடைக் காட்ட b
காலியான கருப்பு ஸ்லைடை மூடி விளக்கக்காட்சிக்குச் செல்ல ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தவும்
காலியான வெள்ளை ஸ்லைடைக் காட்ட w
காலியான வெள்ளை ஸ்லைடை மூடி விளக்கக்காட்சிக்குச் செல்ல

ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தவும்

Mac கீபோர்டு ஷார்ட்கட்கள்

ஸ்கிரீனைப் பகிர்வதை நிறுத்த Esc
அடுத்து
முந்தையது
குறிப்பிட்ட ஸ்லைடிற்குச் செல்ல (7ஐ அழுத்தி Enter பட்டனை அழுத்தினால் 7வது ஸ்லைடிற்குச் செல்லும்) எண்ணை அழுத்தி Enter பட்டனை அழுத்தவும்
முதல் ஸ்லைடு Home
கடைசி ஸ்லைடு End
பேச்சாளர் குறிப்புகளைத் திறக்க s
பார்வையாளர் கருவிகளைத் திறக்க a
லேசர் பாயிண்டரை இயக்க/முடக்க l
அச்சிட Apple கமாண்ட் விசை + p
வசனங்களை இயக்க/முடக்க (ஆங்கிலம் மட்டும்) Apple கமாண்ட் விசை + Shift + c
முழுத்திரையைக் காட்ட/குறைக்க Apple கமாண்ட் விசை + Shift + f
காலியான கருப்பு ஸ்லைடைக் காட்ட b
காலியான கருப்பு ஸ்லைடை மூடி விளக்கக்காட்சிக்குச் செல்ல ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தவும்
காலியான வெள்ளை ஸ்லைடைக் காட்ட w
காலியான வெள்ளை ஸ்லைடை மூடி விளக்கக்காட்சிக்குச் செல்ல ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தவும்

Chrome கீபோர்டு ஷார்ட்கட்கள்

ஸ்கிரீனைப் பகிர்வதை நிறுத்த Esc
அடுத்து
முந்தையது
குறிப்பிட்ட ஸ்லைடிற்குச் செல்ல (7ஐ அழுத்தி Enter பட்டனை அழுத்தினால் 7வது ஸ்லைடிற்குச் செல்லும்) எண்ணை அழுத்தி Enter பட்டனை அழுத்தவும்
முதல் ஸ்லைடு Home
கடைசி ஸ்லைடு End
பேச்சாளர் குறிப்புகளைத் திறக்க s
பார்வையாளர் கருவிகளைத் திறக்க a
லேசர் பாயிண்டரை இயக்க/முடக்க l
அச்சிட Ctrl + p
வசனங்களை இயக்க/முடக்க (ஆங்கிலம் மட்டும்) Ctrl + Shift + c
முழுத்திரையைக் காட்ட/குறைக்க F11
காலியான கருப்பு ஸ்லைடைக் காட்ட b
காலியான கருப்பு ஸ்லைடை மூடி விளக்கக்காட்சிக்குச் செல்ல ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தவும்
காலியான வெள்ளை ஸ்லைடைக் காட்ட w
காலியான வெள்ளை ஸ்லைடை மூடி விளக்கக்காட்சிக்குச் செல்ல ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தவும்
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10987825092636878039
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false