வார்த்தைகள், ஆப்ஜெக்ட்டுகள், பின்னணிகள் ஆகியவற்றின் வண்ணத்தை மாற்றுதல்

Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் நீங்கள்:
  • வார்த்தைகள், ஆப்ஜெக்ட்டுகள், பின்னணிகள் ஆகியவற்றின் வண்ணத்தை மாற்றலாம்
  • HEX மதிப்புகள், RGB மதிப்புகள், ஐ-டிராப்பர் கருவி போன்றவற்றின் மூலம் பிரத்தியேக வண்ணங்களை உருவாக்கலாம்

வார்த்தையின் வண்ணத்தை மாற்றுதல் அல்லது வார்த்தையைத் தனிப்படுத்திக் காட்டுதல்

  1. கம்ப்யூட்டரில் இந்தத் தயாரிப்புகளில் உள்ள ஒரு ஃபைலைத் திறக்கவும்:
  2. திருத்த விரும்பும் வார்த்தையைத் தனிப்படுத்திக் காட்டவும். 
  3. இதற்கு:
    • வார்த்தைகளின் வண்ணத்தை மாற்ற, கருவிப்பெட்டியில் இருந்து வார்த்தையின் வண்ணம் வண்ண உரை என்பதைக் கிளிக் செய்யவும். 
    • வார்த்தைகளின் தனிப்படுத்தல் வண்ணத்தை மாற்ற, கருவிப்பெட்டியில் இருந்து ஹைலைட் வண்ணம் உரையை ஹைலைட் செய் என்பதைக் கிளிக் செய்யவும். Google Docs, Slides ஆகியவற்றில் மட்டுமே இதைச் செய்ய முடியும்.
  4. முன்னமைவு வண்ணத்தைத் தேர்வுசெய்யவும் அல்லது பிரத்தியேக வண்ணத்தை உருவாக்கவும்.

கலங்கள், அட்டவணைகள், வாக்கியப் பெட்டிகள் ஆகியவற்றின் வண்ணத்தை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் இந்தத் தயாரிப்புகளில் உள்ள ஒரு ஃபைலைத் திறக்கவும்:
  2. வாக்கியப் பெட்டியைக் கிளிக் செய்யவும் அல்லது நீங்கள் திருத்த விரும்பும் கலங்களைத் தனிப்படுத்திக் காட்டவும்
  3. இதற்கு:
    • கலங்கள் அல்லது பெட்டியின் நிரப்பு வண்ணத்தை மாற்ற, கருவிப்பட்டியில் இருந்து நிரப்பு வண்ணம் நிரப்பு வண்ணம் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • கலங்கள் அல்லது பெட்டியின் பார்டர் வண்ணத்தை மாற்ற, கருவிப்பட்டியில் இருந்து பார்டர் வண்ணம் பார்டர் வண்ணம் என்பதைக் கிளிக் செய்யவும்.
      • Google Sheetsஸில் பார்டர்கள் பார்டர்கள் அதன் பிறகு பார்டர் வண்ணம் பார்டர் வண்ணம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. முன்னமைவு வண்ணத்தைத் தேர்வுசெய்யவும் அல்லது பிரத்தியேக வண்ணத்தை உருவாக்கவும்.

பிரத்தியேக வண்ணத்தை உருவாக்குதல்

ஹெக்ஸ் அல்லது RGB மதிப்புகளை வழங்கி ஒரு பிரத்தியேக வண்ணத்தை உருவாக்கலாம் அல்லது திரையில் ஏதேனும் ஓர் இடத்திலிருந்து வண்ணத்தைத் தேர்ந்தெடுக்க ஐ-டிராப்பர் கருவியைப் பயன்படுத்தலாம். பிரத்தியேக வண்ணத்தை உருவாக்கியபிறகு அந்த ஃபைலில் எங்கு வேண்டுமானாலும் அந்த வண்ணத்தைப் பயன்படுத்த முடியும்.

பிரத்தியேக வண்ணத்தை உருவாக்க ஹெக்ஸ் அல்லது RGB மதிப்புகளைப் பயன்படுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் இந்தத் தயாரிப்புகளில் உள்ள ஒரு ஃபைலைத் திறக்கவும்:
  2. கருவிப்பட்டியில் இருந்து வார்த்தையின் வண்ணம் வண்ண உரை அல்லது வண்ண விருப்பங்கள் இருக்கும் வேறொரு கருவியைக் கிளிக் செய்யவும். 
  3. “பிரத்தியேகமாக்கு” என்பதற்குக் கீழேயுள்ள பிரத்தியேக வண்ணத்தைச் சேர் Add a custom color என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் விரும்பும் வண்ணத்திற்கான ஹெக்ஸ் குறியீட்டையோ RGB மதிப்புகளையோ டைப் செய்யவும்.
  5. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரத்தியேக வண்ணத்தைத் தேர்ந்தெடுக்க ஐ-டிராப்பர் கருவியைப் பயன்படுத்துதல்

முக்கியம்: Chrome மற்றும் EDGE உலாவிகளில் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

  1. கம்ப்யூட்டரில் இந்தத் தயாரிப்புகளில் உள்ள ஒரு ஃபைலைத் திறக்கவும்:
  2. கருவிப்பட்டியில் இருந்து வார்த்தையின் வண்ணம் வண்ண உரை அல்லது வண்ண விருப்பங்கள் இருக்கும் வேறொரு கருவியைக் கிளிக் செய்யவும். 
  3. “பிரத்தியேகமாக்கு” என்பதற்குக் கீழேயுள்ள ஒரு பிரத்தியேக வண்ணத்தை Pick a custom color தேர்வுசெய்யவும்.
  4. திரையில் உள்ள ஏதேனும் ஒரு வண்ணத்தைக் கிளிக் செய்ய ஐ-டிராப்பர் கருவியைப் பயன்படுத்தவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12147642897466157863
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false