படிவத்தின் பதில்களைப் பார்த்தல் & நிர்வகித்தல்

Google Forms மூலம் ஒரு படிவத்திற்கான பதில்களைப் பார்க்கலாம் கட்டுப்படுத்தலாம்.

பதில்களைக் காட்டு

கேள்வியின்படி பதில்களைப் பார்த்தல்
  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. படிவத்தின் மேற்புறத்தில் பதில்களைக் கிளிக் செய்யவும்.
  3. சுருக்கம் என்பதைக் கிளிக் செய்யவும்.
நபரின்படி பதில்களைப் பார்த்தல் 

நபரின்படி பதில்களைப் பார்க்கவும் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட முறை படிவத்தைச் சமர்ப்பிக்க பயனர்களை அனுமதித்திருந்தால் சமர்ப்பின்படி பார்க்கவும்.

  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. படிவத்தின் மேற்புறத்தில் பதில்களைக் கிளிக் செய்யவும்.
  3. தனிப்பட்டது என்பதைக் க்ளிக் செய்யவும்.
  4. பதில்களுக்கு இடையே நகர்த்துவதற்கு முந்தையது முந்தையது அல்லது அடுத்து அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

கவனத்திற்கு: பதில்களின் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்க, கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.

விரிதாளில் எல்லாப் பதில்களையும் பார்த்தல்

விரிதாளில் எல்லாப் பதில்களையும் எளிமையாகப் பார்த்தல்.

  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. படிவத்தின் மேற்புறத்தில் உள்ள பதில்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள Sheets உடன் இணை Google Sheetsஸுக்கு ஏற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
முக்கியம்: கூட்டுப்பணி செய்பவருடன் படிவத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் எனில், அவருக்குப் படிவத்தின் இணைக்கப்பட்ட விரிதாளுக்கான அணுகலும் இருக்கலாம். கூட்டுப்பணி செய்பவரை நீக்க விரும்பினால், படிவத்தில் இருந்தும் விரிதாளில் இருந்தும் தனித்தனியே நீக்க வேண்டும்.
எல்லாப் பதில்களையும் CSV கோப்பாகப் பதிவிறக்குதல்
  • Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  • படிவத்தின் மேற்புறத்தில் பதில்களைக் கிளிக் செய்யவும்.
  • மேலும் மேலும் அதன் பிறகு பதில்களைப் பதிவிறக்கு (.csv) என்பதைக் கிளிக் செய்யவும்.

பதில்களை நிர்வகித்தல்

பதில் தொடர்பான அறிவிப்புகளை இயக்குதல்/முடக்குதல்

  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. படிவத்தின் மேலே உள்ள பதில்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலும் மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. புதிய பதில்கள் குறித்த மின்னஞ்சல் அறிவிப்புகளை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: மேலும் அறிவிப்பு விருப்பங்களைப் பெறவும் பதிலளிப்பவர்களைத் தொடர்புகொள்வதற்காகப் பிரத்தியேக மின்னஞ்சல்களை அனுப்பவும் படிவ அறிவுப்புகளுக்கான செருகு நிரலைப் பதிவிறக்குங்கள்.
 

மேலும் விருப்பங்கள்

பதில்களைச் சேகரிப்பதை நிறுத்துதல்
  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள பதில்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இயக்கத்திலிருக்கும் "பதில்களை ஏற்கும்" அம்சத்தை முடக்கவும்.

இதை முடக்கிய பிறகு "பதில்கள்" தாவலில் "பதில்களை ஏற்க மறுக்கும்" எனும் மெசேஜ் காட்டப்படும்.

பதில் அளிப்பவர்களின் மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரித்தல்

உங்கள் படிவத்தைப் பூர்த்திசெய்யும் நபர்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும். உங்கள் கருத்துக்கணிப்பில் ஒருவர் பங்கேற்கும்போது படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன் அவர் தன்னுடைய மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும்.

சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரித்தல்

முக்கியம்: பதிலளிப்பவர்கள் அவர்கள் அளிக்கும் பதிலுடன் தங்கள் Google கணக்கு மின்னஞ்சல் முகவரி சேகரிக்கப்படலாமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். படிவத்தின் அனைத்து பக்கங்களிலும் இந்த உறுதிப்படுத்தல் காட்டப்படும்.

  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “பதில்கள்” என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை Down arrow கிளிக் செய்யவும்.
  4. "மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரி" என்பதற்குக் கீழே, சரிபார்க்கப்பட்டது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

மின்னஞ்சல் முகவரிகளை நீங்களே சேகரித்தல்

  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “பதில்கள்” என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை Down arrow கிளிக் செய்யவும்.
  4. "மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரி" என்பதற்குக் கீழே, பதிலளிப்பவர் உள்ளீடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Google Formsஸில் இருந்து விளக்கப்படங்களை நகலெடுத்து ஒட்டுதல்

உங்கள் படிவம் "பதில்கள்" பிரிவில் விளக்கப்படங்களை உருவாக்கினால் அவற்றை நகலெடுத்து பிற கோப்புகளில் ஒட்ட முடியும்.

  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. பதில்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. விளக்கப்படத்தின் மேல் வலதுபுறத்தில் நகலெடு Make a copy என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. விரும்பும் இடத்தில் விளக்கப்படத்தை ஒட்டவும்.

உதவிக்குறிப்பு: விளக்கப்படத்தை நகலெடுத்து Google Docs, Slides, Drawings ஆகியவற்றில் ஒட்டினால், அது ஒட்டப்படும் ஆவணம், விளக்கக்காட்சி, வரைபடம் ஆகியவற்றில் இருந்து நேரடியாக விளக்கப்படத்தைத் திருத்தலாம் (ஆவணம், விளக்கக்காட்சி, வரைபடம், படிவம் ஆகியவற்றில் திருத்துவதற்கான அணுகல் இருக்கும்வரை).

பதில் பெற்றுக்கொண்டதை உறுதிசெய்யும் மின்னஞ்சல்களை அனுப்புதல்

பதிலளிப்பவரின் மின்னஞ்சல்களை நீங்கள் சேகரித்தால் பதில்களின் நகலைப் பதிலளிப்பவர்களுக்கு அனுப்ப வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம்.

  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. படிவத்தின் மேலே உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரி" என்பதை இயக்க இவற்றில் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல் தொகுப்பிற்கு, சரிபார்க்கப்பட்டவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
    • நேரடி மின்னஞ்சல் தொகுப்பிற்கு, பதிலளிப்பவர் உள்ளீடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  4. “பதில்கள்” என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை Down arrow கிளிக் செய்யவும்.
  5. “பதிலளிப்பவர்கள் தரும் பதிலின் நகலை அவர்களுக்கு அனுப்பு” என்பதற்கு அடுத்துள்ள கோரினால் மட்டும் அல்லது எப்போதும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உதவிக்குறிப்பு: சில சூழல்களில், ஸ்பேம் வடிப்பான்கள் அல்லது தவறான பயன்பாட்டிற்கு எதிரான பிற நடவடிக்கைகளால் பதில் பெற்றதை உறுதிசெய்யும் மின்னஞ்சல்களைப் பதிலளிப்பவர்கள் பெற முடியாமல் போகலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1150545517219155733
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false