தவறான பயன்பாட்டிற்கான திட்டக் கொள்கைகள் மற்றும் அமலாக்கம்

கீழே பட்டியலிடப்பட்டுள்ள உள்ளடக்கக் கொள்கைகள் Google தயாரிப்புகளைப் பயன்படுத்தும் அனைவருக்கும் சிறந்த அனுபவத்தைத் தொடர்ந்து வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தச் சேவைகளை வழங்கும் எங்கள் திறனிற்கு அச்சுறுத்தலான தவறான பயன்பாடுகளைத் தடுக்க வேண்டும். மேலும் இந்த இலக்கை அடைய உதவும் வகையில் கீழே உள்ள கொள்கைகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Google Driveவில் உள்ள உள்ளடக்கத்திற்கு இந்தக் கொள்கைகள் பொருந்தும். இந்தக் கொள்கைகளைப் பயன்படுத்தும்போது கலை, கல்வி, ஆவணமாக்கல் அல்லது அறிவியல் சார்ந்த பரிசீலனைகள் அல்லது உள்ளடக்கத்தில் நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் காரணமாக பொதுமக்களுக்கு பிற குறிப்பிடத்தகுந்த நன்மைகள் இருக்கின்றபோது நாங்கள் விதிவிலக்குகளை அளிக்கக்கூடும். இந்தக் கொள்கைகள் மாறக்கூடும் என்பதால் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளவும். மேலும் தகவல்களுக்கு Googleளின் சேவை விதிமுறைகளையும் பார்க்கவும்.

தவறான பயன்பாட்டைப் புகாரளித்தல்

கீழே உள்ள கொள்கைகளை ஒருவர் மீறுவதாக நீங்கள் நினைத்தால் தவறான பயன்பாடு குறித்துப் புகாரளிக்கவும்.

பதிப்புரிமை மீறல் அல்லது பிற சட்டச் சிக்கல்கள் குறித்துப் புகாரளிக்க, இந்தக் கருவியைப் பயன்படுத்தவும், இது பொருந்தக்கூடிய சட்டங்களின் அடிப்படையில் Googleளின் சேவைகளிலிருந்து அகற்ற வேண்டிய தேவை இருப்பதாக நீங்கள் நம்பும் உள்ளடக்கத்தைப் புகாரளிப்பதற்கான முழுச் செயல்முறையையும் காட்டும்.

திட்டக் கொள்கைகள்

ஸ்பேம், மால்வேர் மற்றும் ஃபிஷிங்

எங்கள் தயாரிப்புகளை ஸ்பேம் மற்றும் மால்வேர் அற்றதாக வைத்துக்கொள்ளவும். தேவையற்ற விளம்பர அல்லது வணிக உள்ளடக்கமும் தேவையற்ற அல்லது பெரும் அளவிலான ஆதரவுக் கோரிக்கைகளும் (ஆனால் அவை மட்டுமே அல்ல) ஸ்பேமில் அடங்கும். ஃபிஷிங்கிற்காக எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. கடவுச்சொற்கள், நிதி விவரங்கள் மற்றும் தேசிய அடையாள எண்கள் உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல) முக்கியத் தரவைக் கோருவதை அல்லது சேகரிப்பதைத் தவிர்க்கவும். Google அல்லது பிற நிறுவனத்தின் நெட்வொர்க்குகள், சேவையகங்கள் அல்லது பிற உள்கட்டமைப்பின் செயல்பாட்டிற்குப் பாதிப்பையோ இடையூறையோ ஏற்படுத்தக்கூடிய மால்வேர், வைரஸ்கள், அழிவை ஏற்படுத்தும் குறியீடு போன்றவற்றைப் பகிர்வதையும் அனுமதிக்க மாட்டோம்.

வன்முறை

மற்றவர்களைத் துன்புறுத்தாமல் நேரடியான உங்களின் கருத்துகளைக் கூறவும். அதாவது நீங்கள் மற்றொருவரின் கருத்துகளுக்கு எதிரான கருத்தை வெளியிடலாம், ஆனால் அவருக்குக் கடுமையான காயமோ மரணமோ ஏற்படும் என்று குறிப்பிட்டு அச்சுறுத்தக்கூடாது அல்லது பிறரைத் துன்புறுத்துவதற்கான ஆதரவைக் கேட்டுப் பெறுமாறு இருக்கக்கூடாது. பெரும்பாலான சமயங்களில் மாறுபாடுகளையோ வேறுபாடுகளையோ அதில் சம்பந்தப்பட்டிருக்கும் தரப்பினரே நேரடியாக விவாதிக்கும்போது சிறந்த முறையில் தீர்வு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தோம். எனினும் கடுமையான மற்றும் உடனடியாக ஏற்படுகின்ற உடல்சார்ந்த காயம் அல்லது மரணம் தொடர்பான அச்சுறுத்தலின்போது அந்த உள்ளடக்கம் குறித்து நாங்கள் நடவடிக்கை எடுக்கக்கூடும்.

