ஸ்லைடுகளைச் சேர்த்தல், நீக்குதல், ஒழுங்கமைத்தல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

விளக்கக்காட்சியில் உள்ள ஸ்லைடுகளை நீங்கள் விரும்பும் வகையில் ஒழுங்கமைக்க அவற்றைச் சேர்க்கலாம் நீக்கலாம் மறுவரிசைப்படுத்தலாம். ஸ்லைடுகளில் எண்களையும் சேர்க்க முடியும்.

ஸ்லைடைச் சேர்த்தல், நகலெடுத்தல், நீக்குதல்

ஸ்லைடைச் செருகுதல்

ஸ்லைடை அதே தளவமைப்பில் தற்போதைய ஸ்லைடாகச் சேர்க்க இவற்றைச் செய்யவும்:

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் 'புதிய ஸ்லைடு' Plus என்பதைக் கிளிக் செய்யவும்.

வேறொரு தளவமைப்பில் ஸ்லைடைச் சேர்க்க இவற்றைச் செய்யவும்:

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் 'தளவமைப்புடன் புதிய ஸ்லைடு' கீழ்நோக்கிய அம்புக்குறி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஸ்லைடைத் தேர்வுசெய்யவும்.

ஸ்லைடுகளின் தீமினையோ தளவமைப்பையோ மாற்றுவது குறித்து மேலும் அறிக.

ஸ்லைடை நகலெடுத்தல்
  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. இடதுபுறத்தில், நகலெடுக்க விரும்பும் ஸ்லைடைக் கிளிக் செய்யவும்.
    • பல ஸ்லைடுகளை நகலெடுக்க விரும்பினால் Shift பட்டனை அழுத்தியபடி அவற்றைக் கிளிக் செய்யவும்.
  3. வலது கிளிக் செய்து ஸ்லைடை நகலெடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்லைடை நீக்குதல்
  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. இடதுபுறத்தில், நீக்க விரும்பும் ஸ்லைடைக் கிளிக் செய்யவும்.
    • பல ஸ்லைடுகளை நீக்க விரும்பினால் Shift பட்டனை அழுத்திப் பிடித்துக் கொண்டு அவற்றைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் கீபோர்டில் Delete அல்லது Backspace பட்டனை அழுத்தவும்.

ஸ்லைடுகளை ஒழுங்கமைத்தல்

ஸ்லைடைத் தவிர்த்தல்

விளக்கக்காட்சியைப் பகிரும்போது ஸ்லைடைத் தவிர்க்கலாம். அந்த ஸ்லைடு நீக்கப்படாது. மேலும் விளக்கக்காட்சியைப் பிறருடன் பகிரும்போது, தவிர்த்த ஸ்லைடுகளை அவர்களால் பார்க்க முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. இடதுபுறத்தில், நீங்கள் தவிர்க்க விரும்பும் ஸ்லைடு/ஸ்லைடுகளின் மீது வலது கிளிக் செய்யவும்.
  3. ஸ்லைடைத் தவிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. விருப்பத்திற்குரியது: தவிர்த்த ஸ்லைடைக் காட்ட மீண்டும் ஸ்லைடைத் தவிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்லைடுகளை மறுவரிசைப்படுத்துதல்

விளக்கக்காட்சியில் ஸ்லைடுகளின் வரிசையை மாற்றலாம்:

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. இடதுபுறத்தில், மறுவரிசைப்படுத்த விரும்பும் ஸ்லைடைக் கிளிக் செய்யவும்.
    • பல ஸ்லைடுகளை மறுவரிசைப்படுத்த விரும்பினால் Shift பட்டனை அழுத்தியபடி அவற்றைக் கிளிக் செய்யவும்.
  3. ஸ்லைடு/ஸ்லைடுகளை நீங்கள் விரும்பும் இடத்திற்கு இழுக்கவும்.
ஸ்லைடுகளுக்கு எண்ணிடுதல்

விளக்கக்காட்சியில் ஸ்லைடுகளுக்கு எண்ணிடலாம்:

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மேலேயுள்ள மெனுவில் செருகு அதன் பிறகு ஸ்லைடு எண்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

கவனத்திற்கு: உங்கள் தலைப்பு ஸ்லைடிற்கு எண்ணைச் சேர்க்க விரும்பவில்லை எனில் ஸ்லைடில் எண்களைச் சேர்க்கும்போது “தலைப்பு ஸ்லைடுகளைத் தவிர்” என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.

சில ஸ்லைடுகளுக்கு மட்டும் எண்ணிட இவற்றைச் செய்யவும்:

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. எண்ணிட விரும்பும் ஸ்லைடையோ ஸ்லைடுகளையோ தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலேயுள்ள மெனுவில் செருகு அதன் பிறகு ஸ்லைடு எண்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தேர்ந்தெடுத்த ஸ்லைடுகளுக்குப் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்லைடுகள் தோன்றும் விதத்தை மாற்றுதல்

உங்கள் ஸ்லைடுகளைப் படத்துண்டுக் காட்சியிலோ கட்டக் காட்சியிலோ பார்க்கலாம்:

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கீழ் இடதுபுறத்தில் படத்துண்டுக் காட்சி படத்துண்டு அல்லது கட்டக் காட்சி சிறு படத்தின் காட்சி என்பதைக் கிளிக் செய்யவும்.
படத்துண்டைக் காட்டுதல்/மறைத்தல்
  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    1. கீழ் இடதுபுறத்தில், படத்துண்டை மறை முந்தையது அல்லது படத்துண்டைக் காட்டு அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. மெனுவில், காட்டு என்பதற்குச் சென்று படத்துண்டைக் காட்டு என்பதைத் தேர்வுசெய்யலாம் அல்லது தேர்வுநீக்கலாம்.
true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11461151645893673554
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false