ஸ்லைடுகளைச் சேர்த்தல், நீக்குதல், ஒழுங்கமைத்தல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

விளக்கக்காட்சியில் உள்ள ஸ்லைடுகளை நீங்கள் விரும்பும் வகையில் ஒழுங்கமைக்க அவற்றைச் சேர்க்கலாம் நீக்கலாம் மறுவரிசைப்படுத்தலாம். ஸ்லைடுகளில் எண்களையும் சேர்க்க முடியும்.

ஸ்லைடைச் சேர்த்தல், நகலெடுத்தல், நீக்குதல்

ஸ்லைடைச் செருகுதல்

  1. உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Slides ஆப்ஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கீழ் வலதுபுறத்தில் புதிய ஸ்லைடு புதிய ஸ்லைடு என்பதைத் தட்டவும்.
  3. சேர்க்க விரும்பும் தளவமைப்பைத் தட்டவும்.
ஸ்லைடை நகலெடுத்தல்
  1. உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Slides ஆப்ஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கீழே நகலெடுக்க விரும்பும் ஸ்லைடைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
    • பல ஸ்லைடுகளை நகலெடுக்க விரும்பினால் இப்போதே அவற்றைத் தட்டவும்.
  3. நகலெடு ​Make a copy என்பதைத் தட்டவும்.
  4. ஒட்டு ஒட்டு என்பதைத் தட்டவும்.
  5. அசல் ஸ்லைடுக்குப் பிறகு நகல் ஸ்லைடு தோன்றும்.
ஸ்லைடை நீக்குதல்
  1. உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Slides ஆப்ஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கீழே நீக்க விரும்பும் ஸ்லைடைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
    • பல ஸ்லைடுகளை நீக்க விரும்பினால் இப்போதே அவற்றைத் தட்டவும்.
  • நீக்கு நீக்கு என்பதைத் தட்டவும்.

ஸ்லைடுகளைத் தவிர்த்தல் அல்லது ஒழுங்கமைத்தல்

ஸ்லைடைத் தவிர்த்தல்

விளக்கக்காட்சியைப் பகிரும்போது ஸ்லைடைத் தவிர்க்கலாம். அந்த ஸ்லைடு நீக்கப்படாது. மேலும் விளக்கக்காட்சியைப் பிறருடன் பகிரும்போது தவிர்த்த ஸ்லைடுகளை அவர்களால் பார்க்க முடியும்.

  1. உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Slides ஆப்ஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கீழே தவிர்க்க விரும்பும் ஸ்லைடைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
    • பல ஸ்லைடுகளைத் தவிர்க்க விரும்பினால் இப்போதே அவற்றைத் தட்டவும்.
  3. மேலும் 더보기 அதன் பிறகு ஸ்லைடைத் தவிர் என்பதைத் தவிர்க்கவும்.
    • தவிர்த்த ஸ்லைடைக் காட்ட 더보기 அதன் பிறகு ஸ்லைடைக் காட்டு என்பதைத் தட்டவும்.
ஸ்லைடுகளை மறுவரிசைப்படுத்துதல்
  1. உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Slides ஆப்ஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கீழே மறுவரிசைப்படுத்த விரும்பும் ஸ்லைடைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
    • பல ஸ்லைடுகளை மறுவரிசைப்படுத்த விரும்பினால் இப்போதே அவற்றைத் தட்டவும்.
  3. ஸ்லைடுகளை நீங்கள் விரும்பும் இடத்தில் இழுக்கவும்.
ஸ்லைடுகளுக்கு எண்ணிடுதல்

ஸ்லைடுகளுக்கு எண்ணிட slides.google.com என்பதற்குச் சென்று விளக்கக்காட்சியைத் திறக்கவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18395203817653892083
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false