அதிர்ச்சியூட்டும், குழப்பத்தை ஏற்படுத்தும் அல்லது தீங்கு உண்டாக்கும் வகையில் வன்முறையான அல்லது கொடூரமான உள்ளடக்கத்தை இடுகையிடக் கூடாது. செய்திகள், ஆவணப்படம், அறிவியல் அல்லது கலைப் படைப்புகளில் கிராஃபிக் உள்ளடக்கத்தை இடுகையிடும்போது, அதில் கூறவரும் கருத்துகள் மக்களுக்குத் தெளிவாகப் புரியும்படி, தேவையான தகவலுடன் இருக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில், உள்ளடக்கம் அதீத வன்முறை கொண்டதாகவோ அதிர்ச்சியூட்டும்படியாகவோ இருக்கும்பட்சத்தில் எந்தச் சூழலுக்காகவும் அவற்றை எங்கள் இயங்குதளங்களில் அனுமதிக்க முடியாது. இறுதியாக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட பிறரை ஊக்குவிக்கக் கூடாது.

வெறுப்பைத் தூண்டும் பேச்சு

உங்கள் கருத்தை வெளிப்படுத்த எங்கள் தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம். அதே சமயம் வெறுப்பைத் தூண்டும் பேச்சை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. வெறுப்பைத் தூண்டும் பேச்சு என்பது தனிநபர் அல்லது குழுவினரின் இனம், பிறப்பு, மதம், இயலாமை, வயது, பிறந்த நாடு, சேவை நிலை, பாலியல் நாட்டம், பாலினம், பாலின அடையாளம், ஒழுங்குமுறைப் பாகுபாடு, தீண்டாமையுடன் தொடர்புடைய பிற பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் வெறுப்பைத் தூண்டுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பதாகவோ, வன்முறையைத் தூண்டும் விதமாகவோ, அதை ஏற்றுக்கொள்ளும் விதமாகவோ இருக்கும் உள்ளடக்கம் ஆகும்.

தீவிரவாதம் பற்றிய உள்ளடக்கம்

ஆள்சேர்ப்புகள் உட்பட எந்த நோக்கத்திற்காகவும் தீவிரவாத இயக்கங்கள் Driveவைப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம். தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பது, வன்முறையைத் தூண்டுவது, தீவிரவாதத் தாக்குதல்களைக் கொண்டாடுவது போன்ற தீவிரவாதம் தொடர்பான உள்ளடக்கத்தையும் Drive முற்றிலும் தடைசெய்கிறது. 

கல்வி, ஆவணப்படம், அறிவியல் அல்லது கலை சார்ந்தவற்றுக்காகத் தீவிரவாதம் தொடர்பான உள்ளடக்கத்தை இடுகையிடும்போது, அந்த உள்ளடக்கத்தில் போதுமான அளவு தகவலை வழங்கினால் பார்வையாளர்கள் அதைப் புரிந்துகொள்வார்கள்.

துன்புறுத்தல், மிரட்டுதல் மற்றும் அச்சுறுத்தல்

துன்புறுத்தல், மிரட்டுதல், அச்சுறுத்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது அல்லது அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குப் பிறரைத் தூண்டக்கூடாது. எவரேனும் தவறான நோக்கத்திற்காக ஒருவரைத் தனிமையாகக் கொண்டு செல்வதற்கோ தீவிரப் பாதிப்பை ஏற்படுத்துவதாகப் பிறரை அச்சுறுத்துவதற்கோ வேண்டாத வழியில் யாருக்காவது பாலியல் தொந்தரவு அளிக்கவோ பிற வழிகளில் துன்புறுத்தவோ எங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால் விதிகளை மீறும் உள்ளடக்கம் அகற்றப்படும் அல்லது சேவையைப் பயன்படுத்துவதிலிருந்து நிரந்தரமாகத் தடுக்கப்படும். அவசரகாலச் சூழல்களின்போது, தீவிரப் பாதிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை உடனடியாகச் சட்ட அமலாக்கத்திடம் தெரிவிப்போம். ஆன்லைன் துன்புறுத்தல் பல இடங்களில் சட்டவிரோதமானதாகும், அச்சுறுத்துபவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் மற்றும் அச்சுறுத்தல் காரணமாகப் பாதிக்கப்படுபவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள் என்பதை நினைவில்கொள்ளவும்.

வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம்

வெளிப்படையான அல்லது ஆபாசமான பாலியல் படங்களையோ வீடியோக்களையோ வெளியிட வேண்டாம். அத்துடன், சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் மறைமுகமான அந்தரங்க மற்றும் பாலியல்ரீதியான படங்களையோ வீடியோக்களையோ வெளியிடவோ விநியோகிக்கவோ வேண்டாம்.  உங்களுடைய தனிப்பட்ட நிர்வாணம், வெளிப்படையான பாலியல் அல்லது மறைமுக அந்தரங்க மற்றும் பாலியல்ரீதியான படங்களையோ வீடியோக்களையோ யாராவது இடுகையிட்டால் அதைப் பற்றி இங்கே புகாரளிக்கவும்.

பாலியலை வெளிப்படுத்தும் படங்கள்/வீடியோக்கள் அல்லது சட்டத்திற்குப் புறம்பாகவோ பொருத்தமற்ற முறையிலோ குழந்தைகள் அல்லது விலங்குகள் தொடர்பான பாலியல்ரீதியான செயல்களை ஊக்குவிக்கும் அல்லது சித்தரிக்கும் எந்தவொரு உள்ளடக்கமும் இல்லாத பட்சத்தில் பெரியவர்களுக்கான தலைப்புகளைப் பற்றி எழுத அனுமதி உண்டு. மேலும் ஆபாச உள்ளடக்கம் மூலம் வர்த்தகரீதியாக டிராஃபிக்கை அதிகரிக்கும் வகையிலான உள்ளடக்கத்தை அனுமதிக்க மாட்டோம்.

நிர்வாணத்தைக் காட்டும் தத்ரூபமான உள்ளடக்கம் மற்றும் ஆவணப்படத்தையும் (கைக்குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது போன்ற படம்) கல்வி, அறிவியல் அல்லது கலை நோக்கங்கள் உள்ளடங்கிய நிர்வாண உள்ளடக்கத்தையும் அனுமதிப்போம்.

சிறார்களைத் தவறாகப் பயன்படுத்துதல்

குழந்தைகளைத் தவறாக வழிநடத்தும் அல்லது தவறாகப் பயன்படுத்தும் உள்ளடக்கத்தைப் பதிவேற்றவோ பகிரவோ கூடாது. இதில் சிறார் பாலியல் கொடுமை சார்ந்தவையும் (கார்ட்டூன் படங்களும்) குழந்தைகளைப் பாலியல் ரீதியாகக் காண்பிக்கும் எல்லா உள்ளடக்கமும் அடங்கும். அதாவது சிறார் பாலியல் கொடுமை சார்ந்தவற்றை உருவாக்க, வைத்திருக்க அல்லது பகிர எங்கள் சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது, மேலும் பாலியலை வெளிப்படுத்தும் கருத்துகள் உள்ள சிறார்களின் படங்களை வைத்து கேலரியை உருவாக்க எங்கள் சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது என்பதாகும்.

நாங்கள் அத்தகைய உள்ளடக்கத்தை அகற்றுவோம், மேலும் கணக்கை முடக்குவதோடு, National Center for Missing & Exploited Children (NCMEC) மற்றும் சட்ட அமலாக்கத்திடம் புகாரளிப்பது உள்பட தகுந்த நடவடிக்கையையும் எடுப்போம்.

இதுபோல் குழந்தைகளைத் தவறாக வழிநடத்தும் வகையிலான உள்ளடக்கத்தை கண்டறிந்ததும் அதை நீங்கள் Googleளின் கவனத்திற்குக் கொண்டுவரும் எண்ணத்தில் இருந்தால், அந்த உள்ளடக்கத்தில் கருத்து தெரிவிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக ‘முறைகேடெனப் புகாரளி' என்ற இணைப்பின் மூலம் உள்ளடக்கத்தைக் கொடியிடவும். இணையத்தில் வேறு எங்காவது அத்தகைய உள்ளடக்கத்தைப் பார்த்தால் NCMEC ஐ நேரடியாகத் தொடர்புக்கொள்ளவும்.

ஆள்மாறாட்டமும் தவறான பிரதிநிதித்துவமும்

ஒரு நபர்/நிறுவனத்திற்கு ஆள்மாறாட்டம் செய்யவோ உங்களை நீங்களே தவறாகப் பிரதிநிதித்துவம் செய்துகொள்ளவோ கூடாது.

