தகுதிபெறும் பணி அல்லது பள்ளிக் கணக்குகளில் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும். இப்போது நீங்கள் உள்நுழைந்திருக்கவில்லை. பணி மற்றும் பள்ளிக் கணக்குகள் குறித்து மேலும் அறிக.
கம்ப்யூட்டரில் இருந்து கேலெண்டர் நிகழ்வின் வரைவை உருவாக்கி அதை விரைவாக Google Calendarருக்கு அனுப்ப Google Docsஸைப் பயன்படுத்தலாம்.
Google Docsஸில் கேலெண்டர் நிகழ்வின் வரைவுகளை உருவாக்கிப் பயன்படுத்துதல்
- கம்ப்யூட்டரில் Google ஆவணத்தைத் திறக்கவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள செருகு பில்டிங் பிளாக்குகள் கேலெண்டர் நிகழ்வின் வரைவு என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆவணத்தில் "@கேலெண்டர் நிகழ்வின் வரைவு" என டைப் செய்து Enter பட்டனைத் தட்டியும் இதைச் செய்யலாம்.
- "விருந்தினர்கள்" புலத்தில் நபர்களைச் சேர்க்க "@" என டைப் செய்து உங்கள் தொடர்புகளைத் தேடவும் அல்லது மின்னஞ்சல் முகவரிகளை டைப் செய்யவும்.
- நிகழ்வின் தலைப்பு, தொடங்கும் நேரம், முடியும் நேரம், இருப்பிடம், விளக்கம் ஆகியவற்றைக் கேலெண்டர் நிகழ்வில் சேர்க்கலாம்.
- உதவிக்குறிப்பு: ஆவணத்தில் பிறருடன் சேர்ந்தும் கேலெண்டர் நிகழ்வின் வரைவை உருவாக்கலாம். ஆவணத்திற்கான அணுகலைப் பகிர்வது எப்படி என்பதைப் பற்றி மேலும் அறிக.
Google Calendarரில் கேலெண்டர் நிகழ்வின் வரைவை உருவாக்கி அதன் மாதிரிக்காட்சியைப் பார்த்தல்
- கேலெண்டர் நிகழ்வின் வரைவுக்கு மேல் இடதுபுறத்தில் உள்ள, நிகழ்வின் வரைவை Calendarருக்கு அனுப்பு ஐகானைக் கிளிக் செய்யவும்.
- Calendar சாளரத்தில் உங்கள் நிகழ்வுக்கான கூடுதல் மாற்றங்களைச் செய்யலாம்.
- இவற்றைச் செய்த பிறகு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- முக்கியம்: நீங்கள் உள்நுழைந்துள்ள கணக்கில் இருந்து மட்டுமே கேலெண்டர் நிகழ்வு உருவாக்கப்படும்.