படிவத்தில் உள்ள வார்த்தைகளின் வடிவமைப்பை மாற்றுதல்

படிவத்தில் உள்ள வார்த்தைகளில் இணைப்புகள், எண்ணிடப்பட்ட பட்டியல்கள், பொட்டுக்குறியிட்ட பட்டியல்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். வார்த்தைகளைத் தடிமனாக்குதல், சாய்வாக்குதல், அடிக்கோடிடுதல் ஆகியவற்றையும் செய்யலாம்.

முக்கியம்: தலைப்புகள், கேள்விகள், விளக்கங்களில் உள்ள வார்த்தைகளின் வடிவமைப்பை மட்டுமே மாற்ற முடியும். பதில்களில் உள்ள வார்த்தைகளின் வடிவமைப்பை மாற்ற முடியாது.

வார்த்தைகளைத் தடிமனாக்குதல், சாய்வாக்குதல், அடிக்கோடிடுதல்
  1. கம்ப்யூட்டரில் Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. திருத்த விரும்பும் பகுதியைக் கிளிக் செய்யவும்.
  3. மாற்ற விரும்பும் வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. வார்த்தைகளின் வடிவமைப்பை மாற்றவும்.
    • தடிமனாக்க: தடிமன் தடிமன் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • சாய்வாக்க: சாய்வு சாய்வாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • அடிக்கோடிட: அடிக்கோடு அடிக்கோடிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
எண்ணிடப்பட்ட அல்லது பொட்டுக்குறியிட்ட பட்டியலைச் சேர்த்தல்
  1. கம்ப்யூட்டரில் Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. பட்டியலைச் சேர்க்க விரும்பும் விளக்கத்தைக் கிளிக் செய்யவும்.
  3. பட்டியலைத் தேர்வுசெய்யவும்:
    • எண்ணிடப்பட்ட பட்டியலைச் சேர்க்க: எண்ணிடப்பட்ட பட்டியல் எண்ணிடப்பட்ட பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • பொட்டுக்குறியிட்ட பட்டியலைச் சேர்க்க: பொட்டுக்குறியிட்ட பட்டியல் பொட்டுக்குறியிட்ட பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. விருப்பம் காட்டப்படவில்லை எனில் மேலும் மேலும் அதன் பிறகு விளக்கம் என்பதைக் கிளிக் செய்யவும்.
இணைப்புகளைச் சேர்த்தல், திருத்துதல், அகற்றுதல்

இணைப்பைச் சேர்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. திருத்த விரும்பும் பகுதியைக் கிளிக் செய்யவும்.
  3. இணைப்பு இருக்க வேண்டிய இடத்தைக் கிளிக் செய்யவும் அல்லது இணைப்புச் சேர்க்கப்பட வேண்டிய வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. இணைப்பைச் செருகு Insert link என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. "இதனுடன் இணை" என்பதற்குக் கீழ், URL அல்லது மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும் இல்லையெனில் இணைக்க விரும்பும் இணையதளத்தைத் தேடிக் கண்டறியவும்.
  6. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

இணைப்புகளை மாற்றுதல் அல்லது அகற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. புதுப்பிக்க விரும்பும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
    • மாற்ற: இணைப்பைத் திருத்துக மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
    • அகற்ற: இணைப்பை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
வார்த்தையின் வடிவமைப்பை அகற்றுதல்
  1. கம்ப்யூட்டரில் Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. திருத்த விரும்பும் பகுதியைக் கிளிக் செய்யவும்.
  3. மாற்ற விரும்பும் வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. வடிவமைப்பை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3355460746618979692
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false