ஒரு பயனர்/தளத்தின் அடையாளம், தகுதிகள், உடைமையுரிமை, நோக்கம், தயாரிப்புகள், சேவைகள், வணிகம் ஆகியவை குறித்து தவறாக வழிநடத்தும் தகவல்களை வழங்குவதற்காகவோ, வேறொரு தனிநபர்/நிறுவனத்துடன் அல்லது அதன் பரிந்துரையின் பேரில் தொடர்பைத் தவறாக வெளிப்படுத்துவதற்காகவோ நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தாத நபர் அல்லது நிறுவனத்திற்கு ஆள்மாறாட்டம் செய்வது இதில் உள்ளடங்கும். 

அரசியல், சமூகப் பிரச்சனைகள், பொது அக்கறை சார்ந்த விஷயங்கள் ஆகியவை பற்றிய உள்ளடக்கத்தை உங்கள் நாட்டிற்கு வெளியிலுள்ள பயனர்களுக்குத் தெரிவிக்கும் போது, உங்கள் சொந்த நாட்டை அல்லது உங்களைப் பற்றிய பிற முக்கிய விவரங்களை மாற்றுவது அல்லது வேண்டுமென்றே மறைப்பது போன்று தங்களின் உடைமையுரிமையை அல்லது முதன்மை நோக்கத்தைத் தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிற அல்லது மறைக்கிற உள்ளடக்கம் அல்லது கணக்குகளும் இதில் உள்ளடங்கும். உங்கள் உண்மையான அடையாளத்தைப் பார்வையாளர்களுக்குத் தவறாகக் காண்பிக்கும் உள்ளடக்கத்தைத் தவிர்த்தால் கேலி, நையாண்டி, புனைப்பெயர்களைப் பயன்படுத்துவது போன்றவற்றை நாங்கள் அனுமதிப்போம்.

தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம்

பயனர்களை ஏமாற்றுகிற, தவறாக வழிநடத்துகிற அல்லது குழப்புகிற உள்ளடக்கத்தை விநியோகிக்கக் கூடாது. இதில் அடங்குபவை:

குடிமை மற்றும் ஜனநாயகச் செயல்பாடுகள் குறித்துத் தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம்: குடிமை அல்லது ஜனநாயகச் செயல்பாடுகளை நம்புவதை அல்லது அவற்றில் பங்கேற்பதைக் குறிப்பிடத்தக்க அளவு வலுவிழக்கச் செய்கிற மற்றும் நிரூபிக்கத்தக்க அளவு தவறாயுள்ள உள்ளடக்கம். பொது வாக்களிப்பு நடைமுறைகள், வயது / பிறந்த இடத்தின் அடிப்படையில் போட்டியிடுபவரின் அரசியல் ரீதியான தகுதி, அரசின் அதிகாரப்பூர்வப் பதிவேடுகளுக்கு நேர்மாறான கணக்கெடுப்பில் பங்கேற்பது ஆகியவை பற்றிய தகவல் இதில் உள்ளடங்கும். ஓர் அரசியல்வாதி அல்லது அரசு அதிகாரி இறந்துவிட்டார், விபத்தில் சிக்கிவிட்டார் அல்லது திடீரென மோசமான பிணியால் அவதிப்படுகிறார் என தவறான தகவலைத் தெரிவிப்பதும் இதில் உள்ளடங்கும்.

தீங்கான உடல்நலச் செயல்பாடுகள் குறித்துத் தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம்: நபர்களுக்கு மோசமான உடல்ரீதியான அல்லது மனரீதியான தீங்கையோ பொதுமக்களுக்கு மோசமான உடல்ரீதியான தீங்கையோ விளைவிக்கக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக மற்றவர்களை ஊக்குவிக்கின்ற/வழிநடத்துகின்ற ஆரோக்கியம் அல்லது மருத்துவம் சார்ந்த உள்ளடக்கம்.

சூழ்ச்சித் திறத்துடன் கையாளப்படும் ஊடகம்: பயனர்களைத் தவறாக வழிநடத்துகிற வகையில் தொழில்நுட்பரீதியில் சூழ்ச்சித் திறத்துடன் கையாளப்பட்டுள்ள அல்லது வஞ்சகமாய் மாற்றப்பட்டுள்ள மற்றும் அதிர்ச்சியுண்டாக்குகிற தீங்கிற்கான மோசமான அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய ஊடகம்.

