Google Docs, Slides, Drawings ஆகியவற்றில் மார்க்டவுனைப் பயன்படுத்துதல்

Google Docs, Slides, Drawings ஆகியவற்றில் வடிவமைப்பிற்கான உறுப்புகளை உடனே சேர்க்க மார்க்டவுனைப் பயன்படுத்தலாம். மார்க்டவுனைப் பயன்படுத்துவதன் மூலம், வார்த்தைகளை வடிவமைப்பதற்கு இவற்றைச் சேர்க்கலாம்:

  • சாய்வு 
  • தடிமன்
  • அடித்தம்
  • இணைப்புகள்

Google Docsஸில், வெவ்வேறு தலைப்புகளை உருவாக்கவும் மார்க்டவுனைப் பயன்படுத்தலாம்.

மார்க்டவுனை இயக்குதல் அல்லது முடக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docs, Google Slides அல்லது Google Drawingsஸில் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. கருவிகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் என்பதற்குச் செல்லவும்.
  3. “மார்க்டவுனைத் தானாகக் கண்டறி” என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்/தேர்வுநீக்கவும்.

மார்க்டவுனைப் பயன்படுத்தி வார்த்தைகளைச் சாய்வாக்குதல், தடிமனாக்குதல் & அடித்தம் செய்தல்

  • வார்த்தைகளைச் சாய்வாக்க, அவற்றுக்கு முன்னும் பின்னும் ஒற்றை நட்சத்திரக்குறி அல்லது அடிக்கோட்டைச் சேர்க்கவும்.
  • வார்த்தைகளைத் தடிமனாக்க, அவற்றுக்கு முன்னும் பின்னும் இரட்டை நட்சத்திரக்குறிகள் அல்லது அடிக்கோடுகளைச் சேர்க்கவும்.
  • வார்த்தைகளைச் சாய்வாக்கவும் தடிமனாக்கவும், அவற்றுக்கு முன்னும் பின்னும் மூன்று நட்சத்திரக்குறிகள் அல்லது அடிக்கோடுகளைச் சேர்க்கவும்.
  • வார்த்தைகளை அடித்தம் செய்ய, அவற்றுக்கு முன்னும் பின்னும் ஒற்றை அலைகுறியைச் சேர்க்கவும்.

மார்க்டவுனில் உள்ள வார்த்தைகள்

அவற்றின் தோற்றம்

இது _சாய்வான_ வார்த்தை. 

இது *சாய்வான* வார்த்தை.

இது சாய்வான வார்த்தை.

இது __தடிமனான__ வார்த்தை. 

இது **தடிமனான** வார்த்தை.

இது தடிமனான வார்த்தை.

இது ___சாய்வான மற்றும் தடிமனான___ வார்த்தை. 

இது ***சாய்வான மற்றும் தடிமனான*** வார்த்தை.

இது சாய்வான மற்றும் தடிமனான வார்த்தை.

இது ~அடித்தம் செய்யப்பட்ட~ வார்த்தை.

இது அடித்தம் செய்யப்பட்ட வார்த்தை.

மார்க்டவுனைப் பயன்படுத்தி இணைப்புகளைச் சேர்த்தல்

மார்க்டவுனைப் பயன்படுத்தி இணைப்பை உருவாக்குவதற்கான வழிமுறைகள்: 

  1. இணைப்பிற்கான வார்த்தைகளைச் சதுர அடைப்புக்குறிகளுக்குள் வழங்கவும் (எ.கா. [Google Docs]).
  2. அவற்றைத் தொடர்ந்து URLலை அடைப்புக்குறிக்குள் வழங்கவும் (எ.கா. (https://docs.google.com/document/)).
    • கவனத்திற்கு: இணைப்பிற்கான வார்த்தைகளைக் கொண்ட சதுர அடைப்புக்குறிகளுக்கும், URLலைக் கொண்ட அடைப்புக்குறிகளுக்கும் இடையே இடைவெளி இருக்கக்கூடாது.

மார்க்டவுனில் உள்ள வார்த்தைகள்

அவற்றின் தோற்றம்

[Google Docs](https://docs.google.com/document/) என்ற இணைப்பில் ஃபைலைத் திறக்கவும்.

Google Docs என்ற இணைப்பில் ஃபைலைத் திறக்கவும்.

Google Docsஸில் மார்க்டவுனைப் பயன்படுத்தித் தலைப்புகளை உருவாக்குதல்

நீங்கள் Google Docsஸில் இருந்தால் மார்க்டவுனைப் பயன்படுத்தி அதிகபட்சமாக 6 வெவ்வேறு தலைப்புகளையும் உருவாக்கலாம்.

தலைப்பை உருவாக்க,

  1. ஒரு பத்தியின் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கவும்.
  2. தலைப்பு வார்த்தைகளுக்கு முன் எண் குறியீடுகளை (#) சேர்க்கவும். பயன்படுத்தும் எண் குறியீடுகளின் எண்ணிக்கை, தலைப்பின் வரிசைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
    • உதாரணமாக, தலைப்பு 2ஐ உருவாக்க, இரண்டு எண் குறியீடுகளைப் பயன்படுத்தவும் (எ.கா. ## எனது தலைப்பு).
  3. தலைப்பை வழங்கவும்.
    • கவனத்திற்கு: எண் குறியீடுகளுக்கும் தலைப்புக்கும் இடையே கண்டிப்பாக இடைவெளியைச் சேர்க்க வேண்டும்.

மார்க்டவுனில் உள்ள வார்த்தைகள்

அவற்றின் தோற்றம்

# தலைப்பு 1

தலைப்பு 1

## தலைப்பு 2

தலைப்பு 2

### தலைப்பு 3

தலைப்பு 3

#### தலைப்பு 4

தலைப்பு 4

##### தலைப்பு 5

தலைப்பு 5

###### தலைப்பு 6

தலைப்பு 6

தொடர்புடைய கட்டுரைகள்

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6396034500001696106
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false