பைவட் டேபிள்களை உருவாக்குதல் & பயன்படுத்துதல்

பணி அல்லது பள்ளிக்கான Google Docsஸில் இருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

பெரிய அளவிலான தரவுத் தொகுப்பைச் சுருக்குவதற்கோ தரவுப் புள்ளிகளுக்கு இடையேயான தொடர்புகளைப் பார்ப்பதற்கோ பைவட் டேபிள்களைப் பயன்படுத்த முடியும். உதாரணமாக பைவட் டேபிளைக் கொண்டு குறிப்பிட்ட மாதத்தில் எந்த விற்பனையாளர் அதிக வருவாயைப் பெற்றார் என்பதைப் பார்க்க முடியும்.

பைவட் டேபிள்களைச் சேர்த்தல் அல்லது திருத்துதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் விரிதாளைத் திறக்கவும்.
  2. நீங்கள் பயன்படுத்த விரும்பும் மூலத்தரவுடன் கூடிய கலங்களைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியம்: ஒவ்வொரு நெடுவரிசைக்கும் தலைப்பு தேவை.
  3. மேலே உள்ள மெனுவில், சேர் அதன் பிறகு பைவட் அட்டவணை என்பதைக் கிளிக் செய்யவும். பைவட் அட்டவணைத் தாளை ஏற்கெனவே திறக்கவில்லை எனில் அதைக் கிளிக் செய்யவும்.
  4. பக்கவாட்டுப் பேனலில் "வரிசைகள்" அல்லது "நெடுவரிசைகள்" என்பதற்கு அடுத்துள்ள சேர் என்பதைக் கிளிக் செய்து மதிப்பைத் தேர்வுசெய்யவும்.
    • சில நேரங்களில் நீங்கள் தேர்வுசெய்யும் தரவின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் பைவட் அட்டவணைகளைப் பார்ப்பீர்கள். பைவட் அட்டவணையைச் சேர்க்க, "பரிந்துரைக்கப்படுபவை" என்பதற்குக் கீழ் பைவட் அட்டவணையைத் தேர்வுசெய்யவும்.
    • பைவட் அட்டவணையை உருவாக்கும்போது, துல்லியமாகப் பொருந்தும் பைவட் அட்டவணைப் பரிந்துரைகள் தானாகவே செருகப்படும்.
    • பைவட் அட்டவணைப் பரிந்துரைகளை முடக்க:
      1. மேலே உள்ள கருவிகள் அதன் பிறகு தன்னிரப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
      2. பைவட் அட்டவணைப் பரிந்துரைகளை இயக்கு என்பதை முடக்கவும்.
  5. பக்கவாட்டுப் பேனலில் "மதிப்புகள்" என்பதற்கு அடுத்துள்ள சேர் என்பதைக் கிளிக் செய்து வரிசைகளிலோ நெடுவரிசைகளிலோ பார்க்க விரும்பும் மதிப்பைத் தேர்வுசெய்யவும்.
  6. உங்கள் தரவு பட்டியலிடப்படும், வரிசைப்படுத்தப்படும், சுருக்கப்படும் அல்லது வடிகட்டப்படும் விதத்தை மாற்ற முடியும். நீங்கள் மாற்ற விரும்புவதற்கு அடுத்துள்ள, கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.

தரவை மாற்றுதல் அல்லது அகற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. பைவட் டேபிளின் கீழே உள்ள பாப்-அப்பில் திருத்து பட்டனைக் கிளிக் செய்யவும்.
  3. பக்கவாட்டுப் பேனலில் புலங்களை மாற்றவும் அல்லது அகற்றவும்:
    • புலத்தை நகர்த்த அதை மற்றொரு வகைக்கு இழுக்கவும்.
    • புலத்தை அகற்ற, அகற்று அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உங்கள் பைவட் டேபிளில் பயன்படுத்தப்படும் தரவின் வரம்பை மாற்ற தரவு வரம்பைத் தேர்ந்தெடுப்பதற்கான ஐகானை தரவு வரம்பைத் தேர்ந்தெடு கிளிக் செய்யவும்.
    • எல்லா புலங்களையும் அழிக்க, அனைத்தையும் அழி என்பதைக் கிளிக் செய்யவும்.

கவனத்திற்கு: பைவட் டேபிள் பெறப்பட்ட மூலத் தரவைக் கொண்டிருக்கும் கலங்களை நீங்கள் மாற்றும்போதெல்லாம் அது புதுப்பிக்கப்படும்.

கல விவரங்களைப் பார்த்தல்

பைவட் டேபிளில் உள்ள கலத்தை மூலத்தரவுள்ள வரிசைகளில் பார்க்க முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. பைவட் டேபிளின் கீழே உள்ள பாப்-அப்பில் திருத்து பட்டனைக் கிளிக் செய்யவும்.
  3. மேலும் விவரங்களைப் பார்க்க விரும்பும் கலத்தை இரு கிளிக் செய்யவும்.
  4. கலத்தின் மூலத்தரவு அடங்கிய புதிய தாள் காட்டப்படும்.

Calculated fields with SUM or a custom formula

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. பைவட் டேபிளின் கீழே உள்ள பாப்-அப்பில் திருத்து பட்டனைக் கிளிக் செய்யவும்.
  3. பக்கவாட்டுப் பேனலில் "மதிப்புகள்" என்பதற்கு அடுத்துள்ள சேர் என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு கணக்கிடப்பட்ட புலம் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • SUM என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி மதிப்பைக் கணக்கிட: “இதன்படி சுருக்கு” என்பதற்கு அடுத்துள்ள SUM என்பதைக் கிளிக் செய்யவும். 
    • பிரத்தியேகச் சூத்திரத்தைப் பயன்படுத்தி மதிப்பைக் கணக்கிட: காட்டப்படும் புலத்தில் சூத்திரத்தை உள்ளிடவும். பிறகு "இதன்படி சுருக்கு" என்பதற்கு அடுத்துள்ள பிரத்தியேகம் என்பதைக் கிளிக் செய்யவும். 
  4. கீழ் வலதுபுறத்தில் உள்ள சேர் என்பதைக் கிளிக் செய்யவும், புதிய நெடுவரிசை காட்டப்படும்.

உதவிக்குறிப்பு: பிரத்தியேகச் சூத்திரங்களை எழுத இவற்றைப் பயன்படுத்தலாம்:

  • பிற நெடுவரிசைகள், எடுத்துக்காட்டாக =sum(Price)/counta(Product). இதில் "Price", "Product" ஆகியவை பைவட் டேபிள் அல்லது இணைக்கப்பட்ட தாள்களில் இருக்கும் முக்கிய டேபிளில் உள்ள புலங்கள் ஆகும். 
  • Google Sheets செயல்பாடுகள்.

முக்கியம்: புல மதிப்புகளை இடைவெளிகளுடன் பயன்படுத்துகிறீர்கள் எனில் பிரத்தியேகச் சூத்திரத்தில் அவற்றை மேற்கோள்களுக்குள் குறிப்பிடுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக: ="h sdf".

எடுத்துக்காட்டு

நகலெடு

 

தொடர்புடைய கட்டுரைகள்

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14224051403267580963
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false