டேபிள்களைச் சேர்த்தல் & திருத்துதல்

டேபிளைப் பயன்படுத்தி ஆவணம், விளக்கக்காட்சி ஆகியவற்றில் தகவல்களை ஒழுங்கமைக்கலாம். டேபிள்களைச் சேர்க்கலாம் நீக்கலாம். அதன் வரிசைகள் நெடுவரிசைகளின் அளவையும் ஸ்டைலையும் மாற்றலாம்.

கம்ப்யூட்டரில் Google Docஸைப் பயன்படுத்தினால் இவற்றையும் நீங்கள் செய்யலாம்:

  • வரிசைகளை வரிசைப்படுத்தல்
  • வரிசைகளையும் நெடுவரிசைகளையும் இழுத்து நகர்த்துதல்
  • ஒவ்வொரு பக்கத்தின் மேற்பகுதியிலும் டேபிளின் தலைப்பு வரிசைகள் காட்டப்படும் வகையில் அவற்றைப் பின் செய்தல்
  • தகவல்கள் அடுத்தடுத்தப் பக்கங்களுக்கு மீறிப்பாய்வதைத் தவிர்த்தல்

டேபிளைச் சேர்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஓர் ஆவணத்தையோ விளக்கக்காட்சியில் ஒரு ஸ்லைடையோ திறக்கவும்.
  2. செருகு அதன் பிறகு அட்டவணை அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்து, சேர்க்க விரும்பும் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளின் எண்ணிக்கையைத் தேர்வுசெய்யவும்.
    • டேபிள்களில் 20 x 20 கலங்கள் வரை சேர்க்கலாம்.
  3. உங்கள் ஆவணத்தில் டேபிள் சேர்க்கப்படும்.
வரிசைகளையோ நெடுவரிசைகளையோ சேர்த்தல்
  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஓர் ஆவணத்தையோ விளக்கக்காட்சியில் ஒரு ஸ்லைடையோ திறக்கவும்.
  2. டேபிளில் இருக்கும் கலத்தில் வலது கிளிக் செய்யவும்.
  3. தேர்ந்தெடுத்த கலத்துக்கு அருகில் வரிசையையோ நெடுவரிசையையோ சேர்க்க இவற்றைக் கிளிக் செய்யவும்:
    • இடதுபுறம் நெடுவரிசையைச் செருகு
    • வலதுபுறம் நெடுவரிசையைச் செருகு
    • மேலே வரிசையைச் செருகு
    • கீழே வரிசையைச் செருகு
வரிசைகள், நெடுவரிசைகள் அல்லது டேபிள்களை நீக்குதல்
  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஓர் ஆவணத்தையோ விளக்கக்காட்சியில் ஒரு ஸ்லைடையோ திறக்கவும்.
  2. டேபிளில் நீங்கள் நீக்க விரும்பும் வரிசையிலோ நெடுவரிசையிலோ உள்ள கலத்தில் வலது கிளிக் செய்யவும்.
  3. காட்டப்படும் மெனுவில், நெடுவரிசையை நீக்குவரிசையை நீக்கு அல்லது டேபிளை நீக்கு என்பதைத் தேர்வுசெய்யவும்.
அட்டவணையை நகர்த்துதல்
முக்கியம்: Google Docsஸில் பக்கவரிசை உள்ள வடிவமைப்பில் ஆவணம் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
அட்டவணையை நகர்த்தி ஓரிடத்தில் வைக்க இவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:
பாயிண்ட் செய்து இழுத்தல்:
  1. அட்டவணையை நகர்த்துவதற்கான ஐகான் காட்டப்படும் வரை அட்டவணையின் மூலைகளில் பாயிண்ட் செய்யவும்.
  2. அட்டவணையை இழுக்கவும்.
  3. தேவையான இடத்தில் அட்டவணையை விடவும்.
விரைவுத் தளவமைப்புகள்:
  1. அட்டவணை மீது வலது கிளிக் செய்யவும்.
  2. அட்டவணைப் பண்புகள் அதன் பிறகு விரைவுத் தளவமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தளவமைப்பு விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
வார்த்தைகளை மடித்தல்:
  1. அட்டவணை மீது வலது கிளிக் செய்யவும்.
  2. அட்டவணைப் பண்புகள் அதன் பிறகு அட்டவணை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “வடிவமைத்தல்” என்பதன் கீழ் உள்ள வார்த்தைகளை மடி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. இவற்றில் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • அட்டவணை மற்றும் மடிக்கப்பட்ட வார்த்தைகளுக்கான இடைவெளியை மாற்ற: “ஆவணத்தின் வரிகளுக்கான ஓரங்கள்” என்பதன் கீழ், ஓரங்களின் அளவை நகர்த்தவும்.
    • அட்டவணையை அதன் மடிக்கப்பட்ட வார்த்தைகளுடன் அதே நிலையில் வைக்க: “நிலை” என்பதன் கீழ், வார்த்தைகளுடன் நகர்த்து என்பதைக் கிளிக் செய்யவும்.
    • பக்கத்தில் இருக்கும் அதே நிலையில் அட்டவணையை வைக்க: “நிலை” என்பதன் கீழ், பக்கத்தில் பொருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

