Google Docsஸில் இருந்து பணிகளை ஒதுக்குதல்

தகுதியான பணி அல்லது பள்ளிக் கணக்குகளில் மட்டுமே Docsஸில் Tasks அம்சம் கிடைக்கும். இப்போது நீங்கள் உள்நுழைந்திருக்கவில்லை. பணி மற்றும் பள்ளிக் கணக்குகள் குறித்து மேலும் அறிக.

பணிக் கணக்கில் உள்நுழைக

தகுதியான பணி அல்லது பள்ளிக் கணக்கில் Google Docsஸை நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கும் உங்கள் டொமைனில் உள்ள மற்ற பயனர்களுக்கும் பணிகளை ஒதுக்கலாம். பயனருக்கு நீங்கள் ஒதுக்கும் பணிகள் அவரின் தனிப்பட்ட Tasks பட்டியலில் காட்டப்படும். பகிர்ந்த பணிகளில் எப்படிப் பணிபுரிவது என்பது குறித்து மேலும் அறிக.

Google Docsஸில் பணியைப் பொறுப்புமாற்றம் செய்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸிற்குச் சென்று ஓர் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. ஆவணத்தில் @பணி என டைப் செய்து Enter அழுத்தவும்.
  3. பாப்-அப் சாளரத்தில் பணியின் தலைப்பை டைப் செய்யவும்.
    1. சரிபார்ப்புப் பட்டியலில் இருந்தும் நீங்கள் பணியை உருவாக்கலாம்.
      1. ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
        • வடிவமைப்பு அதன் பிறகு பொட்டுக்குறிகள் & எண்ணிடல் அதன் பிறகு சரிபார்ப்புப் பட்டியல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
        • ஆவணத்தில் @சரிபார்ப்புப் பட்டியல் என டைப் செய்து Enter பட்டனை அழுத்தவும்.
      2. சரிபார்ப்புப் பட்டியலில் ஒரு பணியை வழங்கவும்.
      3. சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதற்கு இடதுபுறம் உள்ள ‘Tasksஸில் சேர்’ என்பதைக் கிளிக் செய்யவும். பாப்-அப் சாளரம் காட்டப்படும்.
  4. நீங்கள் பணியைப் பொறுப்புமாற்றம் செய்ய விரும்புபவரின் பெயரை, “பொறுப்புமாற்றம் பெறுபவர்” என்ற புலத்தில் டைப் செய்யவும்.
    • உங்களுக்கும் உங்கள் டொமைனில் உள்ள மற்ற பயனர்களுக்கும் நீங்கள் பணியைப் பொறுப்புமாற்றம் செய்யலாம்.
  5. விருப்பத்திற்குரியது: பணிக்குத் தேதியை அமைக்க, தேதி என்பதைக் கிளிக் செய்து கேலெண்டரில் இருந்து தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. பணியை ஒதுக்க சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

முக்கியம்:

  • நீங்கள் ஒருவருக்குப் பணியைப் பொறுப்புமாற்றம் செய்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் அவர் ஒரு மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுவார். பணிக்குத் தேதியை அமைத்திருந்தால் அவரால் அந்தப் பணியை அவரின் தனிப்பட்ட Tasks பட்டியல், Google Calendar ஆகியவற்றில் பார்க்க முடியும். பகிர்ந்த பணிகள் குறித்து மேலும் அறிக.
  • அடையாளம் வெளிப்படுத்தாத பயனர்களால் Google ஆவணத்தில் Tasksஸை ஒதுக்கவோ திருத்தவோ முடியாது.

Docsஸில் பணிகளைப் பார்த்தல் அல்லது திருத்துதல்

  1. பொறுப்புமாற்றம் செய்யப்பட்ட பணிகள் உள்ள ஆவணத்தை Google Docsஸில் திறக்கவும்.
    • ஆவணத்தில் இருந்து பொறுப்புமாற்றம் செய்யப்பட்ட பணிகள் அனைத்தையும் பார்க்க, கருவிகள் அதன் பிறகு Tasks என்பதற்குச் செல்லவும். திரையின் வலதுபுறத்தில் பணிகள் காட்டப்படும். ஆவணத்தில் உள்ள பணிக்குச் செல்ல அதைக் கிளிக் செய்யவும்.
  2. சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதற்கு (ஒதுக்கப்பட்டது) இடதுபுறத்தில் உள்ள ஐகான் மீது கர்சரை வைக்கவும்.
    • பணி முடிக்கப்பட்டால் அதன்மீது குறுக்கே கோடிடப்படும்.
  3. பணியைத் திருத்த:
    • தலைப்பு: தலைப்பை மாற்றச் சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதை டைப் செய்து Tab பட்டனை அழுத்தவும். 
    • பொறுப்புமாற்றம் பெறுபவர் அல்லது பணியின் தேதி: பணி அட்டையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
      • ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட பணியை நீங்கள் இன்னொருவருக்கு மாற்றிவிட்டால் அந்த இருவருமே அதுகுறித்த மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுவார்கள். 

