Google Sheetsஸில் அட்டவணைகளைப் பயன்படுத்தி தரவு உருவாக்கத்தை எளிதாக்கலாம். அத்துடன், தரவின் வரம்புகளுக்கு வடிவமைப்பையும் கட்டமைப்பையும் தானாகவே பயன்படுத்தி, தொடர்ச்சியாகத் தரவை வடிவமைப்பது, உள்ளிடுவது மற்றும் மாற்றுவதற்கான தேவையையும் அட்டவணைகளின் மூலம் குறைக்கலாம்.
இவை போன்ற தகவல்களைக் கண்காணிக்கவும் ஒழுங்கமைக்கவும் அட்டவணைகளைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம்:
- திட்டப்பணியைக் கண்காணித்தல்
- நிகழ்வுத் திட்டமிடல்
- இருப்பை நிர்வகித்தல்
அட்டவணையில் மூன்று முக்கியப் பகுதிகள் உள்ளன:
- ஒவ்வொரு நெடுவரிசைக்கும் ஏற்றபடி பொருத்தமான நெடுவரிசை வகையை நீங்கள் அமைக்கலாம். நீங்கள் வழங்கும் தரவு அனைத்தும் சீராக உள்ளதை அட்டவணை உறுதிசெய்கிறது.
- ஒருங்கிணைந்த மெனுவிற்கான அணுகல் உங்களுக்குக் கிடைக்கும். அட்டவணை அளவிலான அமைப்புகளை மெனுவில் இருந்து நிர்வகிப்பதோடு, உங்கள் அட்டவணைக்கான வடிப்பான் காட்சியை உருவாக்குவது போன்ற செயல்களையும் நீங்கள் செய்யலாம்.
- ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட மற்றும் வடிவமைக்கப்பட்ட பில்டிங் பிளாக்குகளைச் சேர்க்கலாம்.
ஏற்கெனவே உள்ள தரவை அட்டவணையாக மாற்றுதல்
- கம்ப்யூட்டரில் தாளைத் திறக்கவும்.
- காலியாகவோ தரவுடனோ இருக்கும் கலங்களின் வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்.
- மெனு பட்டியில் வடிவம்
அட்டவணையாக மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒவ்வொரு நெடுவரிசைக்கும் பொருத்தமான நெடுவரிசை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
நெடுவரிசை வகைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
தரவு உள்ளீட்டை எளிதாக்கும் வகையில் சில நெடுவரிசை வகைகளுக்கு ஒதுக்கிடச் சிப்கள் தானாகவே காட்டப்படும். நெடுவரிசைக்கான ஒதுக்கிடச் சிப்களை முடக்க:
- கம்ப்யூட்டரில் அட்டவணையுடன் இருக்கும் தாளைத் திறக்கவும்.
- அட்டவணைத் தலைப்புக்கு அடுத்துள்ள நெடுவரிசை மெனு என்பதைத் திறக்கவும்.
- நெடுவரிசையின் வகையைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒதுக்கிடங்களைக் காட்டு என்பதைத் தேர்வுநீக்கவும்.
முன்பே உருவாக்கப்பட்ட அட்டவணைகளைச் சேர்த்துத் தொடங்குதல்
பொதுவான உபயோகச் சூழல்களை எளிதாக்கும் வகையில் டெம்ப்ளேட்டுகளைப் பயன்படுத்தி, முன்னரே வரையறுக்கப்பட்ட கட்டமைப்புடன் புதிய அட்டவணையைச் சேர்க்கலாம்.
உங்களின் உபயோகச் சூழலுக்குப் பொருந்தும் டெம்ப்ளேட்டை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இவற்றுக்குச் செல்ல:
- @ மெனு:
- @
அட்டவணைகள் என்பதைக் கிளிக் செய்யவும்
- @
- செருகு மெனு:
- செருகு
அட்டவணைகள் என்பதைக் கிளிக் செய்யவும்
- செருகு
இரண்டு மெனு விருப்பங்களுக்கும் பக்கப்பட்டி திறக்கப்படும். அதில் உலாவலாம், மாதிரிகாட்சியைப் பார்க்கலாம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஏற்கெனவே உள்ள பில்டிங் பிளாக்குகளைச் சேர்க்கலாம்.
நெடுவரிசை வகைகளை அமைத்தல்
அட்டவணை நெடுவரிசை வகைகள் உங்கள் நெடுவரிசைத் தரவை ஒழுங்கமைக்கவும் வடிவமைக்கவும் உதவுவதோடு தவறான தரவு வகைகளைக் காட்டுவதன் மூலம் அவற்றால் ஏற்படும் பிழைகளையும் தடுக்கின்றன. உதாரணத்திற்கு, “தேதி” என்பதை நெடுவரிசை வகையாக நீங்கள் தேர்ந்தெடுத்தால் இந்த வகையைப் பயன்படுத்தாத, நெடுவரிசைக்குள் உள்ள கலங்களில் எச்சரிக்கையைக் காட்டும்.
பின்வரும் வகைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வுசெய்யலாம்:
- எண்
- சதவீதம்
- நாணயம்
- வார்த்தைகள்
- தேதி
- தேதி
- நேரம்
- தேதி மற்றும் நேரம்
- கீழ்த்தோன்றல்
- செக்பாக்ஸ்
- ஸ்மார்ட் சிப்கள்
- நபர் சிப்
- ஃபைல் சிப்
- நிதிச் சிப்
- இட சிப்
- ரேட்டிங் சிப்
- எதுவுமில்லை: இந்த விருப்பத்தைத் தேர்வுசெய்தால் உங்கள் நெடுவரிசையில் அதற்கான வகை பயன்படுத்தப்படாது. பல்வேறு தரவு வகைகளை ஆதரிக்கும் வகையில் உங்கள் நெடுவரிசையை அமைக்க விரும்பினால் இந்த விருப்பத்தைத் தேர்வுசெய்யுங்கள்.