அட்டவணைகளை வடிவமைத்தல்

வரிசைகள் & நெடுவரிசைகளின் அளவுகளை மாற்றலாம், டேபிளின் வரிசைகளை வரிசைப்படுத்தலாம். தனிப்பட்ட கலங்களுக்குப் பார்டர் ஸ்டைலையும் பின்னணி வண்ணத்தையும் மாற்றலாம்.

வரிசைகள் & நெடுவரிசைகளின் அளவுகளை மாற்றுதல்

வரிசையின் அளவையோ நெடுவரிசையின் அளவையோ மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  2. டேபிளில் வரிசை/நெடுவரிசையின் கட்டக்கோடு மீது கர்சரை நகர்த்தவும்.
  3. கர்சர் இருபக்க அம்புக்குறியாக மாறும்போது வரிசை/நெடுவரிசையைக் கிளிக் செய்து நீங்கள் விரும்பும் அளவை அடையும்வரை இழுக்கவும்.

எல்லா வரிசைகளையும் நெடுவரிசைகளையும் ஒரே அளவாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  2. டேபிளில் வலது கிளிக் செய்யவும்.
  3. வரிசைகளைச் சமமாக்கு அல்லது நெடுவரிசைகளைச் சமமாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
டேபிளின் அளவை மாற்றுதல்

Google Docs

  1. கம்ப்யூட்டரில் ஓர் ஆவணத்தைத் திறந்து அட்டவணையில் உள்ள கலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. வடிவம் அதன் பிறகு அட்டவணை அதன் பிறகு அட்டவணை பண்புகள் என்பதற்குச் செல்லவும். 
    1. அட்டவணையில் வலது கிளிக் செய்தும் அட்டவணை பண்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
  3. "நெடுவரிசை" அல்லது "வரிசை" என்பதன் கீழே, ஹைலைட் செய்த எல்லாக் கலங்களுக்கும் நீங்கள் விரும்பும் அகல உயர அளவுகளை டைப் செய்யவும்.
  4. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Slides

  1. கம்ப்யூட்டரில் விளக்கக்காட்சியைத் திறந்து டேபிளைக் கிளிக் செய்யவும்.
  2. டேபிளின் மூலைக்கு மவுஸை நகர்த்தவும்.
  3. கரர் இருபக்க அம்புக்குறியாக மாறும்போது கிளிக் செய்து நீங்கள் விரும்பும் பக்கம் இழுக்கவும்.
அட்டவணையில் தனிப்பட்ட கலங்களின் வடிவமைப்பை மாற்றுதல்
  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  2. மாற்ற விரும்பும் கலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. கருவிப்பட்டியில் நீங்கள் மாற்ற விரும்பும் நடையைக் கிளிக் செய்யவும்:
    • பார்டர் வண்ணம் பார்டர் வண்ணம்
    • பார்டர் அகலம் அல்லது பார்டர் தடிமன் பார்டர் கோடு
    • பார்டர் கோடு பார்டரின் தடிமன்
    • பின்புல வண்ணம் அல்லது நிரப்பு வண்ணம் நிரப்பு

Google Docsஸில் கலத்தின் செங்குத்துச் சீரமைப்பையும் இடைவெளியையும் நீங்கள் மாற்றலாம்.

