கல்வி, ஆவணப்படம், அறிவியல் அல்லது கலை நோக்கம் கொண்ட உள்ளடக்கத்திற்கான விதிவிலக்குகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

உள்ளடக்கத்தை உருவாக்கவும் பிறருடன் சேர்ந்து கூட்டுப்பணியாற்றவும் பயனர்களுக்கு உதவும் வகையில் Google Drive, Docs, Sheets, Slides, Forms, Sites ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன. 

Google தயாரிப்புகளைப் பயன்படுத்தும் அனைவருக்கும் திருப்திகரமான அனுபவத்தைத் தொடர்ந்து வழங்குவதில், தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்கான திட்டக் கொள்கைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 

உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை மீறியிருப்பதை நாங்கள் உறுதிசெய்தால் அந்தக் கொள்கைகளின்படி நடவடிக்கை எடுப்போம். அதாவது:

  • உள்ளடக்கத்திற்கான அணுகல் கட்டுப்படுத்தப்படலாம் 
  • உள்ளடக்கம் அகற்றப்படலாம்
  • தீவிரமான கொள்கை மீறல்களுக்கு, Google தயாரிப்புகளுக்கான பயனர் அணுகல் வரம்பிடப்படலாம் அல்லது அகற்றப்படலாம்  

கல்வி, ஆவணப்படம், அறிவியல் அல்லது கலை (Educational, Documentary, Scientific, or Artistic - EDSA) சார்ந்த உள்ளடக்கத்திற்கு இந்தக் கொள்கைகளில் நாங்கள் சில விதிவிலக்குகளை வழங்கக்கூடும்.

உள்ளடக்கம் EDSA சார்ந்ததாகத் தகுதிபெறுகிறதா என்பதை மதிப்பிடுதல்

உங்கள் உள்ளடக்கம் EDSA விதிவிலக்கிற்குத் தகுதிபெறுகிறதா என்பதைத் தீர்மானிக்க உள்ளடக்கத்தின் சூழலையும் நோக்கத்தையும் நாங்கள் மதிப்பீடு செய்வோம். 

உள்ளடக்கம் ESDA விதிவிலக்கிற்குத் தகுதிபெறுகிறதா என்பதை நாங்கள் "5 Wகள் மற்றும் ஒரு H" ஃபிரேம்வொர்க்கைப் பயன்படுத்தி மதிப்பிடலாம். அவை: Who (யார்), What (எதை), Where (எங்கு), When (எப்போது), Why (ஏன்), How (எப்படி). 

ஒரு மாற்று நிலைப்பாட்டை வழங்குவது அல்லது மீறும் உள்ளடக்கத்திற்கு மறுப்பு தெரிவிப்பது கூட உள்ளடக்கத்தின் EDSA தன்மையைத் தீர்மானிக்கலாம். 

உள்ளடக்கம் மட்டுமன்றி, கீழ்க்காண்பவை உட்பட பல காரணிகள் உள்ளடக்கம் EDSA விதிவிலக்கிற்குத் தகுதிபெறுகிறதா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகின்றன: 

  • ஃபைல் அல்லது ஃபோல்டரின் தலைப்பு
  • எடிட்டோரியல் வாட்டர்மார்க்குகள்
  • உள்ளடக்கத்தின் எளிதாக அணுகக்கூடிய தன்மை 
    • இணைப்பைக் கொண்டுள்ள எவரும் அணுகத்தக்க ஆவணங்கள் உட்பட பலருடன் பகிரப்படும் உள்ளடக்கம் அதன் உரிமையாளரால் உருவாக்கப்பட்ட சூழலுக்காக மட்டுமன்றி வேறு நோக்கங்களுக்காகவும் பயன்படக்கூடிய தன்மை. 

எனினும், பிராட்காஸ்ட் செக்மெண்ட் அல்லது கல்விக் கட்டுரை பாணியில் காட்டப்படுதல் போன்ற EDSA பண்புகளைக் கொண்டிருப்பதால் மட்டுமே ஓர் உள்ளடக்கம் EDSA சார்ந்தது எனக் கருதப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. 

சில கொள்கைகள் EDSA விதிவிலக்குகளை அனுமதிப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது முக்கியமாகும். இவற்றுக்கு EDSA விதிவிலக்குகள் பொருந்தாது:

  • கணக்கு அபகரிப்பு
  • கணக்கின் செயலற்ற நிலை
  • ஏமாற்றுதல்
  • சிறார் பாலியல் வன்கொடுமை மற்றும் அவர்களைத் தவறாகப் பயன்படுத்துதல்
  • மால்வேர் மற்றும் அதே மாதிரியான தீங்கிழைக்கும் உள்ளடக்கம்
  • ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்படும் பாலியல் ரீதியான உள்ளடக்கம்
  • ஃபிஷிங்
  • ஸ்பேம்
  • சிஸ்டத்தில் குறுக்கிடுதல் மற்றும் தவறான பயன்பாடு

EDSA மதிப்பீடுகளுக்கான உதாரணங்கள்

கீழ்க்காணும் அட்டவணையில் கற்பனையான உள்ளடக்கமும் (பொதுவாகக் கொள்கை மீறலாகக் கருதப்படக்கூடியவை) EDSA விதிவிலக்கைப் பெறுவதற்கான அவற்றின் சாத்தியக்கூறுகளும் வழங்கப்பட்டுள்ளன. 

