ஃபைலை அச்சிடுதல்

Chrome, Safari போன்ற உலாவிகளைப் பயன்படுத்தி Google Docs, Sheets அல்லது Slidesஸை அச்சிடலாம்.

Chrome உலாவியில் அச்சிடுதல்

ஆவணத்தை அச்சிடுதல்
  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. கோப்பு அதன் பிறகு அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அதன்பின் திறக்கும் சாளரத்தில் அச்சிடுவதற்கான உங்கள் அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்.
  4. அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

முக்கியம்: பக்கவரிசையற்ற வடிவமைப்பைப் பயன்படுத்தினாலும் நீங்கள் ஆவணத்தை அச்சிடலாம். இருப்பினும், மாதிரிக்காட்சி சாளரத்தில் ஆவணம் வேறுவிதமாகக் காட்டப்படக்கூடும்:

  • பக்கத்தின் அகலத்திற்கு ஏற்ப, படங்கள் தானாகவே சரிசெய்யப்படும்.
  • அகலமான அட்டவணைகள் சரியாகப் பொருந்தும் வகையில் பக்கம் தானாகச் சரிசெய்யப்படும். 
  • பக்கங்கள் உள்ள வடிவமைப்பில் உங்கள் ஆவணம் அமைக்கப்பட்டிருந்தபோது அதில் தலைப்புகள், அடிக்குறிப்புகள், வாட்டர்மார்க்குகள் போன்றவை சேர்க்கப்பட்டிருந்தால் பக்கவரிசையற்ற ஆவணத்தில் அவை காட்டப்படவில்லை என்றாலும் அவை அச்சிடப்படும்.

அச்சிடப்படும் ஆவணத்தின் தோற்றத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால் பக்கங்கள் உள்ள வடிவமைப்பிற்கு மாற்றவும்.

விரிதாளை அச்சிடுதல்
  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. கோப்பு அதன் பிறகு அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. விருப்பத்திற்குரியது: ஓரங்கள், பக்கத் திசையமைப்பு போன்ற அச்சிடல் அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்.
  4. அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. அதன்பின் திறக்கும் சாளரத்தில் அச்சிடுவதற்கான உங்கள் அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்.
  6. அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

Print or Change the Page Setup

மாதிரி விரிதாளைப் பெற்று வீடியோவைப் பின்பற்றிச் செய்ய, “நகலெடு” என்பதைக் கிளிக் செய்யவும்.

நகலெடு

விளக்கக்காட்சியை அச்சிடுதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கோப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மாற்றங்களின்றி அச்சிடுதல்: அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • திசையமைப்பைச் சரிசெய்தல்: அச்சு அமைப்புகள் மற்றும் மாதிரிக்காட்சி என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு கருவிப்பட்டியில் உள்ள கைப்பிரதி அதன் பிறகு லேண்ட்ஸ்கேப் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • பேச்சாளர் குறிப்புகளுடன் அச்சிடுதல்: அச்சு அமைப்புகள் மற்றும் மாதிரிக்காட்சி என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு கருவிப்பட்டியில் உள்ள குறிப்புகளுடன் 1 ஸ்லைடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அதன்பின் திறக்கும் சாளரத்தில் அச்சிடுவதற்கான உங்கள் அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்.
  5. அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

Firefox/Safari உலாவியில் அச்சிடுதல்

உங்கள் கோப்பினை PDF ஆக அச்சிடுதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் அச்சிட விரும்பும் ஆவணம், விளக்கக்காட்சி அல்லது விரிதாளைத் திறக்கவும்.
  2. கோப்பு அதன் பிறகு அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஆவணம்/விளக்கக்காட்சி: PDF கோப்பு தானாகப் பதிவிறக்கப்படும்.
    • விரிதாள்: காட்டப்படும் சாளரத்தில் அச்சிடல் அமைப்புகளைத் தேர்வுசெய்யவும். அதன் பிறகு அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும். PDF ஃபைல் தானாகவே பதிவிறக்கப்படும்.
  3. பதிவிறக்கப்பட்டதும் கோப்பினைத் திறக்கவும்.
  4. PDF வியூவரில் கோப்பு அதன் பிறகு அச்சிடு என்பதற்குச் செல்லவும்.
  5. அதன்பின் திறக்கும் சாளரத்தில் அச்சிடுவதற்கான உங்கள் அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்.
  6. அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் கோப்பினை வேறொரு வடிவத்தில் அச்சிடுதல்

  1. கம்ப்யூட்டரில், அச்சிட விரும்பும் ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. ஃபைல் அதன் பிறகு பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. விருப்பமான ஃபைல் வடிவத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பதிவிறக்கப்பட்ட கோப்பினைக் கண்டறிந்து அதைத் திறக்கவும்.
  5. பதிவிறக்கிய ஃபைலை அச்சிடவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4443933390513450957
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false