  1. கம்ப்யூட்டரில் ஆவணத்தைத் திறந்து அட்டவணையைக் கிளிக் செய்யவும்.
  2. வடிவம் அதன் பிறகு அட்டவணை அதன் பிறகு அட்டவணை பண்புகள் என்பதற்குச் செல்லவும். 
    1. அட்டவணையில் வலது கிளிக் செய்தும் அட்டவணை பண்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
  3. "கலம்" என்பதன் கீழே, கலத்தின் செங்குத்துச் சீரமைப்பைத் தேர்ந்தெடுக்கலாம் கல இடைவெளிக்கான மதிப்பை வழங்கலாம்.
Google Docsஸில் வரிசைகளை வரிசைப்படுத்துதல்
  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. டேபிளில் வலது கிளிக் செய்யவும்.
  3. டேபிளை வரிசைப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஏறுவரிசையில் டேபிளை வரிசைப்படுத்து அல்லது இறங்குவரிசையில் டேபிளை வரிசைப்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

டேபிள் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தியும் வரிசைகளை விரைவாக வரிசைப்படுத்தலாம்:

  1. டேபிளின் மேல் வரிசையில் கர்சரை வைக்கவும்.
  2. டேபிளை வரிசைப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும். 
  3. ஏறுவரிசையில் வரிசைப்படுத்து அல்லது இறங்குவரிசையில் வரிசைப்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உதவிக்குறிப்பு: டேபிளின் தலைப்பு வரிசைகள் வரிசைப்படுத்தப்படுவதைத் தவிர்க்க, தலைப்பு வரிசைகளைப் பின் செய்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும். பின் செய்த எந்த வரிசைகளும் வரிசைப்படுத்தப்படாது.

டேபிள்களைக் கட்டமைத்தல்

வரிசைகள் & நெடுவரிசைகளை நகர்த்தலாம், கலங்களை ஒன்றிணைக்கலாம். Google Docsஸில், பல பக்கங்களைத் தாண்டிச் செல்லும் பெரிய டேபிள்கள் இருந்தால் மற்றொரு பக்கத்திற்கு வரிசைகள் மீறிப்பாய்வதைத் தவிர்க்கும் வகையில் தலைப்பு வரிசைகளைப் பின் செய்யலாம்.

டேபிளில் கலங்களை ஒன்றிணைத்தல்

தலைப்புகளை உருவாக்கவோ தலைப்புகளைச் சேர்க்கவோ பல கலங்களில் உள்ள தகவல்களை ஒரே கலத்தில் வழங்கவோ கலங்களை ஒன்றிணைக்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  2. ஒன்றிணைக்க விரும்பும் கலங்களை ஹைலைட் செய்ய, அவற்றைக் கிளிக் செய்து இழுக்கவும்.
  3. கலங்களின் மீது வலது கிளிக் செய்யவும்.
  4. கலங்களைப் பிணை என்பதைக் கிளிக் செய்யவும். 

கலங்களின் பிணைப்பை நீக்க:

  1. பிணைப்பு நீக்க விரும்பும் கலங்களை ஹைலைட் செய்ய கிளிக் செய்து இழுக்கவும்.
  2. ஹைலைட் செய்த கலங்களின் மீது வலது கிளிக் செய்யவும்.
  3. கலங்களின் பிணைப்பை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Docsஸில் டேபிள் கலங்களைப் பிரித்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. கலத்தின் மீது வலது கிளிக் செய்யவும்.
  3. கலத்தைப் பிரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் விரும்பும் வரிசைகள் நெடுவரிசைகளுக்கான எண்ணிக்கையை டைப் செய்யவும்.
  5. பிரி என்பதைக் கிளிக் செய்யவும்.
Google Docsஸில் டேபிளின் வரிசைகளையும் நெடுவரிசைகளையும் நகர்த்துதல்

வரிசையை நகர்த்துதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. அட்டவணையின் இடதுபுற நெடுவரிசையின் மேலே கர்சரை கொண்டுசெல்லவும்.
  3. கை வடிவக் கர்சர் காட்டப்படும் வரை, இழு என்பதன் மீது கர்சரை வைக்கவும்.
  4. பிறகு வரிசையின் மீது கிளிக் செய்து மேலாகவோ கீழாகவோ இழுத்து அதன் புதிய இடத்திற்கு நகர்த்தவும். 