ஒரு பணியை முடிந்ததாக Docsஸில் குறித்தல்

  1. பொறுப்புமாற்றம் செய்யப்பட்ட பணிகள் உள்ள ஆவணத்தை Google Docsஸில் திறக்கவும்.
  2. சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதை (பொறுப்புமாற்றம் செய்யப்பட்டது) கண்டறியவும்.
  3. ஆவணத்தில் உள்ள செக்பாக்ஸைக் கிளிக் செய்யவும்.
    • ஆவணத்தில் பணி முடிந்ததாகக் குறிக்கப்பட்டால் பொறுப்புமாற்றம் பெறுபவரின் தனிப்பட்ட Tasks பட்டியலிலும் அது முடிந்ததாகக் காட்டப்படும். அத்துடன் அவர் அதுகுறித்த மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுவார்.

Docsஸில் பணியை நீக்குதல்

  1. பொறுப்புமாற்றம் செய்யப்பட்ட பணிகள் உள்ள ஆவணத்தை Google Docsஸில் திறக்கவும்.
  2. சரிபார்ப்புப் பட்டியலில் இருப்பதற்கு (ஒதுக்கப்பட்டது) இடதுபுறத்தில் உள்ள ஐகானுக்குச் செல்லவும்.
  3. நீக்கு அகற்றுவதற்கான ஐகான் அதன் பிறகு உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்

  • ஆவணத்தில் பணி நீக்கப்பட்டால் பொறுப்புமாற்றம் பெறுபவரின் தனிப்பட்ட Tasks பட்டியலில் அது காட்டப்படாது. பணி முடிக்கப்படவில்லை எனில் பொறுப்புமாற்றம் பெறுபவர் மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுவார்.
  • முதலில் பணியை நீக்காமல் ஆவணத்தில் இருக்கும் சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதை நீக்கியிருந்தால், பொறுப்புமாற்றம் பெறுபவரின் தனிப்பட்ட Tasks பட்டியலில் அது தொடர்ந்து காட்டப்படும். பணியைப் பார்ப்பதற்கும் நீக்குவதற்கும் கருவிகள் அதன் பிறகு Tasks என்பதைக் கிளிக் செய்யவும்.

Docsஸில் உள்ள பணிகளில் செய்யப்படும் மாற்றங்களை நிர்வகித்தல்

சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதற்கு இடதுபுறத்தில் உள்ள ஐகான் மீது நீலப் புள்ளி காட்டப்படலாம். இது பின்வரும் சமயங்களில் காட்டப்படும்:

  • ஆவணத்தில் யாரேனும் சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதை மாற்றிவிட்டு பணியை மாற்றாதபோது.
  • பொறுப்புமாற்றம் பெறுபவர் Tasksஸில் பணியின் தலைப்பை மாற்றிவிட்டு ஆவணத்தில் உள்ள சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதை மாற்றாதபோது.
  • யாரேனும் ஆவணத்தை முன்பு இருந்ததுபோல் மாற்றும்போது.

சிக்கலைச் சரிசெய்து நீலப் புள்ளியை அகற்ற:

  1. நீலப் புள்ளி இருக்கும் பணிக்குச் செல்லவும்.
  2. பாப்-அப் சாளரத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ள புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: பொறுப்புமாற்றம் பெறுபவருக்கு ஆவணத்தில் திருத்துவதற்கான அணுகல் இல்லாதிருந்து அவர் தனது தனிப்பட்ட Tasks பட்டியலில் ஏதேனும் ஒரு பணியைப் புதுப்பித்தாலும் நீக்கினாலும்கூட பணி ஐகான் மீது நீலப் புள்ளி காட்டப்படக்கூடும்.

  • இதைச் சரிசெய்ய நீலப் புள்ளிக்குச் சென்று ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இதைத் தடுக்க, பொறுப்புமாற்றம் பெறுபவருக்கு ஆவணத்தைத் திருத்துவதற்கான அணுகல் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

பணி தொடர்பான அறிவிப்புகளை மாற்றுதல்

ஆவணத்தில் பணிகள் தொடர்பாக நீங்கள் பெறும் அறிவிப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google ஆவணம், தாள் அல்லது ஸ்லைடைத் திறக்கவும்.
  2. மேல் வலது மூலையில் உள்ள இதுவரையிலான கருத்துகளைத் திற கருத்துகளைத் திற என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அறிவிப்பு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அறிவிப்புகளை எப்போது பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.
    • அனைத்துக் கருத்துகளுக்கும் பணிகளுக்கும்: ஏதேனும் பணிகள் உருவாக்கப்படும்போதோ மாற்றப்படும்போதோ அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.
    • உங்களுக்கான கருத்துகளுக்கும் பணிகளுக்கும்: நீங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் பணிகள் அல்லது கருத்துகளில் பிறர் பதிலளிக்கும்போது அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.
    • எதுவுமில்லை: அந்த ஃபைலுக்கான கருத்துகள் அல்லது பணிகள் குறித்து மின்னஞ்சல்களைப் பெறமாட்டீர்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16690501577979432353
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false