தவறாக வழிநடத்தும் உள்ளடக்கமானது கல்வி, ஆவண, அறிவியல் அல்லது கலை வேலைப்பாட்டுச் சூழலில் அனுமதிக்கப்படலாம், ஆனால் அந்தச் சூழலை மக்கள் புரிந்துகொள்ள உதவுவதற்குப் போதிய தகவலை வழங்குங்கள். சில நிகழ்வுகளில், சூழல் எதுவாயினும் உள்ளடக்கம் எங்கள் தளங்களில் தொடர்ந்திருக்காது.

தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்கள்

தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவலைப் பகிர வேண்டாம். கிரெடிட் கார்டு எண்கள், தேசிய அடையாள எண்கள், ஓட்டுநர் மற்றும் பிற உரிம எண்கள், பொதுவில் அணுகக்கூடியதாக இல்லாத பிற தகவல்கள் போன்ற பிறரின் தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவலை அனுமதியில்லாமல் வெளியிடுவதற்கு அனுமதிக்க மாட்டோம். மேலும், பெரும்பாலான சூழல்களில் இணையத்தில் வேறொரு இடத்தில் ஏற்கெனவே கிடைக்கும் அல்லது பொதுப் பதிவுகளில் இருக்கும் தகவல்கள் எங்கள் கொள்கைகளின் கீழ் தனிப்பட்டதாகவோ ரகசியமானதாகவோ கருதப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலும் வயது வராதோரின் படங்களையோ வீடியோக்களையோ அவர்களின் சட்டப்பூர்வப் பிரதிநிதிகளிடமிருந்து தேவையான ஒப்புதலைப் பெறாமல் இடுகையிடவோ பகிரவோ கூடாது. மீறலைப் புகாரளி.

சட்டவிரோத நடவடிக்கைகள்

எல்லாவற்றையும் சட்டரீதியாகச் செய்யவும். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ ஆபத்தான மற்றும் சட்டங்களுக்குப் புறம்பான செயல்களை விளம்பரப்படுத்துவதற்கோ எங்கள் சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது. எடுத்துக்காட்டாக நெறிமுறைக்குட்பட்ட அல்லது சட்டவிரோதமான போதை மருந்துகளை விளம்பரப்படுத்தவோ விற்கவோ பயன்படுத்த வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை நாங்கள் கண்டறிந்தால் எங்களின் சில தயாரிப்புகள் மற்றும் உங்கள் Google கணக்கிற்கான அணுகலை அகற்றுதல், தகுந்த அதிகாரிகளிடம் புகாரளித்தல் போன்ற நடவடிக்கையை எடுப்போம்.

பொதுவில் ஸ்ட்ரீம் செய்தல்

வீடியோ உள்ளடக்கத்தை சேமிக்க, பகிர மற்றும் ஸ்ட்ரீம் செய்ய Drive அனுமதிக்கும். ஆனால் நெட்வொர்க்கில் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்காக இதைப் பயன்படுத்தக் கூடாது. பெரிய அளவில் பொதுவில் ஸ்ட்ரீம் செய்ய YouTube ஆப்ஸ் பொருத்தமானதாகும். Driveவில் பெரிய அளவில் பொதுவில் ஸ்ட்ரீம் செய்தால் அதன் பயன்பாடு வரம்பிடப்படும்.  மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும் மீறல்களால் உங்கள் கணக்கோ Driveவைப் பயன்படுத்தும் அனுமதியோ நீக்கப்படுவது உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படக்கூடும்.

பதிப்புரிமை மீறல்

பதிப்புரிமைச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படவும். அனுமதி பெறாமல் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பகிரவோ பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தின் அங்கீகரிக்கப்படாத பதிவிறக்கங்களுக்கு வழிவகுக்கும் தளங்களுக்கான இணைப்புகளை உங்கள் வாசகர்களுக்கு வழங்கவோ வேண்டாம். கூறப்படும் பதிப்புரிமை மீறல் குறித்த தெளிவான அறிவிப்புகளுக்குப் பதிலளிப்பது எங்கள் கொள்கையாகும். பதிப்புரிமை உட்பட அறிவுசார் சொத்துரிமைகளைத் தொடர்ந்து மீறினால் கணக்கு முடிக்கப்படும். Googleளின் பதிப்புரிமைக் கொள்கைகளின் மீறலை நீங்கள் பார்த்தால் பதிப்புரிமை மீறலைப் புகாரளிக்கவும்.

உள்ளடக்கப் பயன்பாடும் சமர்ப்பிப்பும்

டெம்ப்ளேட் கேலரிக்கான கொள்கைகள்

Google Docsஸில் உள்ள கேலரிகள் மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்தை ("உள்ளடக்கக் கேலரிகள்") கொண்டிருக்கலாம். உள்ளடக்கக் கேலரிகளில் அடங்குபவை (வரம்பற்றவை): டெம்ப்ளேட்டுகள் கேலரியும் Googleளின் விருப்பத்தின்படி உங்களுக்காகத் தேர்வுசெய்யும் எந்தவொரு கேலரியும்.

