காலப்பதிவுக் காட்சியை உருவாக்குதல் மற்றும் திருத்துதல்

காலப்பதிவுக் காட்சியைப் பயன்படுத்தி பணிகளை எளிதாகவும் வேகமாகவும் கண்காணிக்கலாம், காட்சி வடிவில் பார்க்கலாம்.

காலப்பதிவுக் காட்சி என்பது Sheetsஸில் கிடைக்கும் ஒரு பங்கேற்கத்தக்கக் காட்சி வடிவ லேயராகும். இவற்றைப் போன்ற பல்வேறு திட்டப்பணிகளை நிர்வகிக்க இது உங்களுக்கு உதவும்:

  • திட்டப்பணியின் பணிகள் 
  • மார்க்கெட்டிங் விளம்பரங்கள்
  • திட்ட அட்டவணைகள்
  • குழுக்களுக்கு இடையிலான கூட்டுப்பணிகள்
  • ஏதேனும் எதிர்காலத் திட்டங்கள்

தகுதிநிலை

இந்த Workspace பதிப்புகளில் காலப்பதிவுக் காட்சியைப் பயன்படுத்தலாம்:
  • Essentials
  • Business Standard
  • Business Plus
  • Enterprise Essentials
  • Enterprise Starter
  • Enterprise Standard
  • Enterprise Plus
  • Education Fundamentals
  • Education Standard
  • Education Plus
  • Business Starter
  • Frontline

உங்கள் தரவைத் தயார்செய்தல்

முக்கியம்: காலப்பதிவுக் காட்சியை உருவாக்க உங்களிடம் உள்ள தரவில் குறைந்தது ஒரு நெடுவரிசையாவது தேதி வடிவமைப்பில் இருக்க வேண்டும். தேதியைக் கொண்டுள்ள நெடுவரிசைகளில் சூத்திரங்களைப் பயன்படுத்தினால் அவற்றின் வெளியீடுகள், தேதி மதிப்புகளாக இருக்க வேண்டும்.

முழுமையான காலப்பதிவுக் காட்சியை உருவாக்க இவற்றுக்கான தனிப்பட்ட நெடுவரிசைகளைச் சேர்க்க வேண்டும்:

  • கார்டு தலைப்பு: ஒவ்வொரு பணிக்குமான பெயர்
  • தொடங்கும் தேதி: தேதி வடிவமைப்பில் தொடங்கும் தேதிகள்
  • முடியும் தேதி: தேதி வடிவமைப்பில் உள்ள முடியும் தேதிகள்
  • கார்டு விவரம்: ஒவ்வொரு பணியின் சுருக்கவிவரம்
  • கால அளவு: உங்கள் பணிகள் நீடித்திருக்க வேண்டிய கால அளவு

உதவிக்குறிப்பு: கால அளவை நாட்களின் எண்ணிக்கையாகவோ மணிநேரங்கள், நிமிடங்கள், வினாடிகள் (hh:mm:ss) போன்ற வடிவங்களிலோ வழங்கவும்.

  • வார இறுதிகளைச் சேர்க்கவும்: முடியும் தேதிக்குப் பதிலாகக் கால அளவைப் பயன்படுத்தினால் வார இறுதிகள் இயக்கப்படும். கால அளவில் இருந்து வார இறுதிகளை அகற்ற வார இறுதிகளைச் சேர் என்பதைத் தேர்வுநீக்கவும்.

உதவிக்குறிப்பு: தொடங்கும் தேதி, முடியும் தேதி ஆகியவற்றில், வெளியீடு சரியான மதிப்பு வகையில் இருப்பதை உறுதிசெய்ய DATEVALUE சூத்திரம் உதவும்.

Timeline overview explained

விரிதாளில் காலப்பதிவுக் காட்சியை உருவாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Sheets மெனுவின் மேல்புறத்தில் உள்ள சேர் அதன் பிறகு காலப்பதிவு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. தரவு வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: பரிந்துரைக்கப்படும் தரவு வரம்பில் இருந்தும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

கவனத்திற்கு: காலப்பதிவுக் காட்சி அனுபவத்தை இப்போது உங்கள் Android அல்லது iOS மொபைல் சாதனத்தில் பார்க்கலாம்.

காலப்பதிவுக் காட்சியைத் திருத்துதல்

நெடுவரிசையின்படி காலப்பதிவுக் காட்சியைத் திருத்துதல்
  1. கம்ப்யூட்டரில் நீங்கள் உருவாக்கிய "காலப்பதிவுக் காட்சி" பக்கத்தில் அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. பின்வரும் விருப்பத்தேர்வுகளில் இருந்து பயன்படுத்துவதற்கான நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்:

அவசியமான புலங்கள்:

  • கார்டு தலைப்பு: ஒவ்வொரு பணிக்குமான பெயர்.
  • தரவு வரம்பு: காலப்பதிவுக் காட்சியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தரவு.
  • தொடங்கும் தேதி: தேதி வடிவமைப்பில் உள்ள தொடங்கும் தேதிகள்.
  • முடியும் தேதி: தேதி வடிவமைப்பில் உள்ள முடியும் தேதிகள்.

முக்கியம்: ஒவ்வொரு பணியின் தொடங்கும் தேதியும் முடியும் தேதிக்கு முன்னதாக இருக்க வேண்டும். இல்லையெனில் கார்டில் கால அளவு காட்டப்படாது. ஒரு நாள் வரம்பை மட்டுமே காட்டும் கார்டுகளைப் பிழையறிந்து திருத்துவது எப்படி என அறிக.