நெடுவரிசையை நகர்த்துதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. டேபிளின் மேல் வரிசையில் கர்சரை வைக்கவும்.
  3. கை வடிவக் கர்சர் காட்டப்படும் வரை, இழு என்பதன் மீது கர்சரை வைக்கவும்.
  4. பிறகு நெடுவரிசையின் மீது கிளிக் செய்து இடதுபுறமோ வலதுபுறமோ இழுத்து அதன் புதிய இடத்திற்கு நகர்த்தவும். 
Google Docsஸில் தலைப்பு வரிசைகளைப் பின் செய்தல்

நீளமான டேபிள் இருந்தால் ஒவ்வொரு பக்கத்தின் மேல் பகுதியிலும் தொடர்ந்து வரக்கூடிய வகையில் டேபிள் வரிசைகளைத் தலைப்பு வரிசைகளாக மாற்றலாம். பக்கவரிசையற்ற ஆவணத்தில் நீங்கள் இருந்தால் சாளரத்தின் மேல் பகுதியில் தொடர்ந்து தெரியக்கூடிய வகையில் டேபிள் வரிசைகளைப் பின் செய்யலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. அட்டவணையில் ஏதேனும் ஓர் இடத்தில் கிளிக் செய்யவும்.
  3. வடிவம் அதன் பிறகு டேபிள் அதன் பிறகு டேபிள் பண்புகள் என்பதற்குச் செல்லவும். 
    1. அட்டவணையில் வலது கிளிக் செய்தும் அட்டவணை பண்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
  4. "வரிசை" என்பதன் கீழே தலைப்பு வரிசைகளைப் பின் செய்தல் என்பதைத் தேர்வுசெய்து நீங்கள் பின் செய்ய விரும்பும் வரிசைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடவும்.
  5. மாற்றங்களைச் செயல்படுத்த சரி என்பதைக் கிளிக் செய்யவும். 

டேபிளில் இருந்தும் வரிசைகளை விரைவாகப் பின் செய்யலாம்:

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. எதுவரை பின் செய்ய விரும்புகிறீர்களோ அந்த வரிசையில் வலது கிளிக் செய்து 'இந்த வரிசை வரை தலைப்பைப் பின் செய்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
    1. எதுவரை பின் செய்ய விரும்புகிறீர்களோ அந்த வரிசையின் இடதுபுறம் கர்சரை வைத்து, 'இந்த வரிசை வரை தலைப்பைப் பின் செய்' ஐகானையும் தேர்ந்தெடுக்கலாம்.

வரிசைகளைப் பின் செய்ததை அகற்றுதல்

  1. டேபிளில் உள்ள ஏதேனும் வரிசையில் வலது கிளிக் செய்யவும்
  2. தலைப்பு வரிசைகளை அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Google Docsஸில் டேபிள் வரிசைகளைப் பிரிக்க முடியாதபடி செய்தல்

பல பக்கங்களைத் தாண்டிச் செல்லும் பெரிய அட்டவணையாக இருந்தால் அட்டவணையில் உள்ள வரிசையில் இருக்கும் தகவல்கள் பக்க முறிப்பில் பிரிக்கப்பட வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம். 

முக்கியம்: பக்கவரிசையற்ற வடிவமைப்பில் உள்ள ஆவணங்களில் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது. இதைப் பயன்படுத்த, பக்கங்கள் உள்ள வடிவமைப்பில் ஆவணம் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

  1. அட்டவணையில் உள்ள வரிசையைத் தேர்ந்தெடுக்கவும். 
  2. வடிவம் அதன் பிறகு டேபிள் அதன் பிறகு டேபிள் பண்புகள் என்பதற்குச் செல்லவும். 
    1. அட்டவணையில் வலது கிளிக் செய்தும் அட்டவணை பண்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
  3. "வரிசை" என்பதன் கீழே அடுத்த பக்கங்களுக்கும் வரிசை நீண்டு செல்ல அனுமதி என்பதைத் தேர்வுசெய்யவும்/தேர்வுநீக்கவும்.
  4. மாற்றங்களைச் செயல்படுத்த சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
Google Docsஸில் அட்டவணையின் சீரமைப்பை மாற்றலாம்
  1. கம்ப்யூட்டரில் ஆவணத்தைத் திறந்து அட்டவணையைக் கிளிக் செய்யவும்.
  2. வடிவம் அதன் பிறகு அட்டவணை அதன் பிறகு அட்டவணை பண்புகள் என்பதற்குச் செல்லவும். 
    1. அட்டவணையில் வலது கிளிக் செய்தும் அட்டவணை பண்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
  3. "அட்டவணை" என்பதன் கீழே இடது, மையம், வலதுபுறம் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
943800735239793879
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false