டெம்ப்ளேட்டுகள் போன்று உள்ளடக்கக் கேலரிகளிலுள்ள தகவல்கள் ("கேலரி உள்ளடக்கம்") Google அல்லது மூன்றாம் தரப்பினரால் உருவாக்கப்பட்டதாகும். உங்களுக்கும் கேலரி உள்ளடக்கத்தின் கிரியேட்டர்களுக்கும் இடையே அறிவுசார் சொத்து அல்லது தனியுடைமை உரிமைகள் இருந்தால் அவை கிரியேட்டர்களிடமே இருக்கும்.

கேலரி உள்ளடக்கம்: (a) பரிந்துரையாக மட்டும் செயல்படும்; (b) தொழில்முறை ஆலோசனை அல்லது குறிப்பிட்ட அதிகாரப்பூர்வத் தகவலுக்கோ அறிவுறுத்தலுக்கோ மாற்று அல்ல.

கேலரி உள்ளடக்கத்தை உங்கள் நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம் என்றோ வைரஸ்கள், பிழைகள் அல்லது பாதிக்கக்கூடிய வேறு எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என்றோ Google உறுதியளிக்காது. கேலரி உள்ளடக்கத்தை எந்தவித உத்திரவாதமும் இல்லாமல் "உள்ளபடியே" வழங்கப்படுகிறது. கேலரி உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் இடர்களுக்கு நீங்களே முழுப்பொறுப்பு. கேலரி உள்ளடக்கம் தொடர்பாக தெளிவான வாரண்டிகள், உத்திரவாதங்கள் மற்றும் நிபந்தனைகளை Google மற்றும் அதன் சப்ளையர்கள் வழங்க மாட்டார்கள். பொருந்தக்கூடிய சட்டத்தின்கீழ் விற்பனைத்தரத்தின் அனுமானிக்கப்பட்ட உத்திரவாதங்கள் மற்றும் நிபந்தனைகள், குறிப்பிட்ட நோக்கத்திற்கான தகுதி, நிபுணத்துவ முயற்சி, தலைப்பு, மீறல் அல்லாதவை போன்றவற்றை Google தவிர்க்கும்.

உள்ளடக்கக் கேலரிகளின் பகுதியாவதற்கு உள்ளடக்கத்தைச் சமர்ப்பிக்கும்படி தேர்வுசெய்தால் Googleளையும் அதன் இணை நிறுவனங்களையும் உங்கள் கேலரிச் சமர்ப்பிப்பை Google Docsஸுக்குள் ஹோஸ்ட் செய்யவும், இணைக்கவும், பிற வழிகளில் இணைத்துக்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறீர்கள் மற்றும் அங்கீகரிக்கிறீர்கள். Google மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் அதன் பயனர்களுக்கு கேலரியில் உரிமையை கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பயன்படுத்துவதற்கான ராயல்டி இல்லாத, பிரத்தியேகமல்லாத உரிமத்தை வழங்குகிறீர்கள்:

  • கேலரிச் சமர்ப்பிப்பை மீண்டும் உருவாக்குவது;

  • கேலரிச் சமர்ப்பிப்பின் வருவிக்கப்பெற்ற படைப்புகளை உருவாக்குவது மீண்டும் உருவாக்குவது;

  • கேலரிச் சமர்ப்பிப்பின் நகல்களைப் பொதுவில் காட்டுவது மற்றும் வழங்குவது;

  • கேலரிச் சமர்ப்பிப்பின் வருவிக்கப்பெற்ற படைப்புகளின் நகல்களைப் பொதுவில் காட்டுவது மற்றும் வழங்குவது.