விருப்பத்திற்குட்பட்ட புலங்கள்:

  • கார்டு வண்ணம்: நெடுவரிசையை உங்கள் கார்டின் பின்னணிக்கான மூலமாகத் தேர்வுசெய்த பிறகே 'காலப்பதிவுக் காட்சியில்' கார்டு வண்ணம் தோன்றும். நெடுவரிசையின் வண்ணத்தை இவற்றின் மூலம் பெறலாம்:
    • தரவில் ஒரு நெடுவரிசைக்கு நீங்கள் நேரடியாக அமைத்த கலப் பின்னணி நிறம்.
    • தரவில் உள்ள நெடுவரிசையின் நிபந்தனை வடிவமைப்பு.

உதவிக்குறிப்பு: நேரடியாக "காலப்பதிவுக் காட்சி" பக்கத்தில் இருந்தும் குறிப்பிட்ட கார்டின் பின்னணியை மாற்றலாம். குறிப்பிட்ட கார்டுகளைத் திருத்துவது எப்படி என அறிக.

  • கார்டு விவரம்: ஒவ்வொரு கார்டின் விளக்கம்.
  • கார்டு குழு: ஒரு நெடுவரிசையின் அடிப்படையில் ஒரே "காலப்பதிவுக் காட்சி" வரிசையில் இருக்கும் பல கார்டுகளைக் குழுவாக்குதல்.
Timeline overview explained
குறிப்பிட்ட கார்டுகளைத் திருத்துதல் அல்லது அணுகுதல்
  1. 'காலப்பதிவுக் காட்சியில்' நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உதவிக்குறிப்பு: நீங்கள் தேர்ந்தெடுத்த வரம்பில் உள்ள ஒரு கலத்தில் URLலை டைப் செய்தால் அது தானாகவே லிங்க்காக மாறும்.
  2. கார்டு விவரங்கள் சாளரத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ள தரவைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
    • இது உங்கள் காலப்பதிவுக் காட்சியின் மூலத் தரவைத் திறக்கும்.
  3. மூலத் தரவுப் பக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசையைத் திருத்தவும்.
குறிப்பிட்ட கார்டுக்கான பின்னணி நிறத்தைத் திருத்துதல்

முக்கியம்: ஆதாரத் தரவுக்கு நிபந்தனை வடிவமைப்பைப் பயன்படுத்த வேண்டாம். அதைப் பயன்படுத்தினால் கார்டின் வண்ணத்தை மாற்ற முடியாது.

  1. திருத்த விரும்பும் கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. இவற்றில் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • முன்னமைவுப் பட்டியலைப் பயன்படுத்தி பின்புல வண்ணத்தை மாற்ற கார்டு வண்ணம் என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் எந்த நெடுவரிசையில் இருந்து வண்ணத்தைப் பெற வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுக்கவும்.

முக்கியம்: 'காலப்பதிவுக் காட்சியில்' கார்டின் வண்ணத்தை மாற்றினால் மூலத் தரவிலும் வண்ணம் மாறும்.

  • வண்ண ஸ்பெக்ட்ரமைப் பயன்படுத்தி பின்புற வண்ணத்தை மாற்ற பிரத்தியேகமாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

தரவு மூல வடிவமைப்பின்படி குறிப்பிட்ட பின்னணி நிறத்தைத் திருத்துதல்

முக்கியம்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் கார்டு வண்ணத்தில் நிபந்தனை வடிவமைப்பையும் பயன்படுத்தலாம்.

  1. உங்கள் விரிதாளின் கீழே இருந்து காலப்பதிவின் மூலத் தரவைக் கொண்ட பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. காலப்பதிவு அமைப்புகளில் கார்டு வண்ணம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வண்ணத்தைப் பெற வேண்டிய நெடுவரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. நெடுவரிசையில் உள்ள கலங்களின் பின்னணி வண்ணத்தை மாற்றவும். "காலப்பதிவுக் காட்சி" பக்கத்தில் கார்டு புதிய நிறத்திற்கு மாறும்.

காலப்பதிவுக் காட்சியில் ஏற்படும் சிக்கல்களைப் பிழையறிந்துத் திருத்துதல்

எதிர்பாராத ஒற்றை நாள் வரம்பு மட்டுமே கார்டில் காட்டப்படுகிறது

உங்கள் கார்டின் தேதி வரம்பு ஒரு நாளை மட்டுமே காட்டினால் அதற்கு இவை காரணங்களாக இருக்கலாம்:

  • ஏற்கத்தக்க தேதி வடிவமைப்பில் தரவு இல்லாதது.
  • தொடங்கும் தேதிகளும் முடியும் தேதிகளும் ஒன்றாக இருப்பது.

பிழைச் செய்திகள்

உங்கள் காலப்பதிவுக் காட்சியில் பிழைச் செய்தி காட்டப்பட்டால் தரவைத் திருத்தவும், காலப்பதிவுக் காட்சியைச் சரியாகக் காட்டவும் அந்த பிழைச் செய்தியில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

தொடர்புடைய தகவல்கள்

காலப்பதிவுக் காட்சியைப் பிரத்தியேகமாக்குதல்.

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4044285811405718685
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false