அட்டவணை மெனுவைப் பயன்படுத்துதல்
உங்கள் அட்டவணை அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதோடு, அட்டவணை மெனு மூலம் அவற்றை மேலும் பிரத்தியேகமாக்கலாம். அட்டவணை மெனுவைப் பயன்படுத்த, அட்டவணையின் கீழே உள்ள அட்டவணை
மெனு
என்பதைக் கிளிக் செய்யவும்.
அட்டவணை மெனுவில் நீங்கள்:
- அட்டவணையின் பெயரை மாற்றலாம்
- அட்டவணை வரம்பை மாற்றலாம்
- வேறுபடுத்தும் வண்ணங்களை முடக்கலாம்
- அட்டவணையின் வண்ணத்தைப் பிரத்தியேகமாக்கலாம்
- அட்டவணை வடிவமைப்பை அகற்றலாம்
- அட்டவணையை நீக்கலாம்
- கருத்தை அனுப்பலாம்
உதவிக்குறிப்பு: உங்கள் தரவை அட்டவணையாக மாற்றும்போது அடிப்படை வடிவமைப்பைத் தானாகவே பயன்படுத்துவோம். உங்கள் அட்டவணையை மேலும் பிரத்தியேகமாக்கலாம் மற்றும்:
- வரிசையின் உயரத்தை மீண்டும் மாற்றியமைக்கலாம்
- வேறுபடுத்தும் வண்ணங்களை அகற்றலாம்
- வேறுபடுத்தும் வண்ணங்களை மாற்றலாம்
- எழுத்து வடிவ ஸ்டைலை மாற்றலாம்
அட்டவணைக் குறிப்புகளைப் பயன்படுத்துதல்
அட்டவணையையோ சூத்திரத்தில் அட்டவணையின் பகுதிகளையோ குறிப்பாகப் பயன்படுத்துவதற்கு அட்டவணைக் குறிப்புகள் ஒரு சிறந்த வழியாகும். உங்கள் தரவை அட்டவணையாக மாற்றும்போது அதற்கான பெயரையும், ஒவ்வொரு நெடுவரிசை தலைப்பையும் நாங்கள் வழங்குவோம். அட்டவணையில் உள்ள கலங்களைக் குறிப்பிட அந்தப் பெயர்களை நீங்கள் பயன்படுத்தலாம். உதாரணம்: =Sum(C2:C7)
என்ற வெளிப்புறக் கலக் குறிப்புகளுக்குப் பதிலாக =SUM(DeptSales[Sales Amount])
என்ற அட்டவணைக் குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
அட்டவணையில் உள்ளவற்றைப் பெயரின் மூலம் நீங்கள் குறிப்பிடும்போது, அட்டவணையில் தரவைச் சேர்க்கும்போதோ அகற்றும்போதோ அவற்றின் மதிப்புகளைக் குறிப்புகள் தானாகவே மாற்றும்.
அட்டவணைக் காட்சிகளைப் பயன்படுத்துதல்
காட்சிகள் மூலம், பிறர் என்ன பார்க்கிறார்கள் என்பதைப் பாதிக்காமல், உங்களுக்குத் தேவைப்படும் தரவை நீங்கள் கண்டறியலாம். குறிப்பிட்ட வரிசைகளைக் காட்டவோ மறைக்கவோ காட்சிகளைப் பயன்படுத்தலாம். அத்துடன், உங்கள் தரவு எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதற்கான பிற உள்ளமைவுகளையும் பயன்படுத்தலாம்.
வடிக்கட்டவும் வரிசைப்படுத்தவும் ஒவ்வொரு காட்சிக்கும் தனிப்பட்ட உள்ளமைவுகள் இருக்கும்.
- புதிய காட்சிகளை உருவாக்க மெனு
என்பதைக் கிளிக் செய்து இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
- ‘குழுப்படுத்தும் விதம்’ காட்சியை உருவாக்கு
- நீங்கள் தேர்வுசெய்யும் புலத்தின் அடிப்படையில் குழுவாக்கப்பட்ட வரிசைகளைப் பார்க்க இது உதவும்.
- ஃபில்டர் காட்சியை உருவாக்கு
- ‘குழுப்படுத்தும் விதம்’ காட்சியை உருவாக்கு
கவனத்திற்கு: விரிதாளை ரெஃப்ரெஷ் செய்தபிறகு தற்காலிகக் காட்சிகள் காட்டப்படாது.
- ஏற்கெனவே உள்ள காட்சிகளைப் பயன்படுத்த, அட்டவணை மெனு
ஏற்கெனவே உள்ள காட்சிப் பெயரைக் கிளிக் செய்யவும்.
அட்டவணைகள் குறித்து கருத்து தெரிவித்தல்
சிக்கல்கள் இருந்தாலோ இந்த அம்சத்தை மாற்ற விரும்பினாலோ மற்றும் மேம்படுத்துவதில் எங்களுக்கு உதவ விரும்பினால் நீங்கள் கருத்தைச் சமர்ப்பிக்கலாம்.
கருத்தைச் சமர்ப்பிக்க:
- அட்டவணைகள் மெனுவில் உள்ள “கருத்தை அனுப்பு” விருப்பத்தைப் பயன்படுத்தவும்.
- தாளின் மேற்புறத்தில், உதவி
Sheetsஸை மேம்படுத்த உதவவும் என்பதைக் கிளிக் செய்யவும்.