கொள்கை

EDSA விதிவிலக்கிற்கான வாய்ப்பு

சாத்தியமுள்ள EDSA விதிவிலக்கு

வன்முறை மற்றும் கொடூரமான உள்ளடக்கம்

அதிக வாய்ப்புள்ளது

குண்டுவெடிப்பு ஒன்றின் விளைவாக வெளிப்படையாகத் தெரியும் காயங்களுடன் பாதிக்கப்பட்டவர்களின் படம். சம்பவம் நடந்த நேரம் மற்றும் இடம் குறித்த தகவல்களுடன் நேரடியான படப் பெயர் அதில் உள்ளது. ஆவணப்படம்

ஆபத்தானது மற்றும் சட்டத்திற்குப் புறம்பானது: தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளுதல்

அதிக வாய்ப்புள்ளது

தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வதால் ஏற்படும் தனிப்பட்ட துயரங்களைப் பகிரும் அதே நேரத்தில் அச்செயலை ஊக்குவிக்காத ஆவணம். ஆவணப்படம்

ஆபத்தானது மற்றும் சட்டத்திற்குப் புறம்பானது: ஆபத்தான பொருட்கள்

அதிக வாய்ப்புள்ளது

வெடிபொருட்கள் குறித்து விளக்கும் ஒரு வேதியியல் பாடப்புத்தகம். கல்வி 

வெறுப்பைத் தூண்டும் பேச்சு

அதிக வாய்ப்புள்ளது

வெறுப்பை உண்டாக்கும் ஒரு குழுவின் அணிவகுப்பு வீடியோ. அணிவகுப்பு நடந்த இடம் மற்றும் தேதி பற்றிய விளக்கமான தலைப்புடன் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனத்தின் வாட்டர்மார்க் இடம்பெற்றது. ஆவணப்படம்

வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம்

அதிக வாய்ப்புள்ளது

கிரேக்க வீரர்களின் நிர்வாணப் பாணியிலான பளிங்குச் சிலைகளின் படங்கள். கலை சார்ந்தது 

 

Google Drive, Docs, Sheets, Slides ஆகியவற்றில் தனியுரிமையும் பாதுகாப்பும் 

நீங்கள் பகிர விரும்பாத வரை, Google Drive, Docs, Sheets, Slides ஆகியவற்றில் நீங்கள் சேமிக்கும் உள்ளடக்கம் தனிப்பட்டதாகவே இருக்கும். கூட்டுப்பணி செய்யும் சிலருடன் பகிர்வது முதல், பொதுவில் அணுகத்தக்கதாக மாற்றுவது வரை ஃபைலை நீங்கள் பல வழிகளில் பகிரலாம். 

இணைப்பைக் கொண்டுள்ள எவரும் ஃபைல்களை அணுக முடியும்போது உங்கள் நோக்கம் அல்லது எண்ணத்திற்கு மாறாக உள்ளடக்கம் பயன்படுத்தப்படலாம் அல்லது புரிந்துகொள்ளப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

முக்கியம்: உங்கள் உள்ளடக்கத்தை எப்போதும் கவனமாக லேபிளிடுவதையும் சூழலுக்கு ஏற்ப உருவாக்குவதையும் உறுதிசெய்துகொள்ளுங்கள். குறிப்பாக, பிறருடன் பகிரும்போது இது மிகவும் முக்கியமாகும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பகிர்வதை நிறுத்தலாம் வரம்பிடலாம் மாற்றலாம்.

மீறல்கள் குறித்துப் புகாரளிப்பது மற்றும் மறுபரிசீலனைக்குக் கோருவது எப்படி?

உங்கள் ஃபைல் Googleளின் சேவை விதிமுறைகளையோ திட்டக் கொள்கைகளையோ மீறியுள்ளதாக நீங்கள் அறிவிப்பைப் பெற்று, அது தவறு எனக் கருதினால் மறுபரிசீலனைக்குக் கோரலாம். மீறலை மதிப்பாய்வு செய்யக் கோருதல்.

எங்கள் கொள்கைகளை மீறுவதுபோல் தெரியும் உள்ளடக்கத்தையும் மதிப்பாய்வு செய்ய நீங்கள் கோரலாம்.


 
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1993651830233702511
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false