Google பயனர்களுக்கு நீங்கள் வழங்கும் உரிமம் நிரந்தரமானது என்பதை ஏற்கிறீர்கள். மேலும் சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு நீங்கள் Google Docs மூலம் சமர்ப்பித்த கேலரிச் சமர்ப்பிப்பை விநியோகிப்பதற்கும் Google வழங்கும் சேவைகளுடன் இணைத்து கேலரிச் சமர்ப்பிப்பைப் பயன்படுத்துவதற்கும் Googleளுக்கு உரிமை உள்ளதுடன், நீங்களும் Googleளுக்கு உரிமை வழங்கியுள்ளீர்கள். Google Docs உள்ளடக்கக் கேலரிகள் மூலம் கேலரிச் சமர்ப்பிப்பை விநியோகிப்பதை எந்த நேரத்திலும் நிறுத்துவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது; இருப்பினும் இந்தச் சேவை விதிமுறைகளின்படி இதுபோன்ற தேர்வின் மூலம் Google பயனர்களுக்கு வழங்கிய உரிமங்கள் திரும்பப்பெறப்படாது. Google Docs உள்ளடக்கக் கேலரிகள் மூலம் கேலரிச் சமர்ப்பிப்புகளை விநியோகிப்பதை நிறுத்த இந்தச் சேவையுடன் வழங்கிய அகற்றுவதற்கான செயல்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் கேலரிச் சமர்ப்பிப்பை அகற்றுவதை சரியான கால அளவில் திறம்படச் செய்ய முடியும்.

(a) Google Docs மூலம் நீங்கள் சமர்ப்பித்த கேலரிச் சமர்ப்பிப்புகள் அனைத்தையும் வழங்குவதற்கான சட்டப்பூர்வ உரிமைகள் உங்களுக்கு உள்ளன அல்லது பெற்றுள்ளீர்கள் என்பதுடன், Google பயனர்களுக்கு கேலரிச் சமர்ப்பிப்புகள் கிடைக்கும் வரை இந்த உரிமைகளைத் தக்கவைத்திருப்பீர்கள்; மேலும் (b) Google Docs மூலம் நீங்கள் சமர்ப்பித்த கேலரிச் சமர்ப்பிப்புகள் அனைத்தும் கூறப்பட்ட திட்டக் கொள்கைகளுக்கு உட்பட்டிருக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு உத்திரவாதம் அளிக்கிறீர்கள்.

Google Docs மூலம் நீங்கள் சமர்ப்பிக்கும் எந்த கேலரிச் சமர்ப்பிப்புக்கும் Google உரிமைகோராது. பதிப்புரிமையும் கேலரிச் சமர்ப்பிப்பில் உங்களுக்கு ஏற்கெனவே உள்ள எல்லா அறிவுசார் சொத்துரிமை உட்பட பிற எல்லா உரிமைகளும் உங்களிடமே இருக்கும். அந்த உரிமைகளைப் பாதுகாப்பதும் செயலாக்குவதும் உங்கள் பொறுப்பு என்பதையும் அதை உங்கள் சார்பாக Google செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்பதையும் ஏற்கிறீர்கள்.

நீங்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு கேலரிச் சமர்ப்பிப்புக்கும் நீங்களே பொறுப்பு என்பதையும் உங்களுக்கோ எந்தவொரு மூன்றாம் தரப்பிற்கோ Google பொறுப்பேற்காது என்பதையும் ஏற்கிறீர்கள். உங்கள் கேலரிச் சமர்ப்பிப்பை அணுகும் Google பயனர்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதற்கோ தவறாகப் பயன்படுத்துவதற்கோ எந்தவிதத்திலும் Google பொறுப்பேற்காது.

Google தனது விருப்புரிமையில் எந்தவொரு அல்லது எல்லாக் கேலரிச் சமர்ப்பிப்புகளையும் அகற்றுவதற்கு முழு அதிகாரம் கொண்டுள்ளது.

Google உங்கள் டெம்ப்ளேட் சமர்ப்பிப்புகளை எப்படிப் பயன்படுத்தலாம்?

உள்ளடக்கக் கேலரிகளின் பகுதியாவதற்கு உள்ளடக்கத்தைச் சமர்ப்பிக்கும்படி தேர்வுசெய்தால் Googleளையும் அதன் இணை நிறுவனங்களையும் உங்கள் கேலரிச் சமர்ப்பிப்பை Google Docsஸுக்குள் ஹோஸ்ட் செய்யவும், இணைக்கவும், பிற வழிகளில் இணைத்துக்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறீர்கள் மற்றும் அங்கீகரிக்கிறீர்கள். Google மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் அதன் பயனர்களுக்கு கேலரியில் உரிமையை கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பயன்படுத்துவதற்கான ராயல்டி இல்லாத, பிரத்தியேகமல்லாத உரிமத்தை வழங்குகிறீர்கள்:

  • கேலரிச் சமர்ப்பிப்பை மீண்டும் உருவாக்குவது;
  • கேலரிச் சமர்ப்பிப்பின் வருவிக்கப்பெற்ற படைப்புகளை உருவாக்குவது மீண்டும் உருவாக்குவது;
  • கேலரிச் சமர்ப்பிப்பின் நகல்களைப் பொதுவில் காட்டுவது மற்றும் வழங்குவது;
  • கேலரிச் சமர்ப்பிப்பின் வருவிக்கப்பெற்ற படைப்புகளின் நகல்களைப் பொதுவில் காட்டுவது மற்றும் வழங்குவது.

Google பயனர்களுக்கு நீங்கள் வழங்கும் உரிமம் நிரந்தரமானது என்பதை ஏற்கிறீர்கள். மேலும் சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு நீங்கள் Google Docs மூலம் சமர்ப்பித்த கேலரிச் சமர்ப்பிப்பை விநியோகிப்பதற்கும் Google வழங்கும் சேவைகளுடன் இணைத்து கேலரிச் சமர்ப்பிப்பைப் பயன்படுத்துவதற்கும் Googleளுக்கு உரிமை உள்ளதுடன், நீங்களும் Googleளுக்கு உரிமை வழங்கியுள்ளீர்கள். Google Docs உள்ளடக்கக் கேலரிகள் மூலம் கேலரிச் சமர்ப்பிப்பை விநியோகிப்பதை எந்த நேரத்திலும் நிறுத்துவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது; இருப்பினும் இந்தச் சேவை விதிமுறைகளின்படி இதுபோன்ற தேர்வின் மூலம் Google பயனர்களுக்கு வழங்கிய உரிமங்கள் திரும்பப்பெறப்படாது. Google Docs உள்ளடக்கக் கேலரிகள் மூலம் கேலரிச் சமர்ப்பிப்புகளை விநியோகிப்பதை நிறுத்த இந்தச் சேவையுடன் வழங்கிய அகற்றுவதற்கான செயல்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் கேலரிச் சமர்ப்பிப்பை அகற்றுவதை சரியான கால அளவில் திறம்படச் செய்ய முடியும்.

(a) Google Docs மூலம் நீங்கள் சமர்ப்பித்த கேலரிச் சமர்ப்பிப்புகள் அனைத்தையும் வழங்குவதற்கான சட்டப்பூர்வ உரிமைகள் உங்களுக்கு உள்ளன அல்லது பெற்றுள்ளீர்கள் என்பதுடன், Google பயனர்களுக்கு கேலரிச் சமர்ப்பிப்புகள் கிடைக்கும் வரை இந்த உரிமைகளைத் தக்கவைத்திருப்பீர்கள்; மேலும் (b) Google Docs மூலம் நீங்கள் சமர்ப்பித்த கேலரிச் சமர்ப்பிப்புகள் அனைத்தும் கூறப்பட்ட திட்டக் கொள்கைகளுக்கு உட்பட்டிருக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு உத்திரவாதம் அளிக்கிறீர்கள்.

Google Docs மூலம் நீங்கள் சமர்ப்பிக்கும் எந்த கேலரிச் சமர்ப்பிப்புக்கும் Google உரிமைகோராது. பதிப்புரிமையும் கேலரிச் சமர்ப்பிப்பில் உங்களுக்கு ஏற்கெனவே உள்ள எல்லா அறிவுசார் சொத்துரிமை உட்பட பிற எல்லா உரிமைகளும் உங்களிடமே இருக்கும். அந்த உரிமைகளைப் பாதுகாப்பதும் செயலாக்குவதும் உங்கள் பொறுப்பு என்பதையும் அதை உங்கள் சார்பாக Google செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்பதையும் ஏற்கிறீர்கள்.

நீங்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு கேலரிச் சமர்ப்பிப்புக்கும் நீங்களே பொறுப்பு என்பதையும் உங்களுக்கோ எந்தவொரு மூன்றாம் தரப்பிற்கோ Google பொறுப்பேற்காது என்பதையும் ஏற்கிறீர்கள். உங்கள் கேலரிச் சமர்ப்பிப்பை அணுகும் Google பயனர்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதற்கோ தவறாகப் பயன்படுத்துவதற்கோ எந்தவிதத்திலும் Google பொறுப்பேற்காது.

Google தனது விருப்புரிமையில் எந்தவொரு அல்லது எல்லாக் கேலரிச் சமர்ப்பிப்புகளையும் அகற்றுவதற்கு முழு அதிகாரம் கொண்டுள்ளது.

Google சேவை விதிமுறைகள் முழுவதையும் படிக்கவும்.

உங்களின் வசதிக்காக எங்கள் கொள்கைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்கை உள்ள மொழிக்கும் கொள்கையின் ஆங்கிலப் பதிப்பிற்கும் வேறுபாடு இருந்தால், கொள்கையின் ஆங்கிலப் பதிப்பிற்கே முன்னுரிமை வழங்கப்